கடந்த இரு தினங்களாக ஆபரணத் தங்கத்தின் விலையில் எவ்வித மாற்றமும் இன்றி தொடர்வது நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சி தரும் செய்தியாக உள்ளது.
சென்னையில் சனிக்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் ஆபரணத் தங்கத்தின் விலை சற்றே குறைந்திருந்தது. அதன்பின், திங்கள்கிழமை தங்கம் விலை உயரவோ அல்லது குறையவோ இல்லை. அதே நிலையே தற்போது தொடர்கிறது.
தங்கம் விலை நிலவரம் - செவ்வாய்க்கிழமை (7.1.2025):
சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.7,215 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.57.720 ஆகவும் மாற்றமின்றி விற்பனை ஆகிறது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.7,871 ஆகவும், சவரன் விலை ரூ.62,968 ஆகவும் மாற்றமின்றி விற்பனை ஆகிறது.
வெள்ளி விலை:
சென்னையில் இன்று (7.1.2025) 1 கிராம் வெள்ளி விலை ரூ.1 உயர்ந்து ரூ.100 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1,000 உயர்ந்து ரூ.1,00,000 ஆகவும் விற்பனை ஆகிறது.
காரணம் என்ன?
சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. தற்போது டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி கண்டுள்ளது. எனினும், சர்வதேச அளவில் தங்கத்தின் தேவை சற்றே குறைந்துள்ளது, ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றம் இல்லாததற்கு காரணமாக உள்ளது.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.7,215 (மாற்றமில்லை)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.57.720 (மாற்றமில்லை)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.7,871 (மாற்றமில்லை)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.62,968 (மாற்றமில்லை)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.7,215 (மாற்றமில்லை)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.57.720 (மாற்றமில்லை)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.7,871 (மாற்றமில்லை)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.62,968 (மாற்றமில்லை)
Edited by Induja Raghunathan