இஸ்ரோ புதிய தலைவராக வி.நாராயணன் நியமனம்!

03:02 PM Jan 08, 2025 | cyber simman

இந்திய விண்வெளி ஆய்வுக்கழகம், இஸ்ரோவின் புதிய தலைவராக வி.நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார். இஸ்ரோவின் தற்போதைய தலைவர் சோம்நாத்திடம் இருந்து வரும் 14ம் தேதி முதல் அவர் இந்த பொறுப்பை ஏற்க உள்ளார்.

இஸ்ரோவின் அனுபவம் வாய்ந்த விஞ்ஞானிகளில் ஒருவரான வி.நாராயணன் லிக்விட் பிரப்ல்ஷன் அமைப்பின் இயக்குனராக இருந்து வருகிறார். இந்திய விண்வெளி ஆய்வு திட்டத்தில் 40 ஆண்டு கால அனுபவம் உள்ளவர் இஸ்ரோவில் பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்திருக்கிறார்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் 41 ஏவுகனைகளில் 164 திரவ பிரபல்யூஷன் திட்டங்களில் வழிநடத்தியிருக்கிறார். இந்த துறை தொடர்பான ஆய்வு நடவடிக்கைகளையும் வழிநடத்தியிருக்கிறார்.

நாராயணன், ஐஐடி கராக்பூரில் கிரயோஜனிக் பொறியியலில் எம்.டெக் பட்டம் பெற்றிருக்கிறார். பின்னர், இஸ்ரோவில் கிரயோஜனிக் பிரிவில் பணிக்கு சேர்ந்தார். ஐஐடி கராக்பூரில் வெள்ளிப்பதக்கம் பெற்றிப்பதோடு, இந்திய அஸ்ட்ரானாடிகல் கழகத்தின் தங்கப்பதக்கமும் பெற்றிருக்கிறார்.

ஆரம்ப கட்டத்தில் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தில், ஏஎஸ்.எல்வி மற்றும் பிஎஸ்.எல்வி ஆகிய திட்டங்களில் முக்கியப் பங்காற்றியிருக்கிறார். இந்நிலையில், தற்போது நாராயணன் இஸ்ரோவின் புதிய தலைவராக நியமிக்கப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அவரது நியமத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தற்போதைய இஸ்ரோ தலைவரான சோம்நாத், 2022ம் ஆண்டு முதல் இந்த பொறுப்பை வகித்து வருகிறார். அதற்கு முன் அவர் இயக்குனராக இருந்தார். அவரது காலத்தில் இஸ்ரோவில் பல்வேறு முக்கிய விண்வெளி திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. வரும் 14ம் தேதி புதிய தலைவராக நாராயணன் பொறுப்பேற்கிறார்.


Edited by Induja Raghunathan