+

பெண்கள் பாதுகாப்பு பட்டியலில் பெங்களூரு முன்னிலை; சென்னைக்கு 2வது இடம் - ஆய்வில் தகவல்!

இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பான முன்னணி நகரங்கள் பட்டியலில், பெங்களூரு முதலிடமும் சென்னை இரண்டாவது இடமும் பெற்றுள்ளது. தென்னிந்திய நகரங்கள் மிகவும் பாலின சமத்துவம் மிக்க நகரங்களாக அமைந்துள்ளன.

இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பான முன்னணி நகரங்கள் பட்டியலில், பெங்களூரு முதலிடமும் சென்னை இரண்டாவது இடமும் பெற்றுள்ளது. தென்னிந்திய நகரங்கள் மிகவும் பாலின சமத்துவம் மிக்க நகரங்களாக அமைந்துள்ளன.


இந்தியாவின் முன்னணி பணியிட கலாச்சார ஆலோசனை நிறுவனம் அவ்தார் குழுமம் தனது மூன்றாவது, இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பான முன்னணி நகரங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இந்த அட்டவனை (TCWI) மாதிரி நகரங்கள் மற்றும் சிறந்த செயல்முறையை அடையாளம் காட்டுகிறது. மேலும், நம்முடைய நகரங்களை நல்ல முறையில் வளர்ச்சி கொண்ட நகரங்களாக மாற்றுவதற்கான வரைவுகள், செயல்முறைகளை அடையாளம் காட்டுகிறது.

Women Safety

இந்திய பொருளாதாரத்தை கண்காணிப்பதற்கான மையம், உலக வங்கி, குற்ற ஆவணங்கள், தொழிலாளர் நலத்துறை ஆய்வுகள் மற்றும் அவ்தார் குழுமத்தின் ஆய்வுகளை அடிப்படையாக கொண்டு இந்த அட்டவனை தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல், நவம்பர் மாதம் வரை மேற்கொள்ளப்பட்டது. 60 நகரங்களைச் சேர்ந்த 1,672 பெண்கள் பங்கேற்றனர்.

இந்த பட்டியலில் முதல் 10 இடங்களை பெற்ற நகரங்கள் வருமாறு: பெங்களூரு, சென்னை, மும்பை, ஐதரபாதா, கொல்கத்தா, அகமதாபாத்,தில்லி, குருகிராம் மற்றும் கோவை.

இந்த ஆய்வுக்காக, இந்தியாவில் முழுவதும் உள்ள 120 நகரங்கள் அவற்றின் பொருளாதார பங்களிப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டன. நகரங்கள், அவற்றின் அனைவரையும் உள்ளடக்கிய தன்மை மதிப்பெண் அடிப்படையில் வரிசை படுத்தப்பட்டன. சமூக உள்ளடக்கிய மதிபெண், தொழில்துறை உள்ளடக்கிய தன்மை மதிப்பெண் மற்றும் குடிமக்கள் அனுபவம் மதிப்பெண் அடிப்படையில் இந்த மதிப்பெண் தீர்மானிக்கப்பட்டது.

சமூக உள்ளடக்கிய தன்மை, நகரின் வாழும் தன்மை, பாதுகாப்பு, வேலைவாய்ப்பில் பெண்கள் பங்கேற்பு, பெண்கள் அதிகாரம் பெறுதல் அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டது. தொழில்துறை உள்ளடக்கிய தன்மை மதிப்பெண், நகரில் உள்ள தொழில் நிறுவனங்களில் பெண்கள் பங்கேற்பு அடிப்படையில் தீர்மானிக்கப்பட்டது. குடிமக்கள் அனுபவம் மதிப்பெண் பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வு, கருத்து கணிப்புகள் அடிப்படையில் அமைகின்றது.

முதல் இரண்டு அட்டவனைகளில், பத்து லட்சம் மக்கள் தொகைக்கு மேலான மற்றும் குறைவான நகரங்கள் என இரண்டு வகை நகரங்கள் இடம்பெற்றன. இந்த ஆண்டு, ஒருங்கிணைக்கப்பட்ட நகரமாக கருதப்பட்டன.

“நகரங்கள் தான் வாய்ப்பின் அடித்தளம். பெண்கள் வேலைவாப்பு, பணி, செழிப்பு போன்றவற்றை அவை தீர்மானிக்கின்றன. எனவே, நம்முடைய நகரங்களின் அடிப்படைத் தன்மை பற்றிய புரிதல், பெண்கள் முன்னேற்றம் மற்றும் உள்ளடக்கிய தன்மைக்கு மிகவும் அவசியம்,” என இந்த அறிக்கையை வெளியிட்டு பேசிய அவ்தார் குழுமம் நிறுவன தலைவர் டாக்டர்.செளந்தர்யா ராஜேஷ் கூறினார்.

“2027ல் விகாஸ் பாரத் எனும் நம் கனவை அடைய, நமக்கு ஆண்களுக்கு இணையான தொழில்முறை பணியாற்றும் பெண்கள் தேவை. நகரங்கள் பாலின சமத்துவத்துடன் இருந்தால் மட்டுமே இது சாத்தியம். பாதுகாப்பான சூழலை அளிப்பதோடு, கல்வி, சுகாதாரம் போன்றவற்றிலும் அணுகல் வசதி தேவை, என்றும் அவர் தெரிவித்தார்.

women safety

அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:

  • முதல் 25 நகரங்கள் பட்டியலில் தமிழக நகரங்கள் அதிகம் உள்ளன: சென்னை, கோவை, திருச்சி, வேலூர், மதுரை, ஈரோடு, சேலம், திருப்பூர்.

  • கடந்த இரண்டாவது இடத்தில் இருந்து பெங்களூரு இந்த ஆண்டு முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது. பெங்களூரு, அதிக தொழில்துறை தன்மை மதிப்பெண் பெற்ற நிலையில், சமூக உள்ளடக்கிய தன்மை மதிப்பெண்ணில் மூன்றாவது இடம் பெற்றது.

  • மும்பை 3வது இடத்தில் இருந்து நான்காவது இடத்திற்கு வந்துள்ளது.

  • குருகிராம் 20வது இடத்தில் இருந்து 9வது இடத்திற்கு வந்துள்ளது. வேகமான தொழில்மயமாக்கல் இதற்கு காரணம்.

  • பல சிறிய நரங்கள் முதல் 25 இடத்தில் உள்ளன. வேலூர், திருச்சி, சிம்லா, குருகிராம், புதுச்சேரி ஆகியவை உதாரணங்கள்.

அலசல்: தென் மாநிலங்கள் உள்ளடக்கிய தன்மையில் முன்னிலை வகிக்கின்றன. சமூக மற்றும் தொழில்துறை உள்ளடக்கிய தன்மையில் அதிக மதிப்பெண் பெற்றுள்ளன. மத்திய மற்றும் கிழக்கு பகுதிகள் பின் தங்கியுள்ளன.

மாநிலம்: கேரளா, அதிக நகர உள்ளடக்கிய தன்மை மதிப்பெண் பெற்றுள்ளது. - 20.89, தெலுங்கானா- 20.57, மகாராஷ்டிரா- 19.93, தமிழ்நாடு- 19.38 கர்நாடகம்- 17.50.

நகரங்களுக்கான பெண்கள் மதிப்பீடு:

  • திறன்வளர்ச்சி, வேலைவாய்ப்பு: குருகிராம் அதிக மதிப்பீடு பெற்றுள்ளது. (10 க்கு 7.68 –) மற்ற நகரங்கள் மும்பை. (7.60) பெங்களூரு-  (7.54) சென்னை-  (7.09).
  • உள்கட்டமைப்பு: ஐதராபாத் -  (8.01) . மும்பை-  (7.64). (7.75)
  • அரசு அமைப்புகள் செயல்திறன்: திருவனந்தபுரம் (8.15) புனே- (7.06)
  • வாழ்க்கைத்தரம் : சென்னை-  (7.54), புனே- (7.50) சென்னை-  (7.05)
  • பாதுகாப்பு:  திருவனந்தபுரம், (7.43), மும்பை, (7.19) ஐதரபாத் (6.95) .


Edited by Induja Raghunathan

facebook twitter