+

Stock News: பங்குச் சந்தையில் தொடரும் ‘ரெட்’ அலர்ட் - முதலீட்டாளர்கள் கலக்கம்!

வெளிநாட்டு முதலீட்டாளர்களின் ஆர்வமின்மை, உள்ளூர் முதலீட்டாளர்களின் அச்சம் உள்ளிட்ட காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் சரிவு தொடர்கிறது.

வெளிநாட்டு முதலீட்டாளர்களின் ஆர்வமின்மை, உள்ளூர் முதலீட்டாளர்களின் அச்சம் உள்ளிட்ட காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் சரிவு தொடர்கிறது. பெரும்பாலான நிறுவனப் பங்குகளும் வீழ்ச்சி கண்டுள்ளன.

மும்பை பங்குச் சந்தையில் இன்று (ஜன.9) காலை வர்த்தகம் தொடங்கும்போது, சென்செக்ஸ் 284.12 புள்ளிகள் சரிந்து 77,864.37 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 86.8 புள்ளிகள் சரிந்து 23,602.15 ஆக இருந்தது.

கடந்த இரு தினங்களாக தொடர்ந்து பங்குச் சந்தையில் வீழ்ச்சி நிலவுவது முதலீட்டாளர்கள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இன்று முற்பகல் 11 மணியளவில் சென்செக்ஸ் 447.47 புள்ளிகள் (0.57%) சரிந்து 77,701.02 ஆகவும், நிஃப்டி 140.80 புள்ளிகள் (0.59%) சரிந்து 23,548.15 ஆகவும் இருந்தது.

காரணம் என்ன?

அமெரிக்க பங்குச் சந்தையில் வர்த்தகம் ஓரளவு சாதக நிலையுடன்தான் நிறைவு பெற்றது. ஆசிய பங்குச் சந்தைகளைப் பொறுத்தவரையில் சியோல் மற்றும் ஹாங்காங் பங்குச் சந்தையில் ஏற்றம் உள்ளது. டோக்கியோ மற்றும் ஷாங்காய் பங்குச் சந்தையில் இறக்கம் நிலவுகிறது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் காட்டும் ஆர்வம் மிகவும் குறைந்திருப்பதும், உள்நாட்டு முதலீட்டாளர்களின் ஒருவித அச்ச உணர்வும் இந்தியப் பங்குச் சந்தை வீழ்ச்சிக்கு காரணம்.

bse

ஏற்றம் காணும் பங்குகள்:

இந்துஸ்தான் யூனிலீவர்

கோடக் மஹிந்திரா பேங்க்

ஐடிசி

எம் அண்ட் எம்

இன்ஃபோசிஸ்

டிசிஎஸ்

நெஸ்லே இந்தியா

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

ஏசியன் பெயின்ட்ஸ்

இறங்கு முகம் காணும் பங்குகள்:

பாரதி ஏர்டெல்

டைடன் கம்பெனி

ஆக்சிஸ் பேங்க்

விப்ரோ

சன் ஃபார்மா

பஜாஜ் ஃபின்சர்வ்

ஐசிஐசிஐ பேங்க்

டெக் மஹிந்திரா

எஸ்பிஐ

பஜாஜ் ஃபைனான்ஸ்

மாருதி சுசுகி

இந்திய ரூபாய் மதிப்பு

இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 1 பைசா குறைந்து ரூ.85.92 ஆக இருந்தது.


Edited by Induja Raghunathan

facebook twitter