சென்னையைச் சேர்ந்த OrbitAID Aerospace உட்பட WEF குழுவில் 9 இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தேர்வு!

12:53 PM Jun 11, 2026 | muthu kumar

உலகப் பொருளாதார மன்றம் (WEF) வெளியிட்டுள்ள 2026ஆம் ஆண்டுக்கான புதிய தொழில்நுட்ப முன்னோடிகள் (Technology Pioneers) பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த 9 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் சென்னையைச் சேர்ந்த 'ஆர்பிட் எய்ட்' (OrbitAid) ஏரோஸ்பேஸ் நிறுவனமும் அடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

விண்வெளித் துறையில் செயல்படும் 'துருவ் ஸ்பேஸ்' மற்றும் காலநிலை தீர்வுகளை உருவாக்கும் 'வராஹா' உள்ளிட்ட நிறுவனங்கள் இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளன.

மொத்தம் 23 நாடுகளைச் சேர்ந்த 100 ஆரம்பநிலை தொழில்நுட்ப நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், செயற்கை நுண்ணறிவின் அடுத்த கட்ட வளர்ச்சிக்குத் தேவையான மென்பொருள் மற்றும் உட்கட்டமைப்பு தொழில்நுட்பங்களை உருவாக்கும் நிறுவனங்களே இந்த ஆண்டின் பட்டியலில் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளதாக உலகப் பொருளாதார மன்றம் தெரிவித்துள்ளது.

இதில், 'ஆர்பிட் எய்ட்' ஏரோஸ்பேஸ் ஸ்டார்ட்-அப் நிறுவனம் சென்னையைத் தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. பெங்களூருவில் ஒரு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தையும் கொண்டுள்ளது. இந்த விண்வெளித் தொழில்நுட்ப நிறுவனம், செயற்கைக்கோள்களின் ஆயுளை நீட்டிக்கும் தீர்வுகள், சுற்றுப்பாதையில் எரிபொருள் நிரப்புதல், செயற்கைக்கோள் பழுதுபார்த்தல் மற்றும் பராமரிப்பு தொழில்நுட்பங்களை உருவாக்குதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. இந்நிறுவனம், மாநில அரசின் புத்தொழில் முனைவோர் முன்னெடுப்பான 'ஸ்டார்ட்அப்டிஎன்' (StartupTN) மூலம் தீவிரமாக ஆதரிக்கப்பட்டு வருகிறது.

விண்வெளித் துறையில் செயல்படும் துருவ் ஸ்பேஸ் மற்றும் காலநிலை தீர்வுகளை உருவாக்கும் Varaha உள்ளிட்ட நிறுவனங்கள் இந்தப் பட்டியலில் இடம்பிடித்துள்ளன.

மொத்தம் 23 நாடுகளைச் சேர்ந்த 100 ஆரம்பநிலை தொழில்நுட்ப நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், செயற்கை நுண்ணறிவின் அடுத்த கட்ட வளர்ச்சிக்குத் தேவையான மென்பொருள் மற்றும் உட்கட்டமைப்பு தொழில்நுட்பங்களை உருவாக்கும் நிறுவனங்களே இந்த ஆண்டின் பட்டியலில் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளதாக WEF தெரிவித்துள்ளது.

இந்தியாவிலிருந்து தேர்வு செய்யப்பட்ட நிறுவனங்களில், கிராமப்புற சுகாதார அமைப்புகளுக்கு ரத்தம் மற்றும் அவசர மருத்துவப் பொருட்களை ட்ரோன் மூலம் கொண்டு செல்லும் 'ஏர்பவுண்ட்' நிறுவனம், விண்வெளி இயக்கத் தொழில்நுட்பங்களை உருவாக்கும் பெல்லாட்ரிக்ஸ் ஏரோஸ்பேச், சுகாதாரத் துறையினருக்கு சர்வதேச வேலைவாய்ப்புகளை எளிதாக்கும் 'பார்டர் பிளஸ்', சிறிய செயற்கைக்கோள் தளங்களை உருவாக்கும் 'துருவ் ஸ்பேஸ்', மீள்பயன்பாட்டு ஏவுகணை வாகனங்களை மேம்படுத்தும் Ethereal Exploration Guild, நொதிப்பு அடிப்படையிலான உயிரி உற்பத்தி முறைகள் மூலம் மாற்று கொழுப்புகள், புரதங்கள் மற்றும் பசுமை வேதிப்பொருட்களை தயாரிக்கும் 'ஃபெர்மாக்ஸ் பயோ', விண்வெளியில் செயற்கைக்கோள்களுக்கு எரிபொருள் நிரப்புதல், நகர்ப்புற வான்வழிப் போக்குவரத்திற்கான மின்சார eVTOL விமானங்களை உருவாக்கும் 'சர்லா ஏவியேஷன்' மற்றும் வேளாண்மை சார்ந்த காலநிலை தீர்வுகளுக்காக தொலைநோக்கு உணர்திறன் மற்றும் பிளாக்செயின் தொழில்நுட்பங்களை பயன்படுத்தும் 'வராஹா' ஆகியவை அடங்குகின்றன.

இந்த ஆண்டைய தேர்வுகளுடன், WEF தொழில்நுட்ப முன்னோடிகள் பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்திய நிறுவனங்களின் மொத்த எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது. இதில் அக்னிகுல் காஸ்மாஸ், க்ரோபின், திகந்தரா, கேலக்ஸ் ஐ, நிறமை, பிக்ஸெல் மற்றும் சர்வம் ஏஐ AI போன்ற நிறுவனங்களும் ஏற்கனவே இடம்பெற்றுள்ளன.

நாடுகளின் அடிப்படையில் பார்க்கும்போது, அமெரிக்கா 43 நிறுவனங்களுடன் முதலிடத்தில் உள்ளது. சீனாவிலிருந்து 10 நிறுவனங்கள், ஐக்கிய இராச்சியத்திலிருந்து 8, ஜப்பானிலிருந்து 5, தென் கொரியாவிலிருந்து 4, சிங்கப்பூரிலிருந்து 3 மற்றும் ஜெர்மனி, இஸ்ரேல், சவுதி அரேபியா, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து தலா 2 நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

2000ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட WEF தொழில்நுட்ப முன்னோடிகள் திட்டம், உலகின் எதிர்காலத்தை மாற்றக்கூடிய புதுமையான தொழில்நுட்பங்களை உருவாக்கும் நிறுவனங்களை அடையாளம் கண்டு, அவற்றை உலகளாவிய பொது மற்றும் தனியார் துறை தலைவர்களுடன் இணைக்கும் முக்கிய தளமாக விளங்கி வருகிறது.