+

மூன்றாம் காலாண்டில் ஓலா எலெட்க்ரின் வருவாய் பாதியாக சரிவு...

மின் வாகன தயாரிப்பு நிறுவனம் ஓலா எலெக்ட்ரிக்கின் சிக்கல்கள் தொடர்வதன் அடையாளமாக அதன் செயல்பாடுகள் மூலமான வருவாய் 3ம் காலாண்டில் பாதியாக குறைந்து ரூ.470 கோடியாக உள்ளது.

மின் வாகன தயாரிப்பு நிறுவனம் ஓலா எலெக்ட்ரிக்கின் சிக்கல்கள் தொடர்வதன் அடையாளமாக அதன் செயல்பாடுகள் மூலமான வருவாய் 3ம் காலாண்டில் பாதியாக குறைந்து ரூ.470 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டின் இணையான காலத்தில் ரூ.1,045 கோடியாக இருந்தது.

2025 மூன்றாம் காலாண்டு வரை மின்சார இருசக்கர வாகன பிரிவில் சந்தையில் முன்னணியில் இருந்த நிலையில், ஓலா எலெக்ட்ரிக்கின் விற்பனை குறையத்துவங்கியதால் வருவாய் சரிந்துள்ளது. இந்த காலத்தில் நிறுவனம் 32,074 வாகனங்களை விற்பனை செய்தது. இது 62.3 சதவீதம் சரிவாகும். முந்தைய ஆண்டின் காலாண்டில் 84,970 வாகனங்கள் விற்பனை செய்தது.

Ola

வருவாய் குறைந்தாலும், நிறுவனத்தின் நிகர நஷ்டம், 2025 நிதியாண்டில் மூன்றாம் காலாண்டில் ரூ.564 கோடியாக இருந்தது இப்போது ரூ.487 கோடியாக குறைந்துள்ளது. எதிர்காலத்தில் லாபம் ஈட்டுதலை அடையும் வகையில் நிறுவனம் இந்த காலாண்டில் செலவுகளை குறைத்தது.

மூன்றாம் காலாண்டில் நிறுவன செலவுகள் 50.76 சதவீதம் குறைந்து ரூ.741 கோடியாக இருந்தது. கொள்முதல் பொருட்கள் செலவு குறைவு மற்றும் இதர செலவுகள் குறைந்துள்ளன.

2025 டிசம்பர் வரையான மூன்றாம் காலாண்டில் போட்டி நிறுவனம் ஏத்தர் எனர்ஜி, செயல்பாடுகள் மூலம் ரூ.953.6 கோடி வருவாய் ஈட்டியதாக அண்மையில் அறிவித்தது. நிறுவனம் காலாண்டு அதிக விற்பனையும் கண்டது. அதன் நஷ்டமும் ரூ.83.6 கோடியாக, 57.7 சதவீதம் குறைந்துள்ளது.

கடந்த காலாண்டில், இந்த நிதியாண்டின் முதல் அரையாண்டில் 1,00,000 வாகனங்களை வழங்க முடியும் என கணிப்பதாக ஓலா எலெக்ட்ரிக் தெரிவித்திருந்தது.

இந்த காலாண்டில், நிறுவனம் தனது 4,680 பாரத் செல் மேடையை ஸ்டார்ட் அப்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கு திறந்து விடுவதாக அறிவித்தது. அதிக லாபம் கொண்ட இந்த பிரிவில் உற்பத்தையையும் அதிகரித்துள்ளது. மேலும், பேட்டரி எனர்ஜி ஸ்டோரேஜ் வர்த்தகத்திலும் விரிவாக்கம் செய்துள்ளது.

முன் கள பணியில் தானியங்கிமயமாக்கத்தினால் 5 சதவீத பணியாளர்களை நீக்கலாம் என்பது உள்ளிட்ட சீரமைப்பு நடவடிக்கைகளை நிறுவனம் அண்மையில் அறிவித்த நிலையில் மூன்றாம் காலாண்டு முடிவுகள் வெளியாகியுள்ளன.

ஆங்கிலத்தில்: சாய் கீர்த்தி, தமிழில்: சைபர் சிம்மன்


Edited by Induja Raghunathan

facebook twitter