
"வானத்தில் என்ன நடந்தாலும் பறவைகள் வானத்தைப் பார்த்து அச்சப்படுவதில்லை. அந்த வானத்தில் இருந்து தான் பெரும் மழை பெய்கிறது. அந்த வானத்தில் இருந்து தான் புயல் அடிக்கிறது. ஆனாலும் அந்த வானத்தை பார்த்து பறவைகளுக்கு பறக்க வேண்டும் என்ற எண்ணம் எழத்தான் செய்கிறது. அப்பறவை போல தான் இங்கு நாம் பார்க்க போகும் மாணவியின் கதையும், கொடிய வறுமையில் பிறந்தாலும்…. இவளது கனவுகள் என்னவோ வானத்தில் பிறந்தவை...."
கரையான் அரித்த குடிசை வீடு… பஸ் வசதி கூட இல்லாத குக்கிராமம்... தாய் இல்லை; இருந்தும் பயனில்லாத குடிகார தந்தை, பட்டாம்பூச்சி பிடித்து விளையாடும் வயதில் தம்பி, தங்கைகளுக்காக பத்து பாத்திரங்கள் தேய்த்து, வீட்டு வேலைகளில் வெந்நீராய் வாடினாள். இன்னும் சொல்லப்போனால் அரசுப்பள்ளி சோறு தான் இவளுக்குப் பண்டிகை விருந்தே.

கல்வி எனும் ஒளி
இப்படி வறுமையின் கோரப்பிடியில் பிடிப்பட்டிருந்தாலும். அவள் ஒன்றை மட்டும் இறுக்கப் பற்றி கொள்கிறாள். அதுதான் கல்வி. வெயிலோ, மழையோ தினமும் 6 கிலோமீட்டர் நடந்தே பள்ளிக்கு சென்று படிப்பே வழிபாடாய் கொண்டதன் பலன் 12ம் வகுப்பு பொது தேர்வில் பள்ளியிலேயே முதல் மதிப்பெண் பெறுகிறாள்.
அடுத்து என்ன படிக்கபோகிறோம்...? எங்கு படிக்கபோகிறோம்..? என்று செய்வதறியாது இருந்த நிலையில் அவளது ஆசிரியர் மூலம் உயர்கல்விக்கு உதவக்கூடிய 'மாற்றம் அறக்கட்டளை' பற்றி தெரியவர, பெரும் பிராத்தனையுடன் விண்ணப்பிக்கிறாள்.
அதன் பிறகு, அவளது வாழ்வில் நடந்தது அனைத்தும் மேஜிக் தான். மாற்றம் அறக்கட்டளை அவளுக்கு நல்வழி காட்டியாக இருந்து உயர்கல்விக்கான முழு செலவையும் ஏற்றுக் கொண்டதோடு நல்ல வேலை வாய்ப்பையும் வழங்கியது.

Maatram Foundation
அன்று பத்து பாத்திரம் தேய்த்தவள்; இன்று பத்து மாடி கட்டிடத்தில் பிரபல கார்ப்பரேட் நிறுவனத்தில், வருடம் 12 லட்சம் ரூபாய் ஊதியத்தில் மென்பொருள் ஊழியராக ஓர் பறவை போல சிறகடித்து பறந்து கொண்டிருக்கிறாள்.
இம்மாணவி போல, சமூகச்சூழலால் வஞ்சிக்கப்பட்ட பல ஆயிரக்கணக்கான ஏழை எளிய மாணாக்கர்களின் வாழ்வை கல்வி என்னும் பேரொளியால் மாற்றியமைத்துள்ளது மாற்றம் அறக்கட்டளை.
மாற்றம் அறக்கட்டளை:
"சமூகத்தில் நல்மாற்றத்தை நிகழ்த்துவதற்கான ஆயுதமற்ற புரட்சியே கல்வி" - அப்பெரும் கல்வி அனைத்து மாணவர்களுக்கும் கிடைத்துவிடுகிறதா என்று கேட்டால் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை.
தமிழக அரசின் தரவுப்படி, கிட்டத்தட்ட 40% மாணவர்கள் வறுமை மற்றும் குடும்ப பொருளாதார சிக்கல்கள் காரணமாக தங்களது உயர்கல்வி கனவை அடைய முடியா நிலையே உள்ளது. இச்சமூக பிரச்சனையைக் கருத்தில் கொண்டு 2013-ம் ஆண்டு சுஜித்குமார் மற்றும் அவரது நண்பர்களால் தொடங்கப்பட்ட ஒரு தன்னார்வ அமைப்பே 'மாற்றம் அறக்கட்டளை.'
இந்த அறக்கட்டளையில் பணியாற்றும் ஒவ்வொரு உறுப்பினரும், வார நாட்களில் தங்களுடைய அலுவலக பணிகளை செய்துவிட்டு, வார இறுதிகளில் மாற்றம் அறக்கட்டளைக்காக சேவைப்புரிய தொடங்கினர். இவர்கள் தொடங்கிய இந்த சிறிய முயற்சி, இன்று பெரும் புரட்சியாக உருவெடுத்துள்ளது.

Maatram Family
இதுவரை 60-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்களுடன் இணைந்து, 3600-க்கும் மேற்பட்ட ஏழை மாணாக்கர்களுக்கு இலவச உயர்கல்வியை வழங்கியது மட்டுமில்லாது இன்ஃபோசிஸ், விப்ரோ, சிடிஎஸ் உள்ளிட்ட பல கார்ப்பரேட் நிறுவனங்களில் நல்ல வேலை வாய்ப்புகளையும் அளித்து அவர்களது குடும்பத்தின் வாழ்க்கை தரத்தையே உயர்த்திருகின்றனர் மாற்றம் அறக்கட்டளை அமைப்பினர்.
"ஒரு மாணவனின் வாழ்க்கையை மாற்றுவது என்பது ஒரு சமுதாயத்தின் வரலாற்றையே மாற்றுவது...” என்ற உண்மையை, ஒவ்வொரு மாணவரின் கதையிலும் மாற்றம் அறக்கட்டளை நிரூபித்திருக்கிறது.

Admissions Open for 2025 at Maatram Foundation
தற்போது 12-ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு மாற்றம் அறக்கட்டளையில் 2025-ம் ஆண்டிற்கான மாணவ சேர்க்கை விண்ணப்பங்கள் திறக்கப்பட்டுள்ளன. நீங்களும் இந்த பயணத்தில் பங்கேற்க விரும்பினால்—திறனும், நல்ல மதிப்பெண்ணும் இருந்தும், பொருளாதாரம் மற்றும் சமூக நெருக்கடிகளால் உயர் கல்வியை தொடரமுடியாத மாணவர்களை மாற்றத்திற்கு அறிமுகப்படுத்துங்கள்.இந்த சிறிய உதவி, அவர்களின் வாழ்கையில் ஒரு பெரிய மாற்றமாக மாறும்.
மேலும் தகவலுக்கு: