மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தையில் பெரும் சரிவுக்குப் பின் இப்போது மீட்சிப் போக்கு நிலவுகிறது.
கடந்த பிப்ரவரி 28-ல் அமெரிக்கா - ஈரான் இடையே போர் தொடங்கியதில் இருந்து முதலீட்டாளர்களின் சொத்து மதிப்பில் சுமார் ரூ.31 லட்சம் கோடி அளவுக்கு வீழ்ச்சி ஏற்பட்டது. நேற்று ஒரே நாளில் சுமார் ரூ.12.78 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், தற்போது சற்றே மீட்சி ஏற்பட்டுள்ளது முதலீட்டாளர்கள் மத்தியில் நிம்மதி தந்துள்ளது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 809.57 புள்ளிகள் உயர்ந்து 78,375.73 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 252.75 புள்ளிகள் உயர்ந்து 24,280.80 ஆக இருந்தது.
“ஈரான் போர் காரணமாக மேற்கு ஆசியாவில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. எனினும், நேற்று பிற்பகல் தொடங்கி கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு சற்றே தணிந்துள்ளது. இதன் எதிரொலியால் இந்திய பங்குச் சந்தைகளிலும் மீட்சிப் போக்கு நிலவுகிறது” என்று வர்த்தக நிபுணர்கள் கூறுகின்றனர்.
மும்பை பங்குச் சந்தையின் இன்றைய முற்பகல் வர்த்தகத்தில் என்டிபிசி, இண்டஸ்இண்ட் பேங்க், நெஸ்லே இந்தியா, டைடன் கம்பெனி, ஹெச்டிஎஃப்சி பேங்க், எம் அண்ட் எம் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் ஏற்றம் கண்டிருந்தன. ஐடிசி, டிசிஎஸ், பவர் கிரிட் கார்ப்பரேஷன், டெக் மஹிந்திரா, ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், எடர்னல் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் சரிவை சந்தித்தன.
இன்று முற்பகல் 10.45 மணியளவில் சென்செக்ஸ் 582.94 புள்ளிகள் உயர்ந்து 78,149.09 ஆகவும், நிஃப்டி 189.55 புள்ளிகள் உயர்ந்து 24,217.60 ஆகவும் இருந்தது.
காரணம் என்ன?
அமெரிக்க பங்குச் சந்தை சற்று ஏற்றத்துடன் நிறைவுற்றது. ஆசிய பங்குச் சந்தைகளைப் பொறுத்தவரையில் ஜப்பான், தென் கொரியா, ஷாங்காய் மற்றும் ஹாங்காங்கில் மீட்சி போக்கு நிலவுகிறது. ஈரான் போர் காரணமாக மேற்கு ஆசியாவில் தொடர்ந்து பதற்றம் நீடித்து வருகிறது. எனினும், தற்போது கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு சற்றே தணிந்துள்ளது. இதன் எதிரொலியால் இந்திய பங்குச் சந்தைகளிலும் மீட்சிப் போக்கு நிலவுகிறது
ஏறுமுகம் காணும் பங்குகள்:
என்டிபிசி
இண்டஸ்இண்ட் பேங்க்
நெஸ்லே இந்தியா
டைடன் கம்பெனி
ஹெச்டிஎஃப்சி பேங்க்
எம் அண்ட் எம்
இந்துஸ்தான் யூனிலீவர்
பஜாஜ் ஃபைனான்ஸ்
எல் அண்ட் டி
பாரதி ஏர்டெல்
மாருதி சுசுகி
ஐசிஐசிஐ பேங்க்
அதானி போர்ட்ஸ்
பஜாஜ் ஃபின்சர்வ்
சன் பார்மா
டாடா ஸ்டீல்
ஏசியன் பெயின்ட்ஸ்
அல்ட்ராடெக் சிமென்ட்ஸ்
கோடக் மஹிந்திரா பேங்க்
டாடா மோட்டாரஸ்
ஆக்ஸிஸ் பேங்க்
எஸ்பிஐ
இறங்கு முகம் காணும் பங்குகள்:
ஐடிசி
டிசிஎஸ்
பவர் கிரிட் கார்ப்பரேஷன்
டெக் மஹிந்திரா
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்
எடர்னல்
இன்போசிஸ்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
ரூபாய் மதிப்பு
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.92.11 ஆக இருந்தது."
Edited by Induja Raghunathan