
மும்பை பங்குச் சந்தையில் ஏற்றமும், தேசிய பங்குச் சந்தையில் சரிவும் நிலவுவது கவனம் ஈர்த்துள்ளது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 97 புள்ளிகள் உயர்ந்து 78,736.20 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 173.95 புள்ளிகள் சரிந்து 24,600.35 ஆக இருந்தது.
“மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் புள்ளிகள் ஏற்றம் கண்டு வருகின்றன. எனினும், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி புள்ளிகள் சரிவை சந்தித்துள்ளது. தேசிய பங்குச் சந்தை நடைமுறையில் சில மாற்றங்கள் கொண்டு வந்திருப்பதே நிஃப்டி வீழ்ச்சிக்கு காரணம்,” என நிபுணர்கள் கூறுகின்றனர்.
மும்பை பங்குச் சந்தையின் இன்றைய முற்பகல் வர்த்தகத்தில் என்டிபிசி, பாரதி ஏர்டெல், மாருதி சுசுகி, சன் பார்மா உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஐடிசி, டெக் மஹிந்திரா, இந்துஸ்தான் யூனிலீவர், ஹெச்டிஎஃப்சி பேங்க்
உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் சரிவை சந்தித்தன.
இன்று முற்பகல் 11.15 மணியளவில் சென்செக்ஸ் 52.14 புள்ளிகள் உயர்ந்து 78,691.17 ஆகவும், நிஃப்டி 184.25 புள்ளிகள் சரிந்து 24,590.05 ஆகவும் இருந்தது.

காரணம் என்ன?
அமெரிக்க பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவுற்றது. ஆசிய பங்குச் சந்தைகளில் கலவையான போக்கு நிலவுகிறது. மும்பை பங்குச் சந்தையில் சென்செக்ஸ் புள்ளிகள் ஏற்றம் கண்டு வருகின்றன. எனினும், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி புள்ளிகள் சரிவை சந்தித்துள்ளது. தேசிய பங்குச் சந்தை நடைமுறையில் சில மாற்றங்கள் கொண்டு வந்திருப்பதே நிஃப்டி வீழ்ச்சிக்கு காரணம்.
ஏறுமுகம் காணும் பங்குகள்:
என்டிபிசி
பாரதி ஏர்டெல்
மாருதி சுசுகி
சன் பார்மா
டாடா மோட்டார்ஸ்
அதானி போர்ட்ஸ்
பஜாஜ் ஃபைனான்ஸ்
பஜாஜ் ஃபின்சர்வ்
எம் அண்ட் எம்
கோடக் மஹிந்திரா பேங்க்
டாடா ஸ்டீல்
எஸ்பிஐ
அதானி போர்ட்ஸ்
ஆக்சிஸ் பேங்க்
டைடன் கம்பெனி
ஐசிஐசிஐ பேங்க்
எல் அண்ட் டி
பவர் கிரிட் கார்ப்பரேஷன்
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்
நெஸ்லே இந்தியா
இண்டஸ்இண்ட் பேங்க்
எடர்னல்
இறங்கு முகம் காணும் பங்குகள்:
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
ஐடிசி
டெக் மஹிந்திரா
இந்துஸ்தான் யூனிலீவர்
ஹெச்டிஎஃப்சி பேங்க்
டிசிஎஸ்
இன்போசிஸ்
ரூபாய் மதிப்பு:
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.95.30 ஆக இருந்தது.
Edited by Induja Raghunathan