
இந்திய பங்குச் சந்தையில் தடுமாற்றம் நீடித்தாலும் கூட, ஐடி நிறுவனப் பங்குகள் கைகொடுத்து வருகின்றன.
மும்பை பங்குச் சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 824.44 புள்ளிகள் சரிந்து 73,282.41 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 248.95 புள்ளிகள் சரிந்து 22,719.30 ஆக இருந்தது.
“மேற்கு ஆசிய போர் பதற்றம், கச்சா எண்ணெய் விலை முதலான காரணங்களால் சர்வதேச சந்தைகளில் தடுமாற்றம் நிலவினாலும் கூட, ஐடி நிறுவனப் பங்குகளின் எழுச்சியால் இந்திய பங்குச் சந்தையில் ஓரளவு மீட்சிப் போக்கு நிலவுகிறது,” என்று வர்த்தக நிபுணர்கள் கூறுகின்றனர்.
மும்பை பங்குச் சந்தையின் இன்றைய முற்பகல் வர்த்தகத்தில் டிசிஎஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், இன்போசிஸ், டெக் மஹிந்திரா, சன் பார்மா, பாரதி ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் ஏற்றம் கண்டன. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், அதானி போர்ட்ஸ், நெஸ்லே இந்தியா, எஸ்பிஐ, இண்டஸ்இண்ட் பேங்க், எம் அண்ட் எம் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் சரிவை சந்தித்தன.
இன்று நண்பகல் 12 மணியளவில் சென்செக்ஸ் 127.01 புள்ளிகள் சரிந்து 73,979.84 ஆகவும், நிஃப்டி 33.05 புள்ளிகள் சரிந்து 22,935.20 ஆகவும் இருந்தது.

காரணம் என்ன?
அமெரிக்க பங்குச் சந்தை ஏற்றத்துடன் நிறைவுற்றது. ஆசிய பங்குச் சந்தைகளைப் பொறுத்தவரையில் ஷாங்காய் மற்றும் தென் கொரியாவில் ஏற்றமும், ஜப்பானில் சரிவும் நிலவுகிறது. ஹாங்காங் பங்குச் சந்தைக்கு இன்று விடுமுறை. மேற்கு ஆசிய போர் பதற்றம் நீடிப்பது, கச்சா எண்ணெய் விலை முதலான காரணங்களால் சர்வதேச சந்தைகளில் தடுமாற்றம் நிலவினாலும் கூட, ஐடி நிறுவனப் பங்குகளின் எழுச்சியால் இந்திய பங்குச் சந்தையில் ஓரளவு மீட்சிப் போக்கு நிலவுகிறது.
ஏறுமுகம் காணும் பங்குகள்:
டிசிஎஸ்
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்
இன்போசிஸ்
டெக் மஹிந்திரா
சன் பார்மா
பாரதி ஏர்டெல்
ஐடிசி
எடர்னல்
என்டிபிசி
பஜாஜ் ஃபைனான்ஸ்
இறங்கு முகம் காணும் பங்குகள்:
டைடன் கம்பெனி
ஆக்சிஸ் பேங்க்
ஹெச்டிஎஃப்சி பேங்க்
அல்ட்ராடெக் சிமென்ட்ஸ்
டாடா மோட்டார்ஸ்
டாடா ஸ்டீல்
பவர் கிரிட் கார்ப்பரேஷன்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
அதானி போர்ட்ஸ்
நெஸ்லே இந்தியா
எஸ்பிஐ
இண்டஸ்இண்ட் பேங்க்
எம் அண்ட் எம்
எல் அண்ட் டி
மாருதி சுசுகி
பஜாஜ் ஃபின்சர்வ்
ஏசியன் பெயின்ட்ஸ்
இந்துஸ்தான் யூனிலீவர்
ஐசிஐசிஐ பேங்க்
கோடக் மஹிந்திரா பேங்க்
ரூபாய் மதிப்பு
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.92.97 ஆக இருந்தது.
Edited by Induja Raghunathan