
மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தையில் தொடர்ந்து சரிவுப் போக்கு நீடித்து வந்தச் சூழலில் இன்று பச்சை விளக்கு ஒளிர்விட தொடங்கியிருப்பது முதலீட்டாளர்களுக்கு நிம்மதி தந்துள்ள்து.
மும்பை பங்குச் சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 144.34 புள்ளிகள் சரிந்து 75,358.51 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 49.95 புள்ளிகள் சரிந்து 23,358.85. ஆக இருந்தது. எனினும், பங்குச் சந்தை வர்த்தகம் விரைந்து மீட்சி கண்டது.
“ஈரானில் போர்ச் சூழல் நீடித்தபோதும் கூட சர்வதேச பங்குச் சந்தைகள் படிப்படியாக மீளத் தொடங்கியுள்ளன. அதுவே, இப்போது இந்திய பங்குச் சந்தையிலும் எதிரொலிக்கிறது. ஆனால், இந்த சாதகப் போக்கு தொடருவது சந்தேகமே,” என்று வர்த்தக நிபுணர்கள் கூறுகின்றனர்.
மும்பை பங்குச் சந்தையின் இன்றைய முற்பகல் வர்த்தகத்தில் அதானி போர்ட்ஸ், ஐடிசி, டெக் மஹிந்திரா, ஹெச்சிஎல் டெக்னலாஜிஸ், டிசிஎஸ், இன்போசிஸ் உள்ளிட்ட சில நிறுவனப் பங்குகள் மட்டும் சரிவை சந்தித்தன. ஏனைய பல்வேறு நிறுவனப் பங்குகளும் ஏற்றம் கண்டன.
இன்று முற்பகல் 10.50 மணியளவில் சென்செக்ஸ் 258.24 புள்ளிகள் உயர்ந்து 75,761.09 ஆகவும், நிஃப்டி 86.50 புள்ளிகள் உயர்ந்து 23,495.30 ஆகவும் இருந்தது.

காரணம் என்ன?
அமெரிக்க பங்குச் சந்தை ஏற்றத்துடன் நிறைவுற்றது. ஆசிய பங்குச் சந்தைகளைப் பொறுத்தவரையில் ஷாங்காயை தவிர்த்து ஜப்பான், தென் கொரியா மற்றும் ஹாங்காங்கில் ஏற்றமே நிலவுகிறது. ஈரானில் போர்ச் சூழல் நீடித்தபோதும் கூட சர்வதேச பங்குச் சந்தைகள் படிப்படியாக மீளத் தொடங்கியுள்ளன. அதுவே, இப்போது இந்திய பங்குச் சந்தையிலும் எதிரொலிக்கிறது. ஆனால், இந்த சாதகப் போக்கு தொடருவது சந்தேகம்தான்.
ஏறுமுகம் காணும் பங்குகள்:
பாரதி ஏர்டெல்
என்டிபிசி
பவர் கிரிட் கார்ப்பரேஷன்
சன் பார்மா
ஹெச்டிஎஃப்சி பேங்க்
எடர்னல்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
எம் அண்ட் எம்
எல் அண்ட் டி
மாருதி சுசுகி
ஐசிஐசிஐ பேங்க்
பஜாஜ் ஃபின்சர்வ்
ஏசியன் பெயின்ட்ஸ்
அல்ட்ராடெக் சிமென்ட்ஸ்
கோடக் மஹிந்திரா பேங்க்
டாடா மோட்டாரஸ்
ஆக்ஸிஸ் பேங்க்
அல்ட்ராடெக் சிமென்ட்ஸ்
ஹெச்டிஎஃப்டி பேங்க்
டாடா ஸ்டீல்
நெஸ்லே இந்தியா
பஜாஜ் ஃபைனான்ஸ்
இறங்கு முகம் காணும் பங்குகள்:
அதானி போர்ட்ஸ்
இண்டஸ்இண்ட் பேங்க்
டைடன் கம்பெனி
ஹிந்துஸ்தான் யூனிலீவர்
ஐடிசி
டெக் மஹிந்திரா
எஸ்பிஐ
ஹெச்சிஎல் டெக்னலாஜிஸ்
டிசிஎஸ்
இன்போசிஸ்
ரூபாய் மதிப்பு
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.92.42 ஆக இருந்தது.
Edited by Induja Raghunathan