+

Stock News: பேரிழப்புக்குப் பின் மீளும் இந்திய பங்குச் சந்தை - காரணம் என்ன?

மத்​திய கிழக்கு நாடு​களில் போர் பதற்​றம் தணி​யாத​து, கச்சா எண்ணெய் விலை உயர்வு, ரூபாய் மதிப்பு வீழ்ச்சி உள்ளிட்ட காரணங்களால் சர்வதேச அளவில் பங்குச் சந்தை வர்த்தகம் பாதித்துள்ளது. எனினும், உள்நாட்டு காரணிகளால் இந்திய பங்குச் சந்தை மீளத் தொடங்கியுள்ளது.

சர்வதேச நிலவரம் இன்னமும் மோசமானதாக இருந்தாலும் கூட, உள்நாட்டு காரணிகளால் இந்திய பங்குச் சந்தையில் மீட்சிப் போக்கு நிலவுகிறது. தங்கம் மீதான சுங்க வரியை 15% ஆக மத்திய அரசு உயர்த்தியதும் கவனிக்கத்தக்கது.

இந்திய பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமை கடும் வீழ்ச்​சி ஏற்பட்டது. வர்த்தக முடி​வில் சென்​செக்ஸ் 1,456 புள்ளிகள் சரிந்து 74,559-ல் நிலை பெற்றது. இதன்​மூலம் முதலீட்​டாளர்​களுக்கு நேற்று ஒரே நாளில் ரூ.10.14 லட்​சம் கோடி இழப்பு ஏற்​பட்​டதாக மதிப்பிடப்பட்டது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று (மே 13) காலையில் வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 75.64 புள்ளிகள் உயர்ந்து 74,614.51 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 17.10 புள்ளிகள் உயர்ந்து 23,391.10 ஆக இருந்தது. பின்னர் சரிந்து உடனடியாக மீண்டது.

“மத்​திய கிழக்கு நாடு​களில் போர் பதற்​றம் தணி​யாத​து, கச்சா எண்ணெய் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் சர்வதேச அளவில் பங்குச் சந்தை வர்த்தகம் பாதித்துள்ளது. எனினும், உள்நாட்டு காரணிகளால் இந்திய பங்குச் சந்தை மீளத் தொடங்கியுள்ளது,” என்று வர்த்தக நிபுணர்கள் கூறுகின்றனர்.

மும்பை பங்குச் சந்தையின் இன்றைய நண்பகல் வர்த்தகத்தில் அதானி போர்ட்ஸ், நெஸ்லே இந்தியா, கோடக் மஹிந்திரா பேங்க், ஆக்சிஸ் பேங்க், பாரதி ஏர்டெல், டாடா ஸ்டீல் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன. டெக் மஹிந்திரா, இன்போசிஸ், டிசிஎஸ், சன் பார்மா, என்டிபிசி, எம் அண்ட் எம் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் சரிவை சந்தித்தன.

இன்று பிற்பகல் 12.40 மணியளவில் சென்செக்ஸ் 239.58 புள்ளிகள் உயர்ந்து 74,798.82 ஆகவும், நிஃப்டி 80.40 புள்ளிகள் உயர்ந்து 23,459.95 ஆகவும் இருந்தது.
sensex today

காரணம் என்ன?

அமெரிக்க பங்குச் சந்தை சரிவுடன் நிறைவுற்றது. ஆசிய பங்குச் சந்தைகளில் கலவையான் போக்கு நிலவுகிறது. மத்​திய கிழக்கு நாடு​களில் போர் பதற்​றம் தணி​யாத​து, கச்சா எண்ணெய் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் சர்வதேச அளவில் பங்குச் சந்தை வர்த்தகம் பாதித்துள்ளது. எனினும், உள்நாட்டு காரணிகளால் இந்திய பங்குச் சந்தை மீளத் தொடங்கியுள்ளது.

ஏறுமுகம் காணும் பங்குகள்:

அதானி போர்ட்ஸ்

நெஸ்லே இந்தியா

கோடக் மஹிந்திரா பேங்க்

ஆக்சிஸ் பேங்க்

பாரதி ஏர்டெல்

டாடா ஸ்டீல்

ஏசியன் பெயின்ட்ஸ்

ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்

ஹிந்துஸ்தான் யூனிலீவர்

அல்ட்ராடெக் சிமென்ட்ஸ்

எடர்னல்

டாடா மோட்டார்ஸ்

பஜாஜ் ஃபைனான்ஸ்

பஜாஜ் ஃபின்சர்வ்

எஸ்பிஐ

இண்டஸ்இண்ட் பேங்க்

ஹெச்டிஎஃப்சி பேங்க்

ஐடிசி

டைடன் கம்பெனி

எல் அண்ட் டி

இறங்கு முகம் காணும் பங்குகள்:

ஐசிஐசிஐ பேங்க்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

மாருதி சுசுகி

டெக் மஹிந்திரா

இன்போசிஸ்

டிசிஎஸ்

சன் பார்மா

என்டிபிசி

எம் அண்ட் எம்

பவர் கிரிட் கார்ப்பரேஷன்

ரூபாய் மதிப்பு

இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.95.60 ஆக இருந்தது.


Edited by Induja Raghunathan

facebook twitter