+

Stock News: இந்திய பங்குச் சந்தையில் மீட்சி - ஏற்றத்துக்கு காரணம் என்ன?

ஒரே நாளில் கடும் வீழ்ச்சியை சந்தித்த இந்திய பங்குச் சந்தை தற்போது சற்றே மீண்டெழுந்துள்ளது. சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் வெகுவாக உயர்ந்தன.

ஒரே நாளில் கடும் வீழ்ச்சியை சந்தித்த இந்திய பங்குச் சந்தை தற்போது சற்றே மீண்டெழுந்துள்ளது. சென்செக்ஸ், நிஃப்டி புள்ளிகள் வெகுவாக உயர்ந்தன.

மும்பை பங்குச் சந்தையில் இன்று (ஏப்.2) காலை வர்த்தகம் தொடங்கும்போது, சென்செக்ஸ் 256.82 புள்ளிகள் உயர்ந்து 76,281.33 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 84.9 புள்ளிகள் உயர்ந்து 23,250.60 ஆக இருந்தது.

கடும் வீழ்ச்சியை சந்தித்த மறுநாளில், இந்திய பங்குச் சந்தை மீண்டது முதலீட்டாளர்கள் மத்தியில் நிம்மதியை தந்துள்ளது.

இன்று பிற்பகல் 12.30 மணியளவில் சென்செக்ஸ் 458.18 புள்ளிகள் (0.60%) உயர்ந்து 76,482.69 ஆகவும், நிஃப்டி 124.60 புள்ளிகள் (0.54%) உயர்ந்து 23,290.30 ஆகவும் இருந்தது.

காரணம் என்ன?

அமெரிக்க பங்குச் சந்தை ஓரளவு ஏற்றத்துடன் நிறைவு பெற்றது. ஆசிய பங்குச் சந்தைகளைப் பொறுத்தவரையில் சியோல், டோக்கியோ, ஷாங்காயில் இறக்கமும், ஷாங்காய் மற்றும் ஹாங்காங்கில் ஏற்றமும் நிலவுகிறது.

அமெரிக்கா தொடங்கி வைத்துள்ள வர்த்தக வரி யுத்தத்தி தாக்கம் நீடித்தாலும், உள்ளூர் முதலீட்டாளர்களின் பங்களிப்பு மற்றும் வங்கி நிறுவனப் பங்குகளுக்கு கூடிய மவுசு காரணமாக இந்தியப் பங்குச் சந்தை மீண்டுள்ளது.

sensex

ஏற்றம் காணும் பங்குகள்:

இண்டஸ்இண்ட் பேங்க்

டைட்டன் கம்பெனி

இன்போசிஸ்

டெக் மஹிந்திரா

ஹெச்டிஎஃப்சி பேங்க்

பாரதி ஏர்டெல்

சன் பார்மா

டாடா ஸ்டீல்

விப்ரோ

ஆக்சிஸ் பேங்க்

எஸ்பிஐ

ஐடிசி

இறங்கு முகம் காணும் பங்குகள்:

ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்

கோடக் மஹிந்திரா பேங்க்

டிசிஎஸ்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

ஏசியன் பெயின்ட்ஸ்

பவர் கிரிட் கார்ப்பரேஷன்

நெஸ்லே இந்தியா

அல்ட்ரா டெக் சிமென்ட்ஸ்

ரூபாய் மதிப்பு

இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 23 பைசா வீழ்ச்சி கண்டு ரூ.85.73 ஆக இருந்தது.


Edited by Induja Raghunathan

facebook twitter