கடுமையான சரிவை சந்தித்து வந்த இந்திய பங்குச் சந்தைகள் இன்று வெகுவாக மீண்டுள்ளன.
மும்பை பங்குச் சந்தையில் நேற்று சென்செக்ஸ் 2,497 புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 74,207-ல் நிலைபெற்றது. நிஃப்டி 776 புள்ளிகள் சரிவடைந்து 23,002-ல் நிலைகொண்டது. இதன் காரணமாக, நேற்று ஒரே நாளில் முதலீட்டாளர்களுக்கு ரூ.12 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், பங்குச் சந்தை தற்போது வெகுவாக மீண்டுள்ளது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 976.77 புள்ளிகள் உயர்ந்து 75,184.01 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 301.7 புள்ளிகள் உயர்ந்து 23,303.85 ஆக இருந்தது.
“ஈரானில் போர்ச் சூழல் உச்ச கட்டத்தை எட்டியதன் எதிரொலியாக, கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 114 டாலர் அளவில் நேற்று உயர்ந்தது. இன்று பேரல் விலை 106 டாலருக்கு குறைந்துள்ளது. இத்துடன், சர்வதேச சந்தைகளின் போக்கு காரணமாகவும் இந்திய பங்குச் சந்தை மீண்டுள்ளது,” என்று வர்த்தக நிபுணர்கள் கூறுகின்றனர்.
மும்பை பங்குச் சந்தையின் இன்றைய முற்பகல் வர்த்தகத்தில் நெஸ்லே இந்தியா, பஜாஜ் ஃபைனான்ஸ், ஹெச்டிஎஃப்சி பேங்க் ஆகிய நிறுவனப் பங்குகள் மட்டுமே சற்றே சரிவை சந்தித்தன. ஏனைய ஏனைய நிறுவனப் பங்குகள் அனைத்தும் ஏற்றம் கண்டுள்ளன.
இன்று பிற்பகல் 12.10 மணியளவில் சென்செக்ஸ் 684.37 புள்ளிகள் உயர்ந்து 74,891.61 ஆகவும், நிஃப்டி 232.45 புள்ளிகள் உயர்ந்து 23,234.60 ஆகவும் இருந்தது.
காரணம் என்ன?
அமெரிக்க பங்குச் சந்தை ஏற்றத்துடன் நிறைவுற்றது. ஆசிய பங்குச் சந்தைகளைப் பொறுத்தவரையில் ஷாங்காய், ஜப்பான், தென் கொரியா மற்றும் ஹாங்காங்கில் மீட்சிப் போக்கு நிலவுகிறது. ஈரானில் போர்ச் சூழல் உச்ச கட்டத்தை எட்டியதன் எதிரொலியாக, கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 114 டாலர் அளவில் நேற்று உயர்ந்தது. இன்று பேரல் விலை 106 டாலருக்கு குறைந்துள்ளது. இத்துடன், சர்வதேச சந்தைகளின் போக்கு காரணமாகவும் இந்திய பங்குச் சந்தை மீண்டுள்ளது.
ஏறுமுகம் காணும் பங்குகள்:
அதானி போர்ட்ஸ்
இண்டஸ்இண்ட் பேங்க்
டைடன் கம்பெனி
டெக் மஹிந்திரா
எஸ்பிஐ
ஹெச்சிஎல் டெக்னலாஜிஸ்
டிசிஎஸ்
இன்போசிஸ்
பாரதி ஏர்டெல்
சன் பார்மா
எடர்னல்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
எம் அண்ட் எம்
எல் அண்ட் டி
மாருதி சுசுகி
பஜாஜ் ஃபின்சர்வ்
ஏசியன் பெயின்ட்ஸ்
அல்ட்ராடெக் சிமென்ட்ஸ்
டாடா மோட்டாரஸ்
ஆக்ஸிஸ் பேங்க்
அல்ட்ராடெக் சிமென்ட்ஸ்
என்டிபிசி
ஐடிசி
டாடா ஸ்டீல்
கோடக் மஹிந்திரா பேங்க்
இந்துஸ்தான் யூனிலீவர்
ஐசிஐசிஐ பேங்க்
பவர் கிரிட் கார்ப்பரேஷன்
இறங்கு முகம் காணும் பங்குகள்:
நெஸ்லே இந்தியா
பஜாஜ் ஃபைனான்ஸ்
ஹெச்டிஎஃப்சி பேங்க்
ரூபாய் மதிப்பு
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.93.32 ஆக இருந்தது."
Edited by Induja Raghunathan