சர்வதேச போக்குகளின் எதிரொலியாக மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தையில் மீட்சிப் போக்கு நிலவுகிறது. சென்செக்ஸ் 600+ புள்ளிகள் ஏற்றம் கண்டன.
மும்பை பங்குச் சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 1,953.21 புள்ளிகள் சரிந்து 74,750.92 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 580.05 புள்ளிகள் சரிந்து 23,197.75 ஆக இருந்தது.
“வரலாறு காணாத அளவில் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி கண்டுள்ளது. ஈரானில் போர்ச் சூழல் உக்கிரமாக நீடித்து வருவதால் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 111 டாலருக்கு மேலாக விற்கப்படுகிறது. சர்வதேச சந்தைகள் சரிந்து வருகின்றன. இந்த தாக்கங்களே இந்திய பங்குச் சந்தையிலும் எதிரொலிக்கிறது,” என்று வர்த்தக நிபுணர்கள் கூறுகின்றனர்.
மும்பை பங்குச் சந்தையின் இன்றைய முற்பகல் வர்த்தகத்தில் பவர் கிரிட் கார்ப்பரேஷன் நிறுவனப் பங்குகள் மட்டும் ஏற்றம் கண்டன. ஏனைய நிறுவனப் பங்குகளும் சரிவை சந்தித்தன.
இன்று முற்பகல் 11.30 மணியளவில் சென்செக்ஸ் 1,770.61 புள்ளிகள் சரிந்து 74,933.52 ஆகவும், நிஃப்டி 542.40 புள்ளிகள் சரிந்து 23,232.65 ஆகவும் இருந்தது.
காரணம் என்ன?
அமெரிக்க பங்குச் சந்தை சரிவுடன் நிறைவுற்றது. ஆசிய பங்குச் சந்தைகளைப் பொறுத்தவரையில் ஷாங்காய், ஜப்பான், தென் கொரியா மற்றும் ஹாங்காங்கில் சரிவே நிலவுகிறது. வரலாறு காணாத அளவில் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி கண்டுள்ளது. ஈரானில் போர்ச் சூழல் உக்கிரமாக நீடித்து வருவதால் கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 111 டாலருக்கு மேலாக விற்கப்படுகிறது. சர்வதேச சந்தைகள் சரிந்து வருகின்றன. இந்த தாக்கங்களே இந்திய பங்குச் சந்தையிலும் எதிரொலிக்கிறது.
ஏறுமுகம் காணும் பங்குகள்:
பவர் கிரிட் கார்ப்பரேஷன்
இறங்கு முகம் காணும் பங்குகள்:
அதானி போர்ட்ஸ்
இண்டஸ்இண்ட் பேங்க்
டைடன் கம்பெனி
டெக் மஹிந்திரா
எஸ்பிஐ
ஹெச்சிஎல் டெக்னலாஜிஸ்
டிசிஎஸ்
இன்போசிஸ்
பாரதி ஏர்டெல்
சன் பார்மா
எடர்னல்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
எம் அண்ட் எம்
எல் அண்ட் டி
மாருதி சுசுகி
பஜாஜ் ஃபின்சர்வ்
ஏசியன் பெயின்ட்ஸ்
அல்ட்ராடெக் சிமென்ட்ஸ்
டாடா மோட்டாரஸ்
ஆக்ஸிஸ் பேங்க்
அல்ட்ராடெக் சிமென்ட்ஸ்
நெஸ்லே இந்தியா
என்டிபிசி
ஐடிசி
டாடா ஸ்டீல்
கோடக் மஹிந்திரா பேங்க்
இந்துஸ்தான் யூனிலீவர்
பஜாஜ் ஃபைனான்ஸ்
ஐசிஐசிஐ பேங்க்
ஹெச்டிஎஃப்சி பேங்க்
ரூபாய் மதிப்பு
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.93.33 ஆக இருந்தது.
Edited by Induja Raghunathan