கச்சா எண்ணெய் விலை உயர்வு, ரூபாய் மதிப்பு கடும் சரிவு உள்ளிட்ட பின்புலத்தில் மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தையில் வீழ்ச்சிப் போக்கு நீடிக்கிறது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 708.38 புள்ளிகள் சரிந்து 75,326.04 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 222.05 புள்ளிகள் சரிந்து 23,417.10 ஆக இருந்தது.
“ஈரான் மீதான அமெரிக்க, இஸ்ரேல் போர் தாக்கத்தால் எரிபொருள் விநியோகம் தடைபட்டுள்ளது. குறிப்பாக, கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 100 டாலர்களை கடந்துள்ளது. ரூபாய் மதிப்பும் வரலாறு காணாத வீழ்ச்சி கண்டுள்ளது. இவை பங்குச் சந்தையிலும் எதிரொலித்து வருகின்றன,” என்று வர்த்தக நிபுணர்கள் கூறுகின்றனர்.
மும்பை பங்குச் சந்தையின் இன்றைய முற்பகல் வர்த்தகத்தில் இந்துஸ்தான் யூனிலீவர், பாரதி ஏர்டெல், என்டிபிசி, நெஸ்லே இந்தியா, பவர் கிரிட் கார்ப்பரேஷன் நிறுவனப் பங்குகள் மட்டுமே ஏற்றம் கண்டிருந்தன. ஏனைய பல்வேறு நிறுவனப் பங்குகளும் சரிவை சந்தித்தன.
இன்று பிற்பகல் 12.30 மணியளவில் சென்செக்ஸ் 1,171.33 புள்ளிகள் சரிந்து 74,863.09 ஆகவும், நிஃப்டி 402.40 புள்ளிகள் சரிந்து 23,236.75 ஆகவும் இருந்தது.
காரணம் என்ன?
அமெரிக்க பங்குச் சந்தை வீழ்ச்சியுடன் நிறைவுற்றது. ஆசிய பங்குச் சந்தைகளைப் பொறுத்தவரையில் ஜப்பான், தென் கொரியா, ஷாங்காய் மற்றும் ஹாங்காங்கில் சரிவே நிலவுகிறது. ஈரான் மீதான அமெரிக்க, இஸ்ரேல் போர் தாக்கத்தால் எரிபொருள் விநியோகம் தடைபட்டுள்ளது. குறிப்பாக, கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 100 டாலர்களை கடந்துள்ளது. ரூபாய் மதிப்பும் வரலாறு காணாத வீழ்ச்சி கண்டுள்ளது. இவை பங்குச் சந்தையிலும் எதிரொலித்து வருகின்றன.
ஏறுமுகம் காணும் பங்குகள்:
இந்துஸ்தான் யூனிலீவர்
பாரதி ஏர்டெல்
என்டிபிசி
நெஸ்லே இந்தியா
பவர் கிரிட் கார்ப்பரேஷன்
இறங்கு முகம் காணும் பங்குகள்:
டெக் மஹிந்திரா
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்
சன் பார்மா
ஹெச்டிஎஃப்சி பேங்க்
டைடன் கம்பெனி
அதானி போர்ட்ஸ்
டாடா ஸ்டீல்
ஐடிசி
டிசிஎஸ்
எடர்னல்
இன்போசிஸ்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
இண்டஸ்இண்ட் பேங்க்
எம் அண்ட் எம்
பஜாஜ் ஃபைனான்ஸ்
எல் அண்ட் டி
மாருதி சுசுகி
ஐசிஐசிஐ பேங்க்
பஜாஜ் ஃபின்சர்வ்
ஏசியன் பெயின்ட்ஸ்
அல்ட்ராடெக் சிமென்ட்ஸ்
கோடக் மஹிந்திரா பேங்க்
டாடா மோட்டாரஸ்
ஆக்ஸிஸ் பேங்க்
எஸ்பிஐ
ரூபாய் மதிப்பு
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.92.47 ஆக இருந்தது.
Edited by Induja Raghunathan