Stock News: மேற்கு ஆசிய பதற்றம் - இந்திய பங்குச் சந்தையில் சரிவு!

12:13 PM Aug 07, 2026 | Jai s

மேற்கு ஆசிய பதற்றம் தாக்கத்தால் மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தையில் மீண்டும் சரிவு ஏற்பட்டுள்ளது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 235.36 புள்ளிகள் சரிந்து 78,699.80 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 24.30 புள்ளிகள் சரிந்து 24,608.25 ஆக இருந்தது.

“மேற்கு ஆசியாவில் மீண்டும் போர் பதற்றம் நிலவுவதால் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. இதன் தாக்கத்தால், மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தையில் சரிவுப் போக்கு நிலவுகிறது,” என நிபுணர்கள் கூறுகின்றனர்.

மும்பை பங்குச் சந்தையின் இன்றைய முற்பகல் வர்த்தகத்தில் நெஸ்லே இந்தியா, டிசிஎஸ், டாடா மோட்டார்ஸ், எம் அண்ட் எம் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் ஏற்றம் கண்டிருந்தன. ஐடிசி, அதானி போர்ட்ஸ், ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ், ஹெச்டிஎஃப்சி பேங்க் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் சரிவை சந்தித்தன.

இன்று முற்பகல் 11 மணியளவில் சென்செக்ஸ் 384.55 புள்ளிகள் சரிந்து 78,570.21 ஆகவும், நிஃப்டி 52.45 புள்ளிகள் சரிந்து 24,583.55 ஆகவும் இருந்தது.

காரணம் என்ன?

அமெரிக்க பங்குச் சந்தை சரிவுடன் நிறைவுற்றது. ஆசிய பங்குச் சந்தைகளில் கலவையான போக்கு நிலவுகிறது. மேற்கு ஆசியாவில் மீண்டும் போர் பதற்றம் நிலவுவதால் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. இதன் தாக்கத்தால், மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தையில் சரிவுப் போக்கு நிலவுகிறது.

ஏறுமுகம் காணும் பங்குகள்:

நெஸ்லே இந்தியா

டிசிஎஸ்

டாடா மோட்டார்ஸ்

எம் அண்ட் எம்

டெக் மஹிந்திரா

இன்போசிஸ்

இந்துஸ்தான் யூனிலீவர்

எஸ்பிஐ

இண்டஸ்இண்ட் பேங்க்

என்டிபிசி

இறங்கு முகம் காணும் பங்குகள்:

ஐடிசி

அதானி போர்ட்ஸ்

ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்

ஹெச்டிஎஃப்சி பேங்க்

எடர்னல்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

டைடன் கம்பெனி

ஐசிஐசிஐ பேங்க்

பஜாஜ் ஃபைனான்ஸ்

எல் அண்ட் டி

சன் பார்மா

டாடா ஸ்டீல்

பாரதி ஏர்டெல்

ஏசியன் பெயின்ட்ஸ்

கோடக் மஹிந்திரா பேங்க்

பஜாஜ் ஃபின்சவ்

மாருதி சுசுகி

அல்ட்ராடெக் சிமென்ட்ஸ்

ஆக்சிஸ் பேங்க்

பவர் கிரிட் கார்ப்பரேஷன்

ரூபாய் மதிப்பு:

இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.95.25 ஆக இருந்தது.


Edited by Induja Raghunathan