Stock News: அமெரிக்கா vs ஈரான் தாக்கம் - சென்செக்ஸ் 300 புள்ளிகள் சரிவு!

12:30 PM Aug 14, 2026 | Jai s

மேற்கு ஆசிய பதற்றம் மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலியாக, மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தையில் தொடர்ந்து இன்றும் சரிவுப் போக்கு நீடிக்கிறது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 298.75 புள்ளிகள் சரிந்து 77,760.21 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 74.20 புள்ளிகள் சரிந்து 24,321.90 ஆக இருந்தது.

“அமெரிக்கா - ஈரான் இடையே மோதல் வலுத்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி முடக்கத்தால் கச்சா எண்ணெய் விலை மேலும் அதிகரித்துள்ளது. இதன் தாக்கத்தால் இந்திய பங்குச் சந்தையில் வீழ்ச்சி தொடர்கிறது,” என நிபுணர்கள் கூறுகின்றனர்.

மும்பை பங்குச் சந்தையின் இன்றைய முற்பகல் வர்த்தகத்தில் அதானி போர்ட்ஸ், பாரதி ஏர்டெல், நெஸ்லே இந்தியா, டைடன் கம்பெனி உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் ஏற்றம் கண்டிருந்தன. ஐடிசி, மாருதி சுசுகி, டிசிஎஸ், எம் அண்ட் எம், டாடா ஸ்டீல் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் சரிவை சந்தித்தன.

இன்று நண்பகல் 12 மணியளவில் சென்செக்ஸ் 295.97 புள்ளிகள் சரிந்து 77,783.99 ஆகவும், நிஃப்டி 60.70 புள்ளிகள் சரிந்து 24,335.15 ஆகவும் இருந்தது.

காரணம் என்ன?

அமெரிக்க பங்குச் சந்தை ஏற்றத்துடன் நிறைவுற்றது. ஆசிய பங்குச் சந்தைகளில் கலவையான போக்கு நிலவுகிறது. அமெரிக்கா - ஈரான் இடையே மோதல் வலுத்துள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி முடக்கத்தால் கச்சா எண்ணெய் விலை மேலும் அதிகரித்துள்ளது. இதன் தாக்கத்தால் இந்திய பங்குச் சந்தையில் வீழ்ச்சி தொடர்கிறது.

ஏறுமுகம் காணும் பங்குகள்:

அதானி போர்ட்ஸ்

பாரதி ஏர்டெல்

நெஸ்லே இந்தியா

டைடன் கம்பெனி

எடர்னல்

ஹெச்டிஎஃப்சி பேங்க்

இறங்கு முகம் காணும் பங்குகள்:

டாடா மோட்டார்ஸ்

டெக் மஹிந்திரா

இண்டஸ்இண்ட் பேங்க்

பஜாஜ் ஃபின்சர்வ்

என்டிபிசி

பஜாஜ் ஃபைனான்ஸ்

எஸ்பிஐ

சன் பார்மா

இந்துஸ்தான் யூனிலீவர்

ஏசியன் பெயின்ட்ஸ்

எல் அண்ட் டி

ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்

ஐடிசி

மாருதி சுசுகி

டிசிஎஸ்

எம் அண்ட் எம்

டாடா ஸ்டீல்

கோடக் மஹிந்திரா பேங்க்

ஆக்சிஸ் பேங்க்

ஐசிஐசிஐ பேங்க்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

பவர் கிரிட் கார்ப்பரேஷன்

இன்போசிஸ்

அல்ட்ராடெக் சிமென்ட்ஸ்

ரூபாய் மதிப்பு:

இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.95.44 ஆக இருந்தது.


Edited by Induja Raghunathan