மேற்கு ஆசிய பதற்றம் எதிரொலியாக, மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தையில் மீண்டும் வீழ்ச்சிப் போக்கு நிலவுகிறது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 320.14 புள்ளிகள் சரிந்து 78,204.40 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 94.35 புள்ளிகள் சரிந்து 24,490.85 ஆக இருந்தது.
“மேற்கு ஆசியாவில் மீண்டும் போர் பதற்றம் நிலவுகிறது. கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. இதன் தாக்கத்தால் மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தையில் சரிவுப் போக்கு நிலவுகிறது,” என நிபுணர்கள் கூறுகின்றனர்.
மும்பை பங்குச் சந்தையின் இன்றைய முற்பகல் வர்த்தகத்தில் அதானி போர்ட்ஸ், டாடா மோட்டார்ஸ், இன்போசிஸ், டிசிஎஸ் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் ஏற்றம் கண்டிருந்தன. ஹெச்டிஎஃப்சி பேங்க், ஐசிஐசிஐ பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ், எல் அண்ட் டி உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் சரிவை சந்தித்தன.
இன்று முற்பகல் 10.45 மணியளவில் சென்செக்ஸ் 356.59 புள்ளிகள் சரிந்து 78,185.85 ஆகவும், நிஃப்டி 108.35 புள்ளிகள் சரிந்து 24,475.45 ஆகவும் இருந்தது.
காரணம் என்ன?
அமெரிக்க பங்குச் சந்தை சரிவுடன் நிறைவுற்றது. ஆசிய பங்குச் சந்தைகளில் சரிவுப் போக்கு நிலவுகிறது. மேற்கு ஆசியாவில் மீண்டும் போர் பதற்றம் நிலவுகிறது. கச்சா எண்ணெய் விலை அதிகரித்துள்ளது. இதன் தாக்கத்தால் மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தையில் சரிவுப் போக்கு நிலவுகிறது.
ஏறுமுகம் காணும் பங்குகள்:
டைடன் கம்பெனி
பஜாஜ் ஃபின்சர்வ்
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்
டெக் மஹிந்திரா
அதானி போர்ட்ஸ்
டாடா மோட்டார்ஸ்
இன்போசிஸ்
டிசிஎஸ்
மாருதி சுசுகி
இறங்கு முகம் காணும் பங்குகள்:
ஹெச்டிஎஃப்சி பேங்க்
ஐசிஐசிஐ பேங்க்
பஜாஜ் ஃபைனான்ஸ்
எல் அண்ட் டி
சன் பார்மா
டாடா ஸ்டீல்
ஏசியன் பெயின்ட்ஸ்
அல்ட்ராடெக் சிமென்ட்ஸ்
ஆக்சிஸ் பேங்க்
எம் அண்ட் எம்
இன்போசிஸ்
இந்துஸ்தான் யூனிலீவர்
எடர்னல்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
இண்டஸ்இண்ட் பேங்க்
கோடக் மஹிந்திரா பேங்க்
ஐடிசி
நெஸ்லே இந்தியா
பாரதி ஏர்டெல்
பவர் கிரிட் கார்ப்பரேஷன்
எஸ்பிஐ
என்டிபிசி
ரூபாய் மதிப்பு:
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.95.45 ஆக இருந்தது.
Edited by Induja Raghunathan