+

Stock News: சென்செக்ஸ் 500 புள்ளிகள் சரிவு - இறங்கு முகம் காணும் பங்குகள்!

அமெரிக்கா - ஈரான் இடையே மோதல் வலுத்துள்ளதால் ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம் நீடிக்கிறது. இதனால், கச்சா எண்ணெய் விலை மேலும் அதிகரித்துள்ளது. இதன் தாக்கத்தால் இந்திய பங்குச் சந்தையில் வீழ்ச்சி தொடர்கிறது.

மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தையில் சரிவுப் போக்கு நிலவுகிறது. பல நிறுவனப் பங்குகள் இறங்கு முகம் கண்டுள்ளன.

மும்பை பங்குச் சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 284.85 புள்ளிகள் சரிந்து 77,717.05 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 69.25 புள்ளிகள் சரிந்து 24,297.05 ஆக இருந்தது.

“அமெரிக்கா - ஈரான் இடையே மோதல் வலுத்துள்ளதால் ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம் நீடிக்கிறது. இதனால், கச்சா எண்ணெய் விலை மேலும் அதிகரித்துள்ளது. இதன் தாக்கத்தால் இந்திய பங்குச் சந்தையில் வீழ்ச்சி தொடர்கிறது,” என நிபுணர்கள் கூறுகின்றனர்.

மும்பை பங்குச் சந்தையின் இன்றைய முற்பகல் வர்த்தகத்தில் பஜாஜ் ஃபைனான்ஸ், எடர்னல், டைடன் கம்பெனி ஆகிய நிறுவனப் பங்குகள் ஏற்றம் கண்டிருந்தன. ஏனைய பெரும்பாலான நிறுவனப் பங்குகள் சரிவை சந்தித்தன.

இன்று முற்பகல் 11.30 மணியளவில் சென்செக்ஸ் 499.89 புள்ளிகள் சரிந்து 77,509.36 ஆகவும், நிஃப்டி 126.45 புள்ளிகள் சரிந்து 24,239.55 ஆகவும் இருந்தது.
sensex today

காரணம் என்ன?

அமெரிக்க பங்குச் சந்தை வெள்ளிக்கிழமை சரிவுடன் நிறைவுற்றது. ஆசிய பங்குச் சந்தைகளில் பாதகப் போக்கு நிலவுகிறது. அமெரிக்கா - ஈரான் இடையே மோதல் வலுத்துள்ளதால் ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம் நீடிக்கிறது. இதனால், கச்சா எண்ணெய் விலை மேலும் அதிகரித்துள்ளது. இதன் தாக்கத்தால் இந்திய பங்குச் சந்தையில் வீழ்ச்சி தொடர்கிறது

ஏறுமுகம் காணும் பங்குகள்:

பஜாஜ் ஃபைனான்ஸ்

எடர்னல்

டைடன் கம்பெனி

இறங்கு முகம் காணும் பங்குகள்:

அதானி போர்ட்ஸ்

பாரதி ஏர்டெல்

நெஸ்லே இந்தியா

ஹெச்டிஎஃப்சி பேங்க்

டாடா மோட்டார்ஸ்

டெக் மஹிந்திரா

இண்டஸ்இண்ட் பேங்க்

பஜாஜ் ஃபின்சர்வ்

என்டிபிசி

எஸ்பிஐ

சன் பார்மா

இந்துஸ்தான் யூனிலீவர்

ஏசியன் பெயின்ட்ஸ்

எல் அண்ட் டி

ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்

ஐடிசி

மாருதி சுசுகி

டிசிஎஸ்

எம் அண்ட் எம்

டாடா ஸ்டீல்

கோடக் மஹிந்திரா பேங்க்

ஆக்சிஸ் பேங்க்

ஐசிஐசிஐ பேங்க்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

பவர் கிரிட் கார்ப்பரேஷன்

இன்போசிஸ்

அல்ட்ராடெக் சிமென்ட்ஸ்

ரூபாய் மதிப்பு:

இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.95.55 ஆக இருந்தது.


Edited by Induja Raghunathan

facebook twitter