+

Stock News: நிதானம் காக்கும் முதலீட்டாளர்கள் - பங்குச் சந்தையில் தடுமாற்றம்!

ஆசிய பங்குச் சந்தைகளில் பாதகமான போக்கு நிலவுகிறது. இதன் எதிரொலியாக, இந்திய முதலீட்டாளர்கள் நிதானம் காத்து வருவதால் மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தையில் தடுமாற்றம் நிலவுகிறது.

இந்திய முதலீட்டாளர்கள் நிதானம் காட்டி வருவதால், மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தையில் தடுமாற்றம் நிலவுகிறது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 57.43 புள்ளிகள் சரிந்து 77,061.94 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 31.6 புள்ளிகள் சரிந்து 24,071.30 ஆக இருந்தது.

“ஆசிய பங்குச் சந்தைகளில் பாதகமான போக்கு நிலவுகிறது. இதன் எதிரொலியாக, இந்திய முதலீட்டாளர்கள் நிதானம் காத்து வருவதால் மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தையில் தடுமாற்றம் நிலவுகிறது,” என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

மும்பை பங்குச் சந்தையின் இன்றைய முற்பகல் வர்த்தகத்தில் சன் பார்மா, ஐசிஐசிஐ பேங்க், எடர்னல், எல் அண்ட் டி உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் ஏற்றம் கண்டிருந்தன. என்டிபிசி, அல்ட்ராடெக் சிமென்ட்ஸ், எஸ்பிஐ, அதானி போர்ட்ஸ் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் சரிவை சந்தித்தன.

இன்று முற்பகல் 11 மணியளவில் சென்செக்ஸ் 6.28 புள்ளிகள் உயர்ந்து 77,100.35 ஆகவும், நிஃப்டி 3.70 புள்ளிகள் குறைந்து 24,099.20 ஆகவும் இருந்தது.
sensex

காரணம் என்ன?

ஆசிய பங்குச் சந்தைகளில் பாதகமான போக்கு நிலவுகிறது. வெளிநாட்டு முதலீடுகளின் வரத்தும் குறைந்துள்ளது. இதன் எதிரொலியாக, இந்திய முதலீட்டாளர்கள் நிதானம் காத்து வருவதால் மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தையில் தடுமாற்றம் நிலவுகிறது.

ஏறுமுகம் காணும் பங்குகள்:

சன் பார்மா

ஐசிஐசிஐ பேங்க்

எடர்னல்

எல் அண்ட் டி

ஏசியன் பெயின்ட்ஸ்

பஜாஜ் ஃபின்சர்வ்

ஆக்சிஸ் பேங்க்

டைடன் கம்பெனி

ஹெச்டிஎஃப்சி பேங்க்

கோடக் மஹிந்திரா பேங்க்

பவர் கிரிட் கார்ப்பரேஷன்

எம் அண்ட் எம்

பாரதி ஏர்டெல்

நெஸ்லே இந்தியா

ஐடிசி

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

பஜாஜ் ஃபைனான்ஸ்

இறங்கு முகம் காணும் பங்குகள்:

என்டிபிசி

அல்ட்ராடெக் சிமென்ட்ஸ்

எஸ்பிஐ

அதானி போர்ட்ஸ்

மாருதி சுசுகி

இண்டஸ்இண்ட் பேங்க்

இந்துஸ்தான் யூனிலீவர்

ஹெச்சிஎல் டெக்னலாஜிஸ்

டாடா ஸ்டீல்

டாடா மோட்டார்ஸ்

டெக் மஹிந்திரா

டிசிஎஸ்

இன்போசிஸ்

ரூபாய் மதிப்பு

இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.94.61 ஆக இருந்தது.


Edited by Induja Raghunathan

facebook twitter