ஈரான் - இஸ்ரேல் மோதல் தணிவது, கச்சா எண்ணெய் விலை குறைவு உள்ளிட்ட தாக்கத்தால், இந்திய பங்குச் சந்தை மீண்டெழ ஆரம்பித்துள்ளது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 350.57 புள்ளிகள் உயர்ந்து 73,874.83 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 114.50 புள்ளிகள் உயர்ந்து 23,237.50 ஆக இருந்தது.
“ஈரான் - இஸ்ரேல் மோதல் போக்கு தணிந்துள்ளது, கச்சா எண்ணெய் விலை குறைவு, சர்வதேச பங்குச் சந்தைகளில் நிலவும் சாதக போக்கு எதிரொலியாக இந்திய பங்குச் சந்தையிலும் பச்சை விளக்கு எரியத் தொடங்கியுள்ளது,” என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
மும்பை பங்குச் சந்தையின் இன்றைய முற்பகல் வர்த்தகத்தில் எஸ்பிஐ, ஆக்சிஸ் பேங்க், ஐசிஐசிஐ பேங்க், ஏசியன் பெயின்ட்ஸ், எல் அண்ட் டி உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் மட்டுமே ஏற்றம் கண்டிருந்தன. டாடா ஸ்டீல், டிசிஎஸ், அதானி போர்ட்ஸ், ஹெச்டிஎஃப்சி பேங்க் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் சரிவை சந்தித்தன.
இன்று முற்பகல் 11.30 மணியளவில் சென்செக்ஸ் 5.16 புள்ளிகள் உயர்ந்து 73,529.42 ஆகவும், நிஃப்டி 14.75 புள்ளிகள் உயர்ந்து 23,137.75 ஆகவும் இருந்தது.
காரணம் என்ன?
அமெரிக்க பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவுற்றது. ஆசிய பங்குச் சந்தைகளிலும் ஏற்றம் நிலவுகிறது. ஈரான் - இஸ்ரேல் மோதல் போக்கு தணிந்துள்ளது, கச்சா எண்ணெய் விலை குறைவு, சர்வதேச பங்குச் சந்தைகளில் நிலவும் சாதக போக்கு எதிரொலியாக இந்திய பங்குச் சந்தையிலும் பச்சை விளக்கு எரியத் தொடங்கியுள்ளது.
ஏறுமுகம் காணும் பங்குகள்:
எம் அண்ட் எம்
இண்டஸ்இண்ட் பேங்க்
பஜாஜ் ஃபின்சர்வ்
பஜாஜ் ஃபைனான்ஸ்
எஸ்பிஐ
ஆக்சிஸ் பேங்க்
ஐசிஐசிஐ பேங்க்
ஏசியன் பெயின்ட்ஸ்
எல் அண்ட் டி
நெஸ்லே இந்தியா
அல்ட்ராடெக் சிமென்ட்ஸ்
கோடக் மஹிந்திரா பேங்க்
சன் பார்மா
இந்துஸ்தான் யூனிலீவர்
ஐடிசி
மாருதி சுசுகி
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
டாடா மோட்டார்ஸ்
இறங்கு முகம் காணும் பங்குகள்:
டாடா ஸ்டீல்
டிசிஎஸ்
அதானி போர்ட்ஸ்
ஹெச்டிஎஃப்சி பேங்க்
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்
பாரதி ஏர்டெல்
டெக் மஹிந்திரா
இன்போசிஸ்
எடர்னல்
என்டிபிசி
பவர் கிரிட் கார்ப்பரேஷன்
டைடன் கம்பெனி
ரூபாய் மதிப்பு
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.95.60 ஆக இருந்தது.
Edited by Induja Raghunathan