வெளிநாட்டு முதலீடுகளின் வரத்து வெகுவாக குறைந்ததன் எதிரொலியாக, பங்குச் சந்தையில் தடுமாற்றமான போக்குதான் நீடிக்கிறது. சென்சென்ஸ், நிஃப்டி புள்ளிகள் கிரீன், ரெட் என மாறி மாறி நிலைகொண்டு வருகின்றன.
மும்பை பங்குச் சந்தையில் இன்று (ஜன.10) காலை வர்த்தகம் தொடங்கும்போது, சென்செக்ஸ் 270.76 புள்ளிகள் உயர்ந்து 77,890.97 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 69.5 புள்ளிகள் உயர்ந்து 23,596 ஆக இருந்தது.
வர்த்தக தொடக்கத்தில் ஏறுமுகம் கண்டதால் உத்வேகம் அடைந்த முதலீட்டாளர்களின் மகிழ்ச்சி நீடிக்கவில்லை. பச்சை விளக்குகளுக்குப் பின் மீண்டும் சிவப்பு விளக்குகள் எரியத் தொடங்கின.
இன்று முற்பகல் 11 மணியளவில் சென்செக்ஸ் 126.39 புள்ளிகள் (0.16%) சரிந்து 77,493.82 ஆகவும், நிஃப்டி 59.00 புள்ளிகள் (0.25%) சரிந்து 23,467.50 ஆகவும் இருந்தது.
காரணம் என்ன?
அமெரிக்க பங்குச் சந்தை இயங்காத நிலையில், ஆசிய பங்குச் சந்தைகளைப் பொறுத்தவரையில் சியோல் பங்குச் சந்தையில் மட்டும் ஏற்றம் உள்ளது. ஹாங்காங், டோக்கியோ மற்றும் ஷாங்காய் பங்குச் சந்தையில் இறக்கம் நிலவுகிறது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் காட்டும் ஆர்வம் வெகுவாக குறைந்திருப்பது இந்தியப் பங்குச் சந்தை வீழ்ச்சிக்கு முக்கியக் காரணம்.
ஏற்றம் காணும் பங்குகள்:
டிசிஎஸ்
டெக் மஹிந்திரா
விப்ரோ
இன்ஃபோசிஸ்
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்
பஜாஜ் ஃபின்சர்வ்
இறங்கு முகம் காணும் பங்குகள்:
இந்துஸ்தான் யூனிலீவர்
பஜாஜ் ஃபைனான்ஸ்
நெஸ்லே இந்தியா
ஹெச்டிஎஃப்சி பேங்க்
பாரதி ஏர்டெல்
டாடா மோட்டார்ஸ்
ஐடிசி
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
ஏசியன் பெயின்ட்ஸ்
டைடன் கம்பெனி
மாருதி சுசுகி
ரூபாய் மதிப்பு
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 1 பைசா குறைந்து ரூ.85.87 ஆக இருந்தது.
Edited by Induja Raghunathan