
மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியதில் இருந்தே ஏற்றம் நிலவுகிறது.
மும்பை பங்குச் சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 397.59 புள்ளிகள் உயர்ந்து 78,826.54 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 62.7 புள்ளிகள் உயர்ந்து 24,677.60 ஆக இருந்தது.
“இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய கொள்கைகள் மீதான எதிர்பார்ப்பின் தாக்கத்தால், மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தையில் எழுச்சி ஏற்பட்டது,” என நிபுணர்கள் கூறுகின்றனர்.
மும்பை பங்குச் சந்தையின் இன்றைய முற்பகல் வர்த்தகத்தில் சன் பார்மா, டிசிஎஸ், டைடன் கம்பெனி ஆகிய நிறுவன பங்குகள் மட்டும் சரிவை சந்தித்தன. ஏனைய நிறுவனப் பங்குகள் ஏற்றம் கண்டன.
இன்று முற்பகல் 10.15 மணியளவில் சென்செக்ஸ் 334.93 புள்ளிகள் உயர்ந்து 78,763.88 ஆகவும், நிஃப்டி 1.10 புள்ளிகள் சரிந்து 24,613.80 ஆகவும் இருந்தது.

காரணம் என்ன?
அமெரிக்க பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவுற்றது. ஆசிய பங்குச் சந்தைகளில் கலவையான போக்கு நிலவுகிறது. இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய கொள்கைகள் மீதான எதிர்பார்ப்பின் தாக்கத்தால், மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தையில் எழுச்சி ஏற்பட்டது
ஏறுமுகம் காணும் பங்குகள்:
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
ஐடிசி
டெக் மஹிந்திரா
இந்துஸ்தான் யூனிலீவர்
ஹெச்டிஎஃப்சி பேங்க்
இன்போசிஸ்
என்டிபிசி
பாரதி ஏர்டெல்
மாருதி சுசுகி
டாடா மோட்டார்ஸ்
அதானி போர்ட்ஸ்
பஜாஜ் ஃபைனான்ஸ்
பஜாஜ் ஃபின்சர்வ்
எம் அண்ட் எம்
கோடக் மஹிந்திரா பேங்க்
டாடா ஸ்டீல்
எஸ்பிஐ
அதானி போர்ட்ஸ்
ஆக்சிஸ் பேங்க்
ஐசிஐசிஐ பேங்க்
எல் அண்ட் டி
பவர் கிரிட் கார்ப்பரேஷன்
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்
நெஸ்லே இந்தியா
இண்டஸ்இண்ட் பேங்க்
எடர்னல்
இறங்கு முகம் காணும் பங்குகள்:
சன் பார்மா
டிசிஎஸ்
டைடன் கம்பெனி
ரூபாய் மதிப்பு:
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.95.06 ஆக இருந்தது.
Edited by Induja Raghunathan