+

Stock News: சரிந்த கச்சா எண்ணெய் விலை - சென்செக்ஸ் 600+ புள்ளிகள் உயர்வு!

ஈரானில் மீண்டும் அமைதி நிலவுவதால், பேரல் கச்சா எண்ணெய் விலை 83 டாலராக சரிந்துள்ளது. இதன் தாக்கத்தால் இந்திய பங்குச் சந்தையிலும் ஏற்றம் காணப்படுகிறது.

கச்சா எண்ணெய் விலை சரிவின் தாக்கத்தால், மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தையில் பெரும் எழுச்சி நிலவுகிறது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 470.06 புள்ளிகள் உயர்ந்து 78,564.70 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 150 புள்ளிகள் உயர்ந்து 24,532.95 ஆக இருந்தது.

“ஈரானில் மீண்டும் அமைதி நிலவுவதால், பேரல் கச்சா எண்ணெய் விலை 83 டாலராக சரிந்துள்ளது. இதன் தாக்கத்தால் இந்திய பங்குச் சந்தையிலும் ஏற்றம் காணப்படுகிறது,” என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

மும்பை பங்குச் சந்தையின் இன்றைய முற்பகல் வர்த்தகத்தில் டாடா மோட்டார்ஸ், அதானி போர்ட்ஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், எம் அண்ட் எம் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் ஏற்றம் கண்டுள்ளன. என்டிபிசி, டெக் மஹிந்திரா, பாரதி ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் சரிவை சந்தித்தன.

இன்று முற்பகல் 11 மணியளவில் சென்செக்ஸ் 634.45 புள்ளிகள் உயர்ந்து 78,729.09 ஆகவும், நிஃப்டி 209.90 புள்ளிகள் உயர்ந்து 24,593.50 ஆகவும் இருந்தது.
sensex today

காரணம் என்ன?

அமெரிக்க பங்குச் சந்தை வெள்ளிக்கிழமை உயர்வுடன் நிறைவுற்றது. ஆசிய பங்குச் சந்தைகளில் சாதகப் போக்கு நிலவுகிறது. ஈரானில் மீண்டும் அமைதி நிலவுவதால், பேரல் கச்சா எண்ணெய் விலை 83 டாலராக சரிந்துள்ளது. இதன் தாக்கத்தால் இந்திய பங்குச் சந்தையிலும் ஏற்றம் காணப்படுகிறது.

ஏறுமுகம் காணும் பங்குகள்:

டாடா மோட்டார்ஸ்

அதானி போர்ட்ஸ்

பஜாஜ் ஃபைனான்ஸ்

பஜாஜ் ஃபின்சர்வ்

எம் அண்ட் எம்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

கோடக் மஹிந்திரா பேங்க்

டாடா ஸ்டீல்

எஸ்பிஐ

அதானி போர்ட்ஸ்

ஆக்சிஸ் பேங்க்

டைடன் கம்பெனி

ஐசிஐசிஐ பேங்க்

எல் அண்ட் டி

இந்துஸ்தான் யூனிலீவர்

பவர் கிரிட் கார்ப்பரேஷன்

ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்

நெஸ்லே இந்தியா

ஹெச்டிஎஃப்சி பேங்க்

இண்டஸ்இண்ட் பேங்க்

ஐடிசி

எடர்னல்

இன்போசிஸ்

டிசிஎஸ்

இறங்கு முகம் காணும் பங்குகள்:

என்டிபிசி

டெக் மஹிந்திரா

பாரதி ஏர்டெல்

மாருதி சுசுகி

சன் பார்மா

ரூபாய் மதிப்பு:

இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.95.15 ஆக இருந்தது.


Edited by Induja Raghunathan

facebook twitter