Stock News: பங்குச் சந்தையில் எழுச்சி - சென்செக்ஸ் 750+ புள்ளிகள் உயர்வு!

12:45 PM Jun 25, 2026 | Jai s

மும்பை மற்றும் தெசிய பங்குச் சந்தையில் இன்று இரண்டாவது நாளாக எழுச்சி நிலவுகிறது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 440.23 புள்ளிகள் உயர்ந்து 77,435.76 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 137.80 புள்ளிகள் உயர்ந்து 24,147.60 ஆக இருந்தது.

“கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 72.29 டாலராக சரிவுற்றது, சர்வதேச சந்தை நிலவரம் உள்ளிட்ட காரணங்களால் மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தையில் தொடர்ந்து ஏற்றம் நிலவுகிறது,” என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

மும்பை பங்குச் சந்தையின் இன்றைய நண்பகல் வர்த்தகத்தில் ஆக்சிஸ் பேங்க், ஹெச்டிஎஃப்சி பேங்க், கோடக் மஹிந்திரா பேங்க், எம் அண்ட் எம் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் ஏற்றம் கண்டிருந்தன. என்டிபிசி, பஜாஜ் ஃபைனான்ஸ், எடர்னல், இன்போசிஸ் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் சரிவை சந்தித்தன.

இன்று நண்பகல் 12 மணியளவில் சென்செக்ஸ் 763.71 புள்ளிகள் உயர்ந்து 77,754.93 ஆகவும், நிஃப்டி 225.20 புள்ளிகள் உயர்ந்து 24,246.85 ஆகவும் இருந்தது.

காரணம் என்ன?

அமெரிக்க பங்குச் சந்தை ஏற்றத்துடன் நிறைவுற்றது. ஆசிய பங்குச் சந்தைகளில் பெரும்பாலும் சாதகப் போக்கு நிலவுகிறது. கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 72.29 டாலராக சரிவுற்றது, சர்வதேச சந்தை நிலவரம் உள்ளிட்ட காரணங்களால் மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தையில் தொடர்ந்து ஏற்றம் நிலவுகிறது.

ஏறுமுகம் காணும் பங்குகள்:

ஆக்சிஸ் பேங்க்

ஹெச்டிஎஃப்சி பேங்க்

கோடக் மஹிந்திரா பேங்க்

எம் அண்ட் எம்

நெஸ்லே இந்தியா

எஸ்பிஐ

அதானி போர்ட்ஸ்

டாடா ஸ்டீல்

டிசிஎஸ்

இண்டஸ்இண்ட் பேங்க்

அல்ட்ராடெக் சிமென்ட்ஸ்

ஹெச்சிஎல் டெக்னலாஜிஸ்

சன் பார்மா

ஐசிஐசிஐ பேங்க்

எல் அண்ட் டி

ஏசியன் பெயின்ட்ஸ்

பஜாஜ் ஃபின்சர்வ்

ஐடிசி

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

இந்துஸ்தான் யூனிலீவர்

டாடா மோட்டார்ஸ்

மாருதி சுசுகி

இறங்கு முகம் காணும் பங்குகள்:

என்டிபிசி

பஜாஜ் ஃபைனான்ஸ்

எடர்னல்

இன்போசிஸ்

டாடா ஸ்டீல்

பாரதி ஏர்டெல்

டெக் மஹிந்திரா

பவர் கிரிட் கார்ப்பரேஷன்

டைடன் கம்பெனி

ரூபாய் மதிப்பு

இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.94.48 ஆக இருந்தது.


Edited by Induja Raghunathan