மத்திய கிழக்கில் நீடிக்கும் பதற்றம் காரணமாக, மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தையில் பெரிய அளவில் இன்று வீழ்ச்சி இல்லை என்றாலும் கூட, தடுமாற்றம் நீடிக்கிறது. எனினும், ஒரு சில நிறுவனப் பங்குகள் மீண்டு வருகின்றன.
மும்பை பங்குச் சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 179.31 புள்ளிகள் சரிந்து 74,384.61 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 53.1 புள்ளிகள் சரிந்து 23,098 ஆக இருந்தது.
“ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் இடையே நீடிக்கும் போரால் மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், எரிபொருள் விநியோகம் பாதிப்பு, கச்சா எண்ணெய் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் பங்குச் சந்தையில் தொடர்ந்து தடுமாற்றம் காணப்படுகிறது,” என்று வர்த்தக நிபுணர்கள் கூறுகின்றனர்.
மும்பை பங்குச் சந்தையின் இன்றைய முற்பகல் வர்த்தகத்தில் அல்ட்ராடெக் சிமென்ட்ஸ், ஹெச்டிஎஃப்டி பேங்க், டாடா ஸ்டீல், ஐடிசி, நெஸ்லே இந்தியா, இந்துஸ்தான் யூனிலீவர், பஜாஜ் ஃபைனான்ஸ் ஆகிய நிறுவனப் பங்குகள் மட்டும் மீண்டு ஏற்றம் கண்டு வருகின்றன.
இன்று நண்பகல் 12 மணியளவில் சென்செக்ஸ் 55.21 புள்ளிகள் உயர்ந்து 74,508.71 ஆகவும், நிஃப்டி 4.15 புள்ளிகள் உயர்ந்து 23,155.25 ஆகவும் இருந்தது.
காரணம் என்ன?
அமெரிக்க பங்குச் சந்தை வீழ்ச்சியுடன் நிறைவுற்றது. ஆசிய பங்குச் சந்தைகளைப் பொறுத்தவரையில் ஜப்பான், தென் கொரியா, ஷாங்காய் மற்றும் ஹாங்காங்கில் சரிவே நிலவுகிறது. ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் இடையே நீடிக்கும் போரால் மத்திய கிழக்கில் நிலவும் பதற்றம், எரிபொருள் விநியோகம் பாதிப்பு, கச்சா எண்ணெய் விலை உயர்வு உள்ளிட்ட காரணங்களால் பங்குச் சந்தையில் தொடர்ந்து தடுமாற்றம் காணப்படுகிறது.
ஏறுமுகம் காணும் பங்குகள்:
அல்ட்ராடெக் சிமென்ட்ஸ்
ஹெச்டிஎஃப்டி பேங்க்
டாடா ஸ்டீல்
ஐடிசி
நெஸ்லே இந்தியா
இந்துஸ்தான் யூனிலீவர்
பஜாஜ் ஃபைனான்ஸ்
இறங்கு முகம் காணும் பங்குகள்:
பாரதி ஏர்டெல்
என்டிபிசி
பவர் கிரிட் கார்ப்பரேஷன்
டெக் மஹிந்திரா
ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்
சன் பார்மா
ஹெச்டிஎஃப்சி பேங்க்
டைடன் கம்பெனி
அதானி போர்ட்ஸ்
டிசிஎஸ்
எடர்னல்
இன்போசிஸ்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
இண்டஸ்இண்ட் பேங்க்
எம் அண்ட் எம்
எல் அண்ட் டி
மாருதி சுசுகி
ஐசிஐசிஐ பேங்க்
பஜாஜ் ஃபின்சர்வ்
ஏசியன் பெயின்ட்ஸ்
அல்ட்ராடெக் சிமென்ட்ஸ்
கோடக் மஹிந்திரா பேங்க்
டாடா மோட்டாரஸ்
ஆக்ஸிஸ் பேங்க்
எஸ்பிஐ
ரூபாய் மதிப்பு
இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.92.47 ஆக இருந்தது.
Edited by Induja Raghunathan