+

Stock News: பங்குச் சந்தையில் தொடரும் ஏற்றம் - சென்செக்ஸ் 200+ புள்ளிகள் உயர்வு!

சர்வதேச சந்தை நிலவரம், கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி உள்ளிட்ட காரணிகளால், மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தையில் ஏற்றம் நிலவுகிறது.

மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தையில் இரண்டாவது நாளாக இன்றும் ஏற்றம் தொடர்ந்துள்ளது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று காலையில் வர்த்தகம் தொடங்கும்போது சென்செக்ஸ் 201.43 புள்ளிகள் உயர்ந்து 78,782.43 ஆக இருந்தது. அதேவேளையில், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 16.35 புள்ளிகள் உயர்ந்து 24,641 ஆக இருந்தது.

“சர்வதேச சந்தை நிலவரம், கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி உள்ளிட்ட காரணிகளால், மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தையில் ஏற்றம் நிலவுகிறது,” என நிபுணர்கள் கூறுகின்றனர்.

மும்பை பங்குச் சந்தையின் இன்றைய முற்பகல் வர்த்தகத்தில் ஐசிஐசிஐ பேங்க், எஸ்பிஐ, பஜாஜ் ஃபைனான்ஸ், எல் அண்ட் டி உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் ஏற்றம் கண்டிருந்தன. இன்போசிஸ், ஆக்சிஸ் பேங்க், டிசிஎஸ், எம் அண்ட் எம் உள்ளிட்ட நிறுவனப் பங்குகள் சரிவை சந்தித்தன.

இன்று முற்பகல் 11.45 மணியளவில் சென்செக்ஸ் 214.23 புள்ளிகள் உயர்ந்து 78,795.23 ஆகவும், நிஃப்டி 8.35 புள்ளிகள் உயர்ந்து 24,633.00 ஆகவும் இருந்தது.
sensex today

காரணம் என்ன?

அமெரிக்க பங்குச் சந்தை சரிவுடன் நிறைவுற்றது. ஆசிய பங்குச் சந்தைகளில் கலவையான போக்கு நிலவுகிறது. சர்வதேச சந்தை நிலவரம், கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி உள்ளிட்ட காரணிகளால், மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தையில் ஏற்றம் நிலவுகிறது

ஏறுமுகம் காணும் பங்குகள்:

எடர்னல்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

இண்டஸ்இண்ட் பேங்க்

டைடன் கம்பெனி

ஐசிஐசிஐ பேங்க்

எஸ்பிஐ

பஜாஜ் ஃபைனான்ஸ்

எல் அண்ட் டி

சன் பார்மா

டெக் மஹிந்திரா

இந்துதாஸ்தான் யூனிலீவர்

டாடா ஸ்டீல்

நெஸ்லே இந்தியா

பாரதி ஏர்டெல்

ஏசியன் பெயின்ட்ஸ்

டாடா மோட்டார்ஸ்

இறங்கு முகம் காணும் பங்குகள்:

கோடக் மஹிந்திரா பேங்க்

பஜாஜ் ஃபின்சவ்

மாருதி சுசுகி

அல்ட்ராடெக் சிமென்ட்ஸ்

ஐடிசி

அதானி போர்ட்ஸ்

ஹெச்சிஎல் டெக்னாலஜிஸ்

ஹெச்டிஎஃப்சி பேங்க்

இன்போசிஸ்

ஆக்சிஸ் பேங்க்

டிசிஎஸ்

எம் அண்ட் எம்

என்டிபிசி

பவர் கிரிட் கார்ப்பரேஷன்

ரூபாய் மதிப்பு:

இன்றைய வர்த்தக தொடக்கத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.95.15 ஆக இருந்தது.


Edited by Induja Raghunathan

facebook twitter