21ம் நூற்றாண்டுக்கு ஏற்ப வளர்ச்சி அடைந்துள்ள நூற்றாண்டு கண்ட வாசனை திரவிய நிறுவனம்!

06:25 PM Jan 07, 2026 | YS TEAM TAMIL

சுதந்திரத்திற்கு முந்தைய கொல்கத்தா நகர தெருக்களில் பட்டு, மஸ்லின், மற்றும் முத்துகளை விற்பனை செய்யும் சிறு வணிகர்கள், தொழில்முனைவு வேட்கையில் தங்களுக்குள் ஒரு சமூகத்தை உருவாக்கி கொண்டனர். அது இன்றளவும் தொடர்கிறது.

இத்தகைய குறும், சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக தொடர்ந்தாலும், சந்தை மாறியிருக்கிறது. காகித ஆவணங்களுக்கு பதில் டிஜிட்டல் பதிவேடுகள் வந்துள்ளன. கைகளால் செய்யப்பட்ட வேலைகளுக்கு பதிலாக ரோபோ மூலம் செயல்பாடு உற்பத்தியில் வந்திருக்கிறது. எனினும் தொழில்முனைவின் தன்மை மாறிவிடவில்ல.

தில்லியைச் சேர்ந்த 'சச்சிரோம்' (Sacheerome) வெற்றிக்கதை இந்த தொழில் பயணத்தின் அடையாளமாக அமைகிறது.

1900-களில் குங்குமபூ மற்றும் மஸ்க் உள்ளிட்டவற்றின் வணிகமாக துவங்கிய தொழில் பின்னர் கல்கத்தா பர்மியூமரி வெர்க்ஸ் நிறுவனமாக மாறியது. பின்னர், இது ஆய்வு மற்றும் அபிவிருத்தி சார்ந்த நவீன வாசனை திரவியங்கள் நிறுவனமாக மாறி, 30 நாடுகளில் உள்ள உலக வாடிக்கையாளர்கள் மற்றும் நுகர்வோர் நிறுவனங்களுக்கு பொருட்களை வழங்கி வருகிறது.

“பல்வேறு துறைகளின் முன்னணி உற்பத்தியாளர்களுக்கு ஏற்ற வகையில் சேவை அளிக்க எங்கள் பாரம்பரிய செழுமையுடன் ஆய்வு மற்றும் தொழில்நுட்பத்தை கலந்து செயல்படுவது நோக்கமாக இருந்தது,” என்று எஸ்.எம்.பி ஸ்டோரியிடம் பேசிய மூன்றாம் தலைமுறை

தொழில்முனைவோரும், சச்சிரோம் நிர்வாக இயக்குனர், முதன்மை வாசனை வல்லுனர் மனோஜ் அரோரா கூறுகிறார்.

ஆரம்ப படிகள்

மனோஜின் தாத்தா ஆங்கிலேயர் காலத்தில் வணிகத்தை துவக்கினார். அப்போது தொழில்முனைவு வாய்ப்புகள் குறைவாகவே இருந்தன மற்றும் வணிகமே முதன்மை வழியாக இருந்தது.

சுதந்திரத்திற்கு பிறகு, அவரது மகன் அமிர்தராஜ் அரோரா வாசனை பொருட்கள் இறக்குமதி, ஏற்றுமதியில் கவனம் செலுத்தினார். பின்னர் 'கல்கத்தா பர்மியூமரி வொர்க்ஸ்' எனும் பெயரில் வாசனை பொருட்கள் உற்பத்தியில் ஈடுபட்டார்.

“வணிகத்தில் இருந்து உற்பத்தியாளராக இது மாற்றியது,” என்கிறார் மனோஜ். 1980 ல் இவர் குடும்ப வர்த்தகத்தில் இணைந்தார்.

“இந்தியா இன்னமும் மூடப்பட்ட பொருளாதாரமாக இருந்தது, ஏற்றுமதி, இறக்குமதியில் அதிக கட்டுப்பாடுகள் இருந்தன. காலப்போக்கில் வாசனை பொருட்கள் தொழிலில் முழுமையான மாற்றம் நிகழ்வதை கண்டேன்,” என்கிறார் அவர் மேலும்.

1992ல், ஓக்லா தொழில் பேட்டையில் வாசனை பொருட்கள் ஆலை அமைப்பதன் மூலம் சச்சிரோமாவுக்கான அடித்தளத்தை அவர் அமைத்தார்.

“அந்த காலகட்டத்தில் இந்திய நுகர்வோர் நிறுவனங்கள் வாசனை திரவிய இறக்குமதியை அதிகம் சார்ந்திருந்தன. இந்திய ரசனை மற்றும் முன்னுரிமைகளுக்கு ஏற்ற மாற்று வாசனை திரவியங்களை அளிப்பதன் மூலம் இதை மாற்ற நிறுவனம் முயன்றது,” என்கிறார் மனோஜ்.

ஆரம்ப வரவேற்பு இதற்கு வலு சேர்த்தது.

இன்று நிறுவன தயாரிப்புகள் 30 நாடுகளில் 10,000க்கும் மேலான பொருட்களில் பயன்படுகின்றன. தனிநபர் நலன், ஆடைகள், ஊதுவத்திகள், உணவு மற்றும் வாய்நலன் என பல்வேறு பிரிவுகளில் பயன்படுகிறது. முன்னணி நுகர்வோர் நிறுவனங்கள் ஐடிசி,விப்ரோ, ரேமண்ட், டாபர், இமாமி மற்றும் ஹிமாலாயா உள்ளிட்ட நிறுவனங்கள் வாடிக்கையாளராக உள்ளன.

உணவு மற்றும் பாணங்கள் பிரிவில் அதிகரிக்கும் தேவையை கருத்தில் கொண்டு, 2014ல் வாசனை சுவை பிரிவில் விரிவாக்கம் செய்தது. இது வாடிக்கயாளர் பரப்பை அதிகமாக்கி சர்வதேச வீச்சையும் அதிகரித்து , நீண்ட கால வளர்ச்சிக்கு ஏற்ற பொருட்கள் தொகுப்பை அளித்துள்ளது. நிறுவனம் இப்போது பேக்கரி, இனிப்புகள், பால் பொருட்கள், ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து பிரிவுகளுக்கு சேவை அளிக்கிறது.

“வாசனை மற்றும் வாசனை சுவை பிரிவுகளில் நுகர்வோர் நிறுவனங்களுக்கான ஒட்டுமொத்த நோக்கிலான பங்குதாரராக முன்னிறுத்தபடுகிறது,” என மனோஜ் விளக்கம் தருகிறார்.

நிறுவனம் 54 வல்லுனர்கள் உள்ளிட்ட 150 க்கும் மேலான ஊழியர்கள் கொண்டுள்ளது.

நவீனமயம்

ஆய்வு மற்றும் அபிவிருத்தி தான் நிறுவனத்தின் முக்கிய அம்சமாக இருக்கிறது. இயற்கை வாசனைகள் உள்பட பத்தாயிரத்திற்கும் மேலான வாசனை மற்றும் சுவைகளுக்கான தயாரிப்பு வழி நூலகத்தை நிறுவனம் கொண்டுள்ளது. மேலும் நுகர்வோர் புரிதலை கொண்டு, மதிப்பீடு அமைப்புகள் மற்றும் IFRA, FSSAI , ISO உள்ளிட்ட தர நிர்ணய விதிகளுக்கு ஏற்ப செயல்பட்டு பிரிவுகளுக்கு ஏற்ற வாசனைகளை உருவாக்குகிறது.

அதே போல, தானியங்கிமயமும் முக்கியமாக அமைகிறது. 2015ல் இந்தியாவில் முதல் முறையாக தானியங்கி மற்றும் ரோபோ வாசனையை நிறுவனம் அறிமுகம் செய்தது, என்கிறார் மனோஜ்.

24 வாசனை வல்லுனர்கள், சுவைஞர்கள் மற்றும் 10 மதிப்பீட்டாளர்கள் தவிர, 3 ரோபோக்கள் ஒகாலா ஆலையில் செயல்பட்டு வழக்கமான முறையில் சாத்தியமாகாத வேகத்தை அளிப்பதாக கூறுகிறார்.

“வாசன உற்பத்தியில் 0.002 mg அளவிலான மிகச்சிறிய வேறுபாடு கூட வாசனையை மாற்றிவிடும். ரோபோ செயல்பாடுகள் துல்லியம் மற்றும் சீரான தன்மையை சாத்தியமாக்கி ஒவ்வொரு பிரிவிலும் தேவயான தரத்தை உறுதி செய்கிறது.”

10 கிராம் மாதிரி முதல் 10 மெட்ரிக் டன் வரையான உற்பத்தி திறனை இந்த ஆலை கொண்டுள்ளது. தற்போது ஆண்டுக்கு 15,000 மெட்ரிக் டன் திறனில் செயல்படுகிறது.

இந்திய இதயம்

“சச்சிரோம் எப்போதுமே வாசனை கலையை அதன் வேர்களுக்கு கொண்டு செல்வதில் நம்பிக்கை கொண்டுள்ளது. இந்தியாவின் பல்லுயிர் ஆற்றல் பலவகை செடிகள், மலர்கள், வாசனை பொருட்கள், பிசின்கள கொண்டுள்ளது,” என்கிறார் மனோஜ்.

இயற்கை மற்றும் ஆயுர்வேதம் சார்ந்த வாசனைகள் உருவாக்கம், தண்ணீர் அல்லது உராய்வால் வாசனைகள் செயலாக்கம் பெறும் மேம்பட்ட நிகழ்நேர அமைப்புகள் பிழை வாசனைகளை மூலத்திலேயே களையும் நுட்பம் ஆகியவை நிறுவனத்தின் புதுமையாக்கங்களாக அமைகின்றன.

வாடிக்கையாளர்கள் மற்றும் உருவாக்குனர்கள் ஒரே உணர்வு மொழியை பேசும் வகையில் நிறுவனம் வாசனை வரைபடத்தையும் உருவாக்கியுள்ளது. உணர்வுகள் 4 வாசனை ஆன்மாக்கள், 13 இன குழுக்களாக இதில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இருப்பினும், புதிய சந்தையில் நுழையும் போது, செயல்முறை ஆற்றலோடு கலாச்சார நுண்ணுனர்வும் தேவை. வாசனை தன்மையை உள்ளூர் உணர்வு சார்ந்து மாற்றி அமைக்கிறது. மத்திய கிழக்கு நாடுகள் கமகமக்கும், பாரம்பரிய வாசனகளான ரோஜா, சந்தனம் ஆகியவற்றை நாடுகின்றன என்றால் ஆசியா துணிச்சலான, செயல்முறை வாசனைகளை நாடுகிறது.

நிறுவனம் அமீரகம் மற்றும் சவுதி அரேபியாவில் அகில், அரேபிய நறுமணம் சார்ந்த பிரத்யேக வாசனைகள அறிமுகம் செய்துள்ளது. நிறுவன எதிர்கால ஆய்வு மையம் இந்த கலாச்சார தொடர்பை மேலும் ஆழமாக்கும், என்கிறார் மனோஜ்.

நிறுவன வாசனை தொகுப்புகள், பாணங்கள், பேக்கரி, இனிப்புகள், பால் பொருட்கள், ஆரோக்கியம், ஊட்டச்சத்து, உதடு நலன், உலர் வாசனை உள்ளிட்ட பிரிவுகளில் பயன்படுகின்றன.

எண்ணிக்கை

உலக சுவை மற்றும் வாசனை சந்தை 2024ல் 32.26 பில்லியன் டாலராக மதிப்பிடப்பட்டுள்ளது. 2033ல் 52.38 பில்லியன் டாலராக உயரும், என எதிர்பார்க்கப்படுகிறது. இடைப்பட்ட காலத்தில் ஆண்டு அடிப்படையில் 5.5 % வளர்ச்சி அடையும். இந்த பிரிவில் ஓரியண்டல் ஆரோமேடிக்ஸ், எஸ்.எஹ்.கேல்கர் அண்ட் கம்பெனி, பாம்பே பர்பியூமர் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்கள் உள்ளன.

2025 நிதியாண்டில் நிறுவன செயல்முறை வருவாய், 26.37 % வளர்ச்சியுடன் ரூ.107.53 கோடியாக உள்ளது. உள்ளூர் விற்பனை அதிக பங்கு வகிக்கிறது. (ரூ.99.34 கோடி- FY25). ஏற்றுமதி வர்த்தகமும் அதிகரித்து வருகிறது. 2024ல் ரூ.4.26 கோடியில் இருந்து 2025ல் ரூ.8.21 கோடியாக உள்ளது. மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா, தென்கிழக்கு ஆசியாவில் தேவை அதிகரித்து வருகிறது.

நிறுவனம் நொய்டா விமான நிலையம் அருகே 21,250 சதுர அடி ஆலையை அடுத்த கட்ட வளர்ச்சிக்காக உருவாக்கி வருகிறது. இந்த ஆலை, உற்பத்தியை அதிகரித்து, ஆய்வு பணிகளை மேம்படுத்தி, தண்ணீர் மற்றும் எரிசக்தி பாதுகாப்பில் நிறுவனத்திற்கு உதவும்.

“இந்த ஆலையை வலுவாக்க புதிய ஆலையில் ஆறு ரோபோக்களை ஈடுபடுத்த உள்ளது,” என்கிறார் மனோஜ்.

மேலும், தனது புதுமையாக்க மையத்தில் வாசனையில் மூழ்கும் அனுபவத்தை வழங்க மெய்நிகர் வசதியை செயல்படுத்த உள்ளது.

மேலும், நிறுவனம் இந்திய நுகர்வோர் நிறுவனங்களுடனான உறவை ஆழமாக்கும் அதே நேரத்தில் தனது சர்வதேச இருப்பையும் விரிவாக்க உள்ளது.

“பாரம்பரியத்தை பதிலீடு செய்வது அல்ல, அதை எதிர்காலத்திற்கு ஏற்ப வளர்த்தெடுப்பதே என் இலக்கு,” என்கிறார் மனோஜ்.

ஆங்கிலத்தில்: டெபோலினா பிஸ்வாஸ், தமிழில்: சைபர் சிம்மன்


Edited by Induja Raghunathan