+

இந்திய இளம் தலைமுறையின் இணைய பயன்பாடு எப்படி? - ஆய்வும் அச்சமும்

தேசிய அளவில் 11 முதல் 30 வயதான 4,000 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட இந்த கருத்துக் கணிப்பு, இளம் தலைமுறையின் டிஜிட்டல் பழக்கங்கள் தொடர்பான கவனத்துக்குரிய அம்சங்களை வெளிப்படுத்தியுள்ளது.

இந்தியா ஏஐ இம்பேக்ட் மாநாடு 2026-க்கு முந்தைய நிகழ்ச்சியில் துடிப்பான குடி உரிமைக்கான இளம் தலைவர்கள் (YLAC) மற்றும் தி குவாண்டம் ஹப் (TQH), மாணவர்கள் சைபர் உறுதி, கல்வி மற்றும் தேசிய அளவிலான அதிகாரமளித்தல் (SCREEN) கருத்துக் கணிப்பை அறிமுகம் செய்துள்ளது.

தேசிய அளவில் 11 முதல் 30 வயதான 4,000 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட இந்த கருத்துக் கணிப்பு, இளம் தலைமுறையின் டிஜிட்டல் பழக்கங்கள் தொடர்பான சுவாரஸ்யமான அம்சங்களை வெளிப்படுத்தியுள்ளது.

இந்த கருத்துக் கணிப்பில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானோர் பொருளாதார நோக்கில் பின்தங்கிய சமூகங்களை சேர்ந்தவர்கள்.

கருத்துக் கணிப்பின் முக்கிய அமசங்கள்:

  • இல்லங்களுக்கான ஸ்மார்ட் போன் அணுகல் 77.9 சதவீதமாக உள்ளது. இதில் பாலின இடைவெளி குறைவாகவே (80.5 சதவீத பெண்கள், 76.7 சதவீத ஆண்கள் - பகிர்வு போன் உள்பட) உள்ளது. இருப்பினும், கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்பிற்கான அணுகல் பெரும் இடைவெளியை கொண்டுள்ளது. மெட்ரோ நகரங்களில் இது 72.5 சதவீதமாகவும், கிராமப்புறங்களில் 36. 5 சதவீதமாகவும் உள்ளது. இந்த வேறுபாடு கல்வி மற்றும் பொருளாதார வாய்ப்புகளில் தீவிர தாக்கம் செலுத்தும்.

  • 60 சதவீத மாணவர்கள் பள்ளிகளில் போன் தடை செயல்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ளனர். எனினும் இந்த தடையின் செயலாக்கம் சரியாக இல்லை என மூன்றில் ஒரு பங்கு பேர் தெரிவித்துள்ளனர். இது பள்ளிகளில் டிஜிட்டல் நிர்வாகத்தில் சீரற்ற தன்மையை உணர்த்துகிறது.

தேவையில்லாத ஆன்லைன் தொடர்புகள் என்பது முன்பின் தெரியாதவர்களிடம் (23.4%), என்பதைவிட தெரிந்தவர்களிடம் (37.9%) இருந்து தான் வருவதாக தெரிவித்துள்ளனர். இது முன்பின் தெரியாதவர்களிடம் இருந்து வரும் ஆபத்து தொடர்பான புரிதலை கேள்விக்குள்ளாக்குகிறது. 17–18 வயததைச் சேர்ந்தவர்கள் 53.1 சதவீதம் பேர் தெரிந்தவர்களிடம் இருந்து தேவையில்லாத ஆன்லைன் தொடர்பை பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

  •  புகார் தெரிவிப்பது மற்றும் மட்டறுக்கும் சாதனங்களை திறம்பட பயன்படுத்துவதாக 37.1% பேர் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் 21% பேர் இத்தகைய சாதனங்கள் பற்றிய அறியாமையை வெளிப்படுத்தியுள்ளனர். விழிப்புணர்வு இடைவெளி கிராமப்புறங்களில்  (29.3%) அதிகம் உள்ளது. இளம் வயதினர் மத்தியில் அதிகமாக உள்ளது. (38.2%: 11–13-வயதினர்);  இளம் வயதினரில் 20.9 சதவீதம் பேர் மட்டுமே இந்த சாதனங்களை பயன்படுத்துகின்றனர்.

  • பெண்கள் அதிக சமூக ஒப்பீடு மற்றும் உடல் நோக்கிலான மன அழுத்தத்தை (31.5% vs 25.7%) வெளிப்படுத்தியுள்ளனர். ஆண்கள் மத்தியில் அதிகமாக கேம் ஆடுவதாக தெரிவித்துள்ளனர். (24.9% vs 17.5%) பின்னர் வருத்தப்படும் உள்ளடக்கத்தை அதிகம் பகிர்வதாகவும், தீவிர ஸ்க்ரோலிங் பழக்கம் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். தூக்கமின்மை இருத் தரப்பினரையும் சமமாக பாதிக்கிறது. (21.8%).

மொத்தத்தில் 50 சதவீதம் பேர், நீடித்த டிஜிட்டல் பழக்கத்தால் எதிர்மறையான விளைவை பெறுகின்றனர். கவலை, தவறவிடும் அச்சம் அல்லது மனச்சோர்வை உணர்வதாக 25 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர். 23 சதவீதம் பேர் ஆன்லைன் பயன்பாடு தொடர்பான குற்ற உணர்வை வெளிப்படுத்தியுள்ளனர். இது டிஜிட்டல் பயன்பாடு மற்றும் தனிப்பட்ட நோக்கங்கள் இடையிலான முரணை உணர்த்துகிறது.

  • மோசமான ஆன்லைன் அனுபவத்தை எதிர்கொள்ளும்போது, நண்பர்களிடம் (32.8%) பெற்றோரிடம் (30.2%), மற்றும் சகோதர, சகோதரிகள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் உதவி நாடுகின்றனர். 14.5% யாரிடமும் தெரிவிப்பதில்லை. ஏஐ சாட்பாட்களை 6.4% பேர் பயன்படுத்துகின்றனர்.

  • இறுதியாக, ஆன்லைன் அனுபவம் மேம்படுவது தொடர்பான எதிர்பார்ப்பு இணைய வசதி மற்றும் வேகம் சார்ந்ததாக அமைகிறது (38.2%).   ஏமிங் தொடர்பான கவலை (11.8%) அடுத்த இடத்தில் வருகிறது.  சைபர்குற்றங்கள்  (6.0%), சீண்டல் மற்றும் தாக்குதல் (5.4% உள்ளடக்க தரம் (5.2%) ஆகிய பிரச்சனைகளும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. மேலும் பொறுப்பேற்கும் தன்மை உள்ள டிஜிட்டல் சூழலை உருவாக்கும் அவசியத்தை இது உணர்த்துகிறது.

“இந்த ஸ்கிரீன் ஆய்வு முடிவுகள், இளைஞர்கள் இணையத்தில் இருந்து விலக்கப்படுவதை விரும்பவில்லை என்பதையும், பாதுகாப்பான, நேர்மையான மற்றும் வெளிப்படைத்தன்மை கொண்ட டிஜிட்டல் வெளியை விரும்புகின்றனர் என்பதை உணர்த்துகிறது” என YLAC இணை நிறுவனர் அபராஜிதா பாரதி கூறியுள்ளார்.

“இணையம் எப்படி இளைஞர்களால் உணரப்படுகிறது என்பதை கொள்கை வகுப்பு உரையாடலில் கவனம் கொள்ள வேண்டும். இந்த ஆன்லைன் அனுபவத்தை ஸ்கிரீன் ஆய்வு வெளிக்கொணர்கிறது.

இளம் பிள்ளைகள் தங்கள் வீட்டின் தொழில்நுட்ப அதிகாரிகள் போல செயல்படுகின்றனர். குறிப்பாக கிராமப்புறங்களில் இது அதிகம் நிகழ்கிறது. எனவே அவர்கள் திறன் மற்றும் பாதுகாப்பு இரண்டையும் சமநிலை காண வேண்டும்” என்கிறார்.

- ரேகா பாலகிருஷ்ணன்


Edited by Induja Raghunathan

facebook twitter