+

ரூ.14,984 கோடிக்கான தமிழக வேளாண் பட்ஜெட் தாக்கல் - முக்கியத் திட்டங்கள், அதற்கான ஒதுக்கீடுகள் என்ன?

தமிழ்நாடு அரசின் 2026–27ஆம் ஆண்டிற்கான முழு பட்ஜெட்டை, மாண்புமிகு முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசில், நிதியமைச்சர் என். மேரி வில்சன் அவர்கள் 2026 ஆகஸ்ட் 5 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இது அந்த அரசின் முதல் முழுமையான பட்ஜெட்டாகும். மாநிலத்தின் நிதி நிலையை வலுப்படுத்தி, வ

தமிழ்நாடு அரசின் 2026–27ஆம் ஆண்டிற்கான முழு பட்ஜெட்டை, மாண்புமிகு முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசின், நிதியமைச்சர் என்.மேரி வில்சன், நேற்று அதாவது, 5 ஆகஸ்ட் அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இது அந்த அரசின் முதல் முழுமையான பட்ஜெட்டாகும். மாநிலத்தின் நிதி நிலையை வலுப்படுத்தி, வெளிப்படையான நிர்வாகம், சமூக நலன் மற்றும் நீடித்த பொருளாதார வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டு இப்பொருளாதாரத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த பட்ஜெட்டில் கல்வி, சுகாதாரம், வேளாண்மை, தொழில், உள்கட்டமைப்பு, வேலைவாய்ப்பு உருவாக்கம், மகளிர் மற்றும் இளைஞர் நலன் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், 2031ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டை 1.5 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாற்றும் இலக்கை அடைய தேவையான பல்வேறு திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், “கடைசி விவசாயியும் வளர்ச்சியடைய வேண்டுமென்றால் பாசன நீரினைக் கடைமைக்கும் கொண்டு சேர்க்கவேண்டும்,” என்ற நோக்கில் டெல்டா மாவட்டங்களில் இந்த ஆண்டு 2,509 கிலோ மீட்டர் நீளமுள்ள ’சி’ மற்றும் ’டி’ பிரிவு வாய்க்கால்கள் ரூ.10 கோடி நிதி ஒதுக்கீட்டில் தூர்வாரப்பட்டுள்ளன என்ற பிரகடனத்துடன் வேளாண்மைக்கென்றே தனி நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்துள்ளார் வேளாண் துறை அமைச்சர் வினோத்.

AGri budget

தமிழக வெற்றிக் கழக அரசின் வேளாண் துறைக்கான தனி பட்ஜெட்டை, சட்டசபையில் இன்று தாக்கல் செய்தது. இன்று காலை 9:30 மணிக்கு, வேளாண்துறை அமைச்சர் வினோத், முதல் முறையாக தனது வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். வேளாண் துறை மற்றும் அதிலுள்ள பல்வேறு திட்டங்களுக்காக ரூ.14,984 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

வேளாண் பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

  • ரூ.227.2 கோடி நிதி ஒதுக்கீடு: 24,000 விவசாயிகளுக்கு மானியத்தில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள்.

  • வான்மகள் திட்டம்: 100 மகளிர் உட்பட 500 நபர்களுக்கு ட்ரோன் இயக்கப் பயிற்சி உரிமம். 50 பயிற்சி பெற்ற மகளிருக்கு 50 சதவீத மானியத்தில் ட்ரோன்கள் இதற்காக ரூ.4 கோடி ஒதுக்கீடு.

  • ரூ.4 கோடி ஒதுக்கீட்டில் 80% மானியத்தில் கிராம அளவிலான 50 வேளாண் இயந்திர வாடகை மையங்கள்

  • மகளிர் சுய உதவிக்குழுக்களுகு 30% ஒதுக்கீடு

  • ரூ.23 கோடி நிதி ஒதுக்கீட்டில் 1,000 விவசாயிகளுக்கு மானியத்துடன் மின் கட்டமைப்புடன் சாராத சூரியசக்தியால் இயங்கும் பம்ப் செட்கள் அமைக்கப்படும். இதற்கான அதிகபட்ச மானியம் 80%.

  • பயிர் சாகுபடி மற்றும் மதிப்புக் கூடுதலுக்கான 50 ஒருங்கிணைந்த வேளாண் இயந்திர வாடகை வணிக மையங்கள் - ரூ.8.13 கோடி ஒதுக்கீடு.

  • கடலோர மாவட்டங்களில் ரூ.49.4 லட்சம் ஒதுக்கீட்டில் நன்னீர்க் கிணறுகள் அமைத்து மிளகாய் மற்றும் கொத்தமல்லி சாகுபடி

  • இ-வாடகை 2.0 செயலி மூலம் வேளாண்மைப் பொறியியல் துறையின் இயந்திரங்களை வாடகைக்கு வழங்கும் சேவையை வலுப்படுத்த 463 வேளாண் இயந்திரங்கள், கருவிகள் கொள்முதல் - நிதி ஒதுக்கீடு ரூ.20.31 கோடி.

  • ரூ.46.37 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் மக்காச்சோளம், நிலக்கடலை, உளுந்து மற்றும் தென்னை ஆகியவற்றில் 100% மானியத்தில் 225 ஏக்கர் பரப்பளவில் தொடக்கம் முதல் இறுதி வரை இயந்திரமயமாக்குதலுக்கான செயல் விளக்கங்கள்.

  • உழவர் சந்தைகளை புனரமைக்க ரூ.20 கோடி. - நோக்கம்: நேரடி விற்பனை நிறைவான வருமானம்.

  • 50 உழவர் சந்தைகளில் ரூ.2 கோடி செலவில் மின்னணு விலைப்பலகைகள்.

  • புதிய உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் உருவாக்குதல்

  • சமபங்கு நிதி உறுப்பினர்களுக்கு ரூ.5,000 - இதற்கான நிதி ஒதுக்கீடு ரூ.12 கோடி.

  • ரூ.4 கோடி நிதி ஒதுக்கீட்டில் வேளாண் நுண்ணறிவு மற்றும் சந்தை மகத்துவ மையம்.

  • ரூ.5 கோடி நிதி ஒதுக்கீட்டில் நஞ்சில்லா வேளாண் முறைகளை ஊக்குவித்து, விவசாயிகளின் விலைபொருட்களுக்கு சந்தை வாய்ப்புகளை உருவாக்க நீலகிரி மாவட்டம் ஊட்டியில் புதிய வேளாண் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம்.

  • ரூ 5 கோடியில் தஞ்சை மாவட்டம் சாக்கோட்டையில் ’நம்மாழ்வார்’ பெயரில் ஒரு புதிய உயிர்ம வேளாண்மை பட்டயப் படிப்புக் கல்லூரி.

  • கோவை வேளாண் பல்கலைக்கழகத்திற்கு மாணவர்களின் களப்பயிற்சிக்காக புதிய பேருந்துகள் வாங்குதலுக்கு ரூ.3 கோடி.

தமிழ்நாட்டில் காய்கறிகள், பழங்கள், மலர்கள் மற்றும் பிற தோட்டக்கலைப் பயிர்கள் விவசாயிகளுக்கு தொடர்ச்சியான வருமானத்தையும், மக்களுக்கு ஊட்டச்சத்து பாதுகாப்பையும் வழங்குவதால் முக்கியத்துவம் பெறுகின்றன. அவற்றின் உற்பத்தி, உற்பத்தித்திறன் மற்றும் உலகத் தரமான விளைபொருட்களை மேம்படுத்த தோட்டக்கலைத் துறை பல்வேறு திட்டங்களையும் அறிவித்துள்ளார் நிதியமைச்சர்.

facebook twitter