
இந்திய கடன் சந்தை உடனடி கடன்கள், முன் அனுமதி கடன் அட்டைகள், ‘இப்போது வாங்கி பின்னர் செலுத்தும்’ செயலிகள் உள்ளிட்ட சேவைகளால் நிறைந்திருப்பதோடு, கடன் வாங்குவதையும் எளிதாக்கியிருக்கிறது.
நீங்கள் சீரான வருமானம் கொண்ட சம்பளம் பெறுபவர் மற்றும் கிரெடிட் வரலாறு கொண்டவர் என்றால் இந்த முறை உங்களுக்கு சிறப்பாக செயல்படும். ஆனால், இந்தியாவின் அமைப்பு சாரா பிரிவினருக்கு வேறு கதை. நிலையான வர்த்தகம் கொண்டிருந்தும், சிக்கலான ரொக்க பொறுப்புகளை திறம்பட நிர்வாகித்து வந்தாலும், சிறு கடை வியாபாரிகள், சிறு விவசாயிகள் உள்ளிட்டோர் பாரம்பரிய கிரெடிட் ஸ்கோர் முறையில் கண்ணில் தெரியாதவர்களாக இருக்குகின்றனர்.

இது அவர்கள் கடன் தகுதி பற்றிய பிரச்சனை அல்ல. அமைப்பு சாரா பொருளாதாரத்தின் இடர் அம்சங்களை மதிப்பிடுவதற்கான கருவிகள் வங்கிகள், வங்கிசாரா நிதி நிறுவனங்களிடம் இல்லை. இந்த பிரிவில் வருமானம் பருவநிலை சார்ந்திருப்பதும், ஆவணமாக்கல் இல்லாதது மற்றும் மிதமான வருமானம் என்பது பகுதிக்கு பகுதி மாறுபடுவதும் இதற்கான காரணங்கள்.
பாரம்பரிய கிரெடிட் அமைப்புகளால், செயல்முறை கடன் தேவைப்படும் வியாபாரிக்கும், சீரான வருமானம் கொண்ட பண்ணை விவசாயிக்கும் இடையிலான வேறுபாட்டை அறிய முடியாது. இந்த நிச்சயமற்றத்தன்மை காரணமாக இப்பிரிவினர் நிராகரிப்பை எதிர்கொள்கின்றனர்.
இந்த இடைவெளியை போக்கும் வகையில் 'கலெய்டோபின்' (Kaleidofin) செயல்படுகிறது. சுசித்ரா முகர்ஜீ மற்றும் புனீத் குப்தா ஆகியோரால் 2017ல் துவங்கப்பட்ட கலெய்டோபின் அமைப்பு சாரா துறையினருக்கு என்று பிரத்யேகமான வடிவமைக்கப்பட்ட கிரெடிட் மதிப்பீடு கருவிகளை உருவாக்குகிறது. சென்னையைச் சேர்ந்த இந்நிறுவனம் ஏஐ மற்றும் இயந்திர கற்றலை பயன்படுத்தி, வங்கிகள் மற்றும் வங்கிசாரா நிதி நிறுவனங்கள் வழக்கமான கிரெடிட் ஸ்கோர் முறைக்கு வெளியே உள்ளவர்களை மதிப்பீடு செய்ய வழி செய்கிறது.
சுசீத்ரா முகர்ஜி, மார்கன் ஸ்டேன்லி மற்றும் டாய்ஸ் வங்கியில் துணைத்தலைவராக பணியாற்றியவர், பின்னர், ஐஎப்.எம்.ஆர் கேபிடலை நிறுவி, ஐ.எப்.எம்.ஆர் ஹோல்டிங்ஸ் சி.இ.ஓவாக இருந்துள்ளார்.
ஐசிஐசிஐ வங்கியில் முதன்மை மேலாளராக இருந்த குப்தா, ஐ.எப்.எம்.ஆர் டிரஸ்டின் இணை நிறுவனராக இருந்துள்ளார். ஐ.எப்.எம்.ஆர் ஹோல்டிங்ஸ் சி.எப்.ஓவாக இருந்துள்ளார்.
இந்த இருவருடன், மைக்ரோசாப்ட் மற்றும் கூகுளில் பணியாற்றிய அனுபவம் கொண்ட நடாஷா ஜேதாநந்தானி, இணை நிறுவனர் மற்றும் சி.டி.ஓவாக உள்ளார். விபுல் சேக்சாரியா இணை நிறுவனர் மற்றும் சி.ஒ.ஓவாக உள்ளார். இவர் காப்பீடு துறையில் நீண்ட அனுபவம் கொண்டவர்.
முக்கிய திருப்பம்
நிறுவனம் முதலில் அமைப்பு சாரா துறையில் உள்ளவர்களுக்கான சேமிப்பு மேடையாக துவங்கியது. வாடிக்கையாளர்கள் இலக்குகளை நோக்கி மாதந்தோறும் சிறிய தொகையை ஒதுக்கீடு செய்தால், நிறுவனம் அவர்கள் சார்பில் மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்யும்.
இந்த முறை குறு நிதி நிறுவங்கள் மற்றும் ஏஜெண்ட்கள் கூட்டுடன் செயல்படுத்தப்பட்டது. ஆனால் கோவிட் 19 இதை பாதித்தது.
பெருந்தொற்று காலத்தில் கடன் தொகை செலுத்தப்படுவது பாதிக்கப்பட்டு, ஏஜெண்ட்கள் வாடிக்கையாளர்களை வலியுறுத்தி சேமிப்பை எடுத்து நிலுவைத்தொகையை செலுத்த கூறினார்.
இதனிடையே, 2021 அக்டோபரில் செபி, மியூச்சுவல் பண்ட் பலம் செலுத்த பல கணக்குகளை ஒன்றிணைப்பது தொடர்பான கட்டுப்பாட்டை கொண்டு வந்தது. எனினும், இந்நிறுவனம் இல்ல வருமானங்கள் மற்றும் அதன் சேமிப்பு சேவைக்கான நிலைத்தன்மை தொடர்பான தரவு மாதிரிகளை உருவாக்கி கொண்டிருந்தது. இந்த மாதிரிகள் எதிர்பாராத செயலியாக அமைந்தன. கோவிட் பாதிப்பிற்கு மத்தியில், கடன் நிறுவனங்களால் யாரால் கடனை திருப்பித்தர முடியாது என கண்டறிய முடியாமல் இருந்த சூழலில், நிறுவனம் இதற்கான கருவிகளை தன்னிடம் கொண்டிருந்தது. இவை வங்கிகள் இடர் அம்சங்களை மேம்பட்ட முறையில் அணுகுவதற்கான கிரெடிட் ஸ்கோராக அமைந்தன.
நிதிச் சேவைகள்
கலெய்டோபின், இப்போது ’கி ஸ்கோர்’ (ki score) எனும் சேவையை வழங்கி வருகிறது. இந்த சேவை வழக்கமான கிரெடிட் அமைப்புகள் திரட்டுவதை விட, பரந்த அளவில் இருந்து தரவுகளை திரட்டும் கிரெடிட் மதிப்பீடு கருவியாக உள்ளது. மக்கள்தொகை அமைப்பு, புவியியல், பணம் செலுத்தும் முறை, சேமிப்பு பழக்கம், செயற்கைகோள் படம், பருவநிலை, பயிர் வகை மற்றும் கால்நடைகள் உள்ளிட்ட மாற்று தரவுகளில் கவனம் செலுத்துகிறது.
"நிகழ் நேர கடன் வழங்கல் முடிவுகளுக்கு கடன் மதிப்பீடு நொடிக்குள் நிகழ் வேண்டும்,” என்கிறார் குப்தா. இதற்கு பல இடங்களில் இருந்து தரவுகளை உடனடியாக திரட்டும் தரவு கிடங்கு அமைப்பு தேவை.
இதன் முக்கிய வேறுபாடு பல மாதிரி அம்சமாகும்: ஒற்றை தேசிய மாதிரிக்கு மாறாக உள்ளூர் சார்ந்த நூற்றுக்கணக்கான மாதிரிகளை இந்த மேடை கையாள்கிறது. உதாரணமாக, பிகாரில் தொலைதூர மாவட்டத்தில் மழையை நம்பியிருக்கும் விவசாயி, பாட்னாவில் பாசனத்தை நம்பியுள்ள விவசாயை விட வேறு விதமாக மதிப்பிடப்படுகிறார்.
"அனைத்து விவசாயிகளுக்கும் ஒரே மாதிரியை பயன்படுத்தினால் மழையை நம்பியிருக்கும் விவசாயி எப்போதும் பாதிக்கப்படுவார்,” என்கிறார் குப்தா.
வங்கி அல்லது வங்கிசாரா நிதி நிறுவனம் கடன் விண்ணப்பத்தை பெறும் போது, நிறுவனத்தின் ஏபிஐ நொடிக்குள் நிகழ்நேரத்தில் கடன் முடிவை அளிக்கிறது. கிரெடிட் ஸ்கோர் தவிர, ’கி வியூ’ (ki view) எனும் இடர் நிர்வாக டேஷ்போர்டையும் இந்த ஸ்டார்ட் அப் வழங்குகிறது. கடன் நிறுவனங்கள் நிதி கணக்குகளை ஆய்வு செய்து, எச்சரிக்கை தகவல்களை கண்டறிய இது உதவுகிறது. இந்த மேடை, வங்கிகள், வங்கிசாரா நிதி நிறுவனங்கள் மற்றும் நுண்கடன் நிறுவனங்கள் இடையிலான கடன் ஒப்பந்தங்களுக்கும் வழி செய்கிறது.
சட்ட விதிமுறைகளை பொருத்தவரை, நிறுவனம் DPDP Act உட்பட்டு செயல்படுகிறது மற்றும் SOC 2 Type 2 compliant சான்றிதழ் பெற்றுள்ளது. இது தொழில்நுட்பம் மற்றும் தகவல் பாதுகாப்பு செயல்முறைக்கான ISO 27001 சான்றிதழாகும். கேபிஎம்ஜி நிறுவனம் மூலம் ஆண்டுக்கு நான்கு முறை தணிக்கை மேற்கொள்கிறது.
நிறுவனம் வங்கிகள், வங்கிசாரா நிதி நிறுவனங்கள் மற்றும் நுண்கடன் நிறுவனங்கள் உள்ளிட்ட 57 பங்குதாரர்களை கொண்டுள்ளது.
"இப்போது சர்வதேச அளவிலும் செயல்படுகிறோம். எங்கள் மாதிரி வங்கதேசம், ஆப்பிரிக்காவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது,” என்கிறார் குப்தா.
விதிமுறைகள் பின்பற்றல் சோதனைக்குப்பிறகு, நிறுவனம் ஏபிஐ வழியாக கடன் நிறுவனங்கள் அமைப்புக்குள் ஒருங்கிணைக்கிறது. வாடிக்கையாளர் தரவுகள் மறைக்கப்பட்டு விதத்தில் பாய்கிறது, 0.03 நொடியில் பரிந்துரைகள் வழங்கப்படுகின்றன. வங்கிகள் இறுதி முடிவை எடுக்கும் அதிகாரம் கொண்டுள்ளன. கடன் செயல்முறைக்கு ஏற்ப மாதிரியை பட்டைத்தீட்டுகிறது.
2024ல் உலக கிரெடிட் கடன் இடர் மதிப்பீடு சந்தை 8.36 பில்லியன் டாலர் மதிப்பு கொண்டதாக பிரெசிடன்ஸ் ஆய்வு கருதுகிறது. 2034ல் இது ஆண்டு அடிப்படையில் 14.17% வளர்ந்து 31.46 பில்லியன் டாலராக இருக்கும், என கணிக்கப்பட்டுள்ளது. இந்த பரப்பில் நிறுவனம், டெண்டிங்கார்ட், பின்பாக்ஸ் மற்றும் எஸ்.எம்.இ. கார்னர் ஆகிய நிறுவனங்களுடன் போட்டியிடுகிறது.
7 ஆண்டுகளிலொ 10.6 மில்லியன் வாடிக்கையாளர்கள்
இந்த மேடை 10.6 மில்லியன் தனித்த வாடிக்கையாளர்கள் கடன் பெற வழி செய்துள்ளது. கடன் மதிப்பு 9.12 பில்லியன் டாலர். ’கி கிரெடிட்’ மேடை, மாதந்தோறும் 3,50,000 வாடிக்கையாளர்கள் கடனை மதிப்பீடு செய்கிறது. பெண் தொழில்முனைவோர், விவசாய கடன், பால் பண்ணை கடன், சொத்து மீதான கடன், சிறு தொழில் கடன் ஆகியவை அடங்கும்.
"கி கிரெடிட் மேடை இப்போது மாதம் 215 மில்லியன் டாலர் மதிப்புக்கு செயலாக்கம் பெறுகிறது” என்கிறார் குப்தா. துறை எதிர்கொண்டு வரும் அதிக கடன் இடர் உயர்வுக்கு மத்தியில், இந்த மேடையின் மூலம் வழங்கப்படும் கடன்களுக்கான இடர் 3 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது. பல வாடிக்கையாளர்கள் குழு கடன் மற்றும் அல்லாமல் தனிநபர் கடனும் பெற முடிகிறது. நிறுவனம் 100 ஊழியர்கள் கொண்டுள்ளது,”என்கிறார் குப்தா.
அடுத்த கட்டம்
குறைந்த வருமானம் கொண்டவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை முறையாக உருவாக்க உதவும் வகையில் அதிக தரமான சேவைகளை உருவாக்குவதே தங்கள் நோக்கம் என்கிறார் குப்தா.
இந்தியாவில், கலெய்டோபின் மேலும் பல வங்கிகள், நிதி நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட உள்ளது. தன்னுடைய மாதிரிகளின் கடன் மதிப்பீடு தன்மையை நிலை நிறுத்துவதிலும், பெரிய தரவு தொகுப்புகளை ஒருங்கிணைப்பதிலும் கவனம் செலுத்துகிறது.
"வளரும் உலகத்தின் சவால்கள் இந்திய சூழலை போன்றவை, மற்ற நாடுகளை ஒப்பிட்டால், இந்த நன்கு உருவான நிதிச்சேவைகள் பிரிவை கொண்டுள்ளது. மற்ற நாடுகள் பின் தங்கியுள்ளன,” என்கிறார்.
நிறுவனம் கிழக்கு ஆப்பிரிக்காவில் செயல்பாடுகளை துவங்கியுள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் பெரும்பாலான கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் விரிவாக்கம் செய்து, தென்கிழக்கு ஆசியாவிலும் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது.
ஆங்கிலத்தில்: ராஷ்மி கோட்லாண்டே, தமிழில்: சைபர் சிம்மன்
Edited by Induja Raghunathan