+

TN Budget 2026: வெற்றி வீடு, அரண் தங்குமிடங்கள், அண்ணன் சீர் - முக்கிய அம்சங்கள் இதோ!

2026-27ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை இன்று (ஆகஸ்ட் 5) சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், எல் நினோ தொடங்கி, விண்வெளி தொழில் முதலீட்டு மையம் வரை என அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய பல முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

தமிழக சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, புதிதாக ஆட்சி அமைத்துள்ள தவெக அரசு சார்பில், 2026-27ம் ஆண்டிற்கான பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன் சட்டசபையில் இன்று தாக்கல் செய்தார்.

அப்போது பேசிய அவர், வறுமை இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க, 2026ம் ஆண்டுக்குள் 1.5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் உள்ள மாநிலமாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மக்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு, அறம், பொருள், இன்பத்தை நோக்கமாக வைத்து, 10 தூண்களைக் கொண்ட, ‘வெற்றித் தமிழகம்’ என்ற தொலைநோக்கு திட்ட ஆவணம் வெளியிடப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையிலான திட்டங்களை வருகிற முதலாம், மூன்றாம் மற்றும் ஐந்தாம் ஆண்டுக்குள் நிறைவேற்றத்த்தக்க திட்டங்களை வகைப்படுத்தி, அவற்றுக்கு செயல் வடிவம் கொடுத்து வருவதாகக்’ கூறிய அமைச்சர், தொடர்ந்து பட்ஜெட் அறிவிப்புகளை வெளியிட்டார்.

அதன் விபரம் பின்வருமாறு...

TN Budget 2026


தமிழக பட்ஜெட்டின் முக்கிய அறிவிப்புகள்

  • அனைத்து மாநகராட்சிகளிலும் வீதிகள் மேம்பாடு செய்யப்படும்.
  • சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்துக்கு ரூ.9,300 கோடி நிதி ஒதுக்கீடு
  • நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறைக்கு 21,524 கோடி ரூபாய் ஒதுக்கீடு
  • போக்குவரத்துத் துறைக்கு மொத்தம் ரூ.13,561 கோடி ஒதுக்கீடு.
  • போக்குவரத்துக் கழகங்களுக்கு ரூ.7,675 கோடி மானியம்.
  • செயல்திறன் இடைவெளி நிதியுதவி ரூ.2,650 கோடி ஒதுக்கீடு. பங்கு மூலதன உதவி ரூ.1,005 கோடி ஒதுக்கீடு
  • தமிழ்நாடு செயற்கை நுண்ணறிவு அமைப்பு (TN Al Mission) மூலம் கல்வி, சுகாதாரம், குடிமக்கள் சேவைகள், விவசாயம் மற்றும் நகர்ப்புர நிர்வாகம் போன்ற முக்கிய துறைகளில், செயற்கை நுண்ணறிவு சார்ந்த முன்முயற்சிகளில் தனித்த கவனம் செலுத்தப்படும்.
TN budget 2026-27


நீர்வளத் துறைக்கு 9,264 கோடி ரூபாய் ஒதுக்கீடு

  • முல்லைப்பெரியாறு, ஆனைமலையாறு நல்லாறு போன்ற திட்டங்களுக்கு முன்னுரிமை. மேகதட்டு உள்ளிட்ட உரிமை பாதிக்கும் திட்டங்களுக்கு எதிர்ப்பு. கோதாவரி-காவிரி நதிநீர் இணைப்புத் திட்டத்தை விரைவுபடுத்த வலியுறுத்தப்படும்.
  • நதி இணைப்புத் திட்டங்களுக்காக மொத்தம் ரூ.200 கோடி நிதி ஒதுக்கீடு.
  • காவிரி-வைகை-குண்டாறு நதி இணைப்புத் திட்டத்திற்கு ரூ. 150 கோடி நிதி ஒதுக்கீடு.
  • பெண்ணையாறு-செய்யாறு, பெண்ணையாறு-பாலாறு மற்றும் தாமிரபரணி வைப்பாறு போன்ற திட்டங்களுக்கு விரிவான திட்ட அறிக்கையினை தயார் செய்வதற்கு ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு.
  • காவிரி டெல்டா சுற்றுசூழல் மறுசீரமைப்பு சாத்தியகூறு ஆய்வு மற்றும் விரிவான திட்ட அறிக்கை தயாரிப்புக்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு.
  • நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு 29,863 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

மனித-வனவிலங்கு மோதல் தடுப்பு திட்டம்

  • சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறைக்கு 1,762 கோடி ரூபாய் ஒதுக்கீடு
  • மனித-வனவிலங்கு மோதலுக்கு நிரந்தர தீர்வு காண ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு.
  • மனித - வனவிலங்கு மோதல் தடுப்பு திட்டம் 100 கிராமங்களில் செயல்படுத்தப்படும்.
  • சூரிய மின்வேலி, எஃகு வேலி உள்ளிட்ட அறிவியல் சார்ந்த பாதுகாப்பு அமைப்புகள் ஏற்படுத்தப்படும். வனப் பாதுகாப்புப் பணியாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள். GPS வசதியுடன் கண்காணிப்பு, இரவு நேர ரோந்துப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
  • இயற்கை வளங்கள் துறைக்கு ரூ.438 கோடி ரூபாய் ஒதுக்கீடு
  • தூத்துக்குடி, திருநெல்வேலியில் விண்வெளித் தொழில் முதலீட்டு மையம் அமைக்கப்படும்
  • சூப்பர் எல்-நினோ பாதிப்பை சமாளிக்க சிறப்பு நடவடிக்கைகளாக, மாநிலப் பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து ரூ.340 கோடி ஒதுக்கீடு.
el nino


புதிய மாநில வீட்டுவசதித் திட்டம் ‘வெற்றி வீடு’ அறிமுகம்

  • புதிய மாநில வீட்டுவசதித் திட்டமான ‘வெற்றி வீடு’ திட்டம் அறிமுகம். வீட்டு அலகுத் தொகை ரூ.3.10 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்வு. முதல் ஆண்டிலேயே 70,000 வீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்படும். ரூ.3,500 கோடி மதிப்பீட்டில் திட்டம் செயல்படுத்தப்படும்.
  • ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு 39,609 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
  • உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறைக்கு 14,830 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
  • போதையில்லா தமிழகம் உருவாக்க ரூ.70 கோடி ஒதுக்கீடு.
  • உள்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறைக்கு 17,290 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
  • காவல்துறையினருக்கு புதிய குடியிருப்பு வளாகங்கள் அமைக்க ரூ.431 கோடி நிதி ஒதுக்கீடு. இதன் மூலம் 5,000 காவலர் குடும்பங்கள் பயன்பெறுவர்.
  • வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறைக்கு 11,532 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
  • முத்திரைத்தாள்கள் மற்றும் பத்திரப்பதிவுத் துறைக்கு 475 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
  • வணிக வரிகள் துறைக்கு 651 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

house

சிங்கப்பெண்கள் வலிமைப் படுத்தும் திட்டம்

  • சுயஉதவி குழுக்களை, குறுந்தொழில் நிறுவனங்களாக மேம்படுத்தும் வகையில், ‘சிங்கப்பெண்கள் வலிமைப்படுத்தும் திட்டம்’ அறிமுகம். இதில், இந்த ஆண்டில் மட்டும் ரூ.38,000 கோடி கடன் வழங்க இலக்கு.
  • தொழில்முனைவோரின் செயல்திறனை வெளிப்படுத்தும் சுயஉதவிக் குழு நிறுவனங்களுக்கு ரூ.5 லட்சம் முதலீட்டு மானியம் வழங்கப்படும்.
  • சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப் படைக்கு ரூ.354 கோடி ஒதுக்கீடு

உணவு மற்றும் கலைத் திருவிழா

  • நீதி நிர்வாகத் துறைக்கு ரூ.2486 கோடி ஒதுக்கீடு
  • தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பிரபல உணவு மற்றும் கலைப் பண்பாட்டை பிரபலப்படுத்தும் வகையில், உணவு மற்றும் கலைத் திருவிழா நடத்தப்படும். இதற்கென ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு.
  • ஆண்டுதோறும் 2.5 லட்சம் மூத்த குடிமக்கள் விரும்பிய புனிதத் தலங்களுக்கு அரசு ஏற்பாட்டில் பயணம் செய்ய, அதுவும் குளிர்சாதன வசதி, தரமான தங்குமிடம் மற்றும் உணவு வசதியுடன் பயணிக்க ரூ.20 கோடி ஒதுக்கீடு.
  • 200 சிறந்த கலைக் குழுக்களுக்கு ஆண்டுதோறும் 100 நாட்கள் நிகழ்ச்சி வாய்ப்பு. நாட்டுப்புறக் கலைஞர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க ரூ. 23 கோடி நிதி ஒதுக்கீடு
  • சுற்றுலா கலை மற்றும் பண்பாட்டுத் துறைக்கு ரூ.775 கோடி ஒதுக்கீடு
  • இந்து சமய அறநிலையத் துறைக்கு ரூ.708 கோடி நிதி ஒதுக்கீடு.
  • அரசு ஊழியர்களுக்கு புதிய மருத்துவக் காப்பீடு திட்டத்துக்கு ரூ. 838 கோடி நிதி ஒதுக்கீடு. அவர்களுக்கான அடிப்படை காப்பீடு ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ. 7.5 லட்சமாக உயர்வு. குறிப்பிட்ட நோய்களுக்கான காப்பீடு ரூ.12 லட்சம் வரை உயர்வு. அரிய நோய்களுக்கு ரூ.15 லட்சம் வரை நிதி உதவி வழங்க ஏற்பாடு.
  • ஓய்வூதியம் மற்றும் ஏனைய ஓய்வுக்கால நன்மைகளுக்கு 47,240 கோடி ரூபாய் ஒதுக்கீடு.

பட்ஜெட்டில் சென்னைக்கு என்னென்ன?

  • சென்னைக்கு புதிதாக 1,000 AC மின்சார பேருந்துகள் வாங்கப்படும். பேருந்து பணிமனைகளில் EV உட்கட்டமைப்பு மேம்பாடு செய்ய ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு
  • 160 நீதிமன்றங்களுடன் சென்னை பிராட்வேயில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்க ரூ.1,375 கோடி ஒதுக்கீடு.
  • விமான நிலையம் - கிளாம்பாக்கம், கோயம்பேடு -பட்டாபிராம், பூந்தமல்லி - சுங்குவார்சத்திரம் என சென்னையில் மூன்று புதிய மெட்ரோ வழித்தடங்களுக்கு பரிந்துரை
  • சென்னை மாநகரில் உள்ள அனைத்து நுகர்வோருக்கும் ஸ்மார்ட் மீட்டர்கள் வழங்கப்படும். இதேபோல், மாநிலத்தில் பிற பகுதிகளில் உள்ள 50 லட்சம் தொழில், வணிக நுகர்வோருக்கும் இத்திட்டம் விரிவாக்கம்
  • சென்னை நதிகள் கூவம் , அடையாறு ஆறுகள் உலகத் தரத்தில் மறுசீரமைப்பு செய்யப்பட்டு, படகு சவாரி, நதிக்கரை நடைபாதை, பொழுதுபோக்கு வசதிகள் ஏற்படுத்தப்படும். சென்னையின் புதிய அடையாளமாக கூவம் , அடையாறு மாற்றப்படும்.
boat

‘வெற்றி 150’ வேலைவாய்ப்பு திட்டம் அறிமுகம்

  • கிராம மக்களின் வாழ்வாதாரத் திட்டத்தின் கீழ், 'வெற்றி 150' அறிமுகம். இதன்படி, 125 நாட்கள் வேலை முடித்த குடும்பங்களுக்கு கூடுதலாக 25 நாட்கள் வேலை வழங்க உறுதி செய்யப்படும். இதற்கென ஆண்டுதோறும் ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
  • நெல் சாகுபடியினை ஊக்குவிக்கும் வகையில், குறுவை தொகுப்புத் திட்டம் அறிமுகம். இதற்கென ரூ.5,134 கோடி ஒதுக்கீடு.
  • வேளாண் மற்றும் உழவர் நலத் துறைக்கு 14,984 கோடி ரூபாய் ஒதுக்கீடு
  • மீனவர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ.6,000ல் இருந்து ரூ.7,000 ஆக உயர்த்தி வழங்கப்படும். இதன் மூலம், 193 லட்சம் பாரம்பரிய மீனவக் குடும்பங்கள் பயனடையும்.

வீட்டுக் கூரை சூரிய மின் மானியத் திட்டம்' அறிமுகம்

  • கோயம்புத்தூர் - அரியலூர் 765 கே.வி. மின் பகிர்மானப் பாதைத் திட்டம் ரூ.4,000 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.
  • அனைத்து இ-சேவை மையங்களும் 'இ-சேவை 2.0' ஆக மேம்படுத்தப்படும். நம்ம அரசு WhatsApp Chatbot சேவைகள் 76ல் இருந்து 275ஆக விரிவாக்கம் செய்யப்படும்.
  • செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறைக்கு 398 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
  • 'வீட்டுக் கூரை சூரிய மின் மானியத் திட்டம்' அறிமுகம் செய்யப்படுகிறது. இதன் மூலம் சூரிய மின்பலகைக்கு ரூ.1 லட்சம் வரை மானியம் வழங்க ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
  • செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடன் கூடிய இணையவழி திட்ட அனுமதி தளம் (Single Platform for Efficient Expedited Development - SPEED) அறிமுகப்படுத்தப்படும். விரைவான, வெளிப்படையான திட்ட அனுமதி வழங்க ரூ.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
  • எரிசக்தித் துறைக்கு 15,828 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
  • விருதுநகர்-கோயம்புத்தூர் 765 கே.வி. மின் பகிர்மானத் திட்டம், கோயம்புத்தூர் - அரியலூர் 765 கே.வி. மின் பகிர்மானப் பாதைத் திட்டம் ரூ.6,884 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படும்.
  • 11,760மெகாவாட் புதுப்பிக்கதக்க எரிசக்தியை கையாளும், பசுமை எரிசக்தி வழித்தடம் கட்டம் 3 திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை.
  • ரூ. 1,543 கோடி முதலீட்டில் 178 புதிய துணை மின்நிலையங்கள் உருவாக்கப்படும். ரூ.2,000 கோடியில் 40,000 பழைய மின்மாற்றிகள் மாற்றம் செய்யப்படும்.
  • சென்னை மின்பகிர்மான திறன் ரூ.1,390 கோடியில் வலுபடுத்தப்படும். பசுமை எரிசக்தி வழித்தடம் 2 ,3-ம் கட்டத் திட்டங்கள் விரைவுபடுத்தப்படும்.
solar

2031-க்குள் உலகத் தர நகரங்களை உருவாக்க இலக்கு

  • இந்தாண்டில், 24,131 அடுக்குமாடிக் குடியிருப்புகள் நிறைவு செய்யப்படும். 14,194 புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டுமானம் தொடங்கப்படும். தரமான குடியிருப்புகள் வழங்க ரூ.1,253 கோடி நிதி ஒதுக்கீடு.
  • 5,904 சதுர கி.மீ. பரப்பளவில் விரிவுபடுத்தப்பட்ட சென்னை பெருநகர பகுதிக்கான ஓர் விரிவான முழுமைத் திட்டம் செயல்படுத்தப்படும். இதற்கான நீண்ட கால வளர்ச்சி மற்றும் மாற்றத்திற்கான ஓர் வரைபடம் உருவாக்க ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
  • வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறைக்கு 8,852 கோடி ரூபாய் ஒதுக்கீடு
  • முதலமைச்சரின் ஒருங்கிணைந்த நகர்ப்புர மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், குடிநீர், சாலைகள், கழிவுநீர், போக்குவரத்து, பசுமை - மின் ஆளுமை ஒரே திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும். 2031-க்குள் உலகத் தர நகரங்களை உருவாக்கும் இலக்கை அடைய ரூ. 2,117 கோடி நிதி ஒதுக்கீடு
  • மாநகர இளைஞர் மற்றும் குடும்ப வீட்டு வசதித் திட்டம் கீழ் MY-HOME திட்டம் சென்னைப் பெருநகரத்தில் அறிமுகம். PPP (Public-Private Partnership) முறையில் ரூ.15,000 கோடி முதலீடு
  • 5 ஆண்டுகளில் 20,000 பொது EV சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படும். இதற்கென ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு
  • குடியிருப்புகளில் அமைக்கப்படும் EV சார்ஜிங் நிலையங்களுக்கு அரசு மானியம். இதற்காக ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு
  • 5 மாவட்டங்களில் ‘அரண் தங்குமிடங்கள்’
  • மாற்று பாலினத்தவருக்கான திறன் பயிற்சியோடு, அவர்கள் சுயதொழில் தொடங்க மானியத்துடன் கடன் உதவி.
  • 5 மாவட்டங்களில் 'அரண்' தங்குமிடங்கள் அமைக்கப்படும். 15 மாவட்டங்களில் குறுகிய கால தங்குமிட வசதிகள் ஏற்படுத்தப் படும்.
  • ரூ.50,000 வரை சுயதொழில் வங்கிக் கடனுக்கு மானியம் வழங்கப்படும்.
  • சிதிலமடைந்த 500 அங்கன்வாடி மையங்களுக்கு புதிய கட்டிடங்கள்
  • ஹஜ் பயண மானியம் ரூ.25,000-ல் இருந்து ரூ.35,000 ஆக உயர்வு.
  • கிறிஸ்தவ, முஸ்லிம் மகளிர் உதவும் சங்கங்களுக்கு ரூ.1.05 கோடி ஒதுக்கீடு.
  • கல்லறைத் தோட்டம் மற்றும் கபர்ஸ்தான்கள் மேம்பாட்டிற்கு ரூ.34 கோடி ஒதுக்கீடு.

அண்ணனின் சீரும், தாய்மாமன் தங்க மோதிர திட்டமும்

  • அரசு மருத்துவமனைகளில் பிறக்கின்ற அனைத்து குழந்தைகளுக்கும், ‘தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின்’ கீழ், 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும். இதற்காக ரூ.560 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு
  • அண்ணனின் சீர் என்ற பெயரில், திருமணத்திற்காக மணமகளுக்கு 8 கிராம் தங்க நாணயம், ஒரு பட்டுப் புடவை வழங்கப்படும். இதற்காக ரூ.812 கோடி நிதி ஒதுக்கீடு
  • 12 மாவட்டங்களில் 12 முதியோர் இல்லங்கள் நிறுவப்படும். இதற்காக ரூ.6.6 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
  • மூத்த குடிமக்கள் பொழுதுபோக்கு மையங்களாக, முதற்கட்டமாக 5 மாவட்டங்களில் நூலகம், தியானம், யோகா, உள்ளரங்க விளையாட்டு வசதிகள் நிறுவப்படும்
  • மாற்றுத் திறனாளிகள் நலத் துறைக்கு 1,485 கோடி ரூபாய் ஒதுக்கீடு
  • சமூகநீதித் துறைக்கு 3,937 கோடி ரூபாய் ஒதுக்கீடு
  • மூத்த குடிமக்களின் நலனுக்காக, மாநிலம் முழுவதும் 1000 நடமாடும் முதியோர் சிகிச்சை மையங்கள் அமைக்கப்படும். இதற்காக ரூ.33 கோடி நிதி ஒதுக்கீடு...
Senior citizens in healthcare

ஆன்றோர் மேம்பாட்டுத் திட்டம்

  • பழங்குடியினர் குடியிருப்புகளில் வாழ்வாதாரத் திட்டங்கள், சுகாதாரக் கட்டமைப்புகள், கல்வி நலன் சார்ந்த உதவித்தொகைத் திட்டங்கள், பள்ளி மற்றும் விடுதி மேம்பாடு உள்ளிட்ட அடிப்படை வசதி மேம்படுத்தப்பட ரூ.250 கோடி நிதி ஒதுக்கீடு
  • அயோத்திதாசப் பண்டிதர் வாழ்விட மேம்பாட்டுத் திட்டம் கீழ் ஆதிதிராவிடர் குடியிருப்புகளில் அடிப்படை சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியுடன் வாழ்க்கைத் தரம் உயர்வை உறுதி செய்ய ரூ. 300 கோடி நிதி ஒதுக்கீடு
  • ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளை நிலஉரிமையாளர்களாக மாற்றும் நோக்குடன், மண்ணின் மகள் திட்டம் அறிமுகம். இதன்மூலம் முத்திரைத்தாள் வரி மற்றும் பதிவுக் கட்டணத்தில் முழு விலக்கு அளிக்கப்படும்.
  • விவசாயத்திற்கென நவீன தொழில்நுட்பப் பயிற்சி வழங்கப்படும். இதற்காக ரூ. 5.20 கோடி நிதி ஒதுக்கீடு

வெற்றி தொழில் முனைவோர் திட்டம்

  •  ஊரகப் பகுதிகளில் பெண்களுக்காக ‘வெற்றி மகளிர் ஆடுகள் வளர்ப்பு’ திட்டத்தின் கீழ் 100% மானியத்தில் 5 வெள்ளாடுகள் அல்லது செம்மறி ஆடுகள் வழங்கப்படும்’
  • அண்ணல் அம்பேத்கர் தொழில்முன்னோடி திட்டத்திற்கு ரூ.165 கோடி ஒதுக்கீடு
  • ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்தவும், நிலையான வளர்ச்சியை உறுதிசெய்யவும் ‘வெற்றி தொழில் முனைவோர் திட்டம்’ செயல்படுத்த தமிழ்நாடு 2026- 27 பட்ஜெட்டில் ரூ.75 கோடி நிதி ஒதுக்கீடு
  • தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறைக்கு 2,022 கோடி ரூபாய் ஒதுக்கீடு
  • கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த் துறைக்கு 1,678 கோடி ரூபாய் ஒதுக்கீடு
  • சிறப்புத் திட்ட செயலாக்கத் துறைக்கு ரூ.17,150 கோடி ரூபாய் ஒதுக்கீடு
Rural employment

Image credits: Unsplash

ஒலிம்பிக் சிறப்பு மையங்கள்

  • மாநிலம் முழுவதும் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட ரூ.50 கோடி ஒதுக்கீடு
  • தமிழரின் பாரம்பரிய விளையாட்டுகளை உலக அரங்கிற்கு கொண்டு செல்லும் நோக்கில், கிராமிய விளையாட்டுப் போட்டிகள் நடத்துவதற்கு, ரூ.42 கோடி ஒதுக்கீடு
  • விளையாட்டில் ஆர்வமும், திறமையும் கொண்ட 8 முதல் 18 வயதுக்குட்பட்ட இளம் பள்ளி மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த பயிற்சிகள் வழங்க ரூ.5 கோடி ஒதுக்கீடு
  • இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு ரூ.1051 கோடி ரூபாய் ஒதுக்கீடு
  • நடப்பாண்டில் 352 மாணவர்கள் பயன்பெறும் வகையில், அண்ணல் அம்பேத்கர் அயல்நாட்டுக் கல்வி உதவித் தொகைத் திட்டம் செயல்படுத்தப்படும். இதற்கென ரூ.131 கோடி ஒதுக்கீடு
  • மதுரையில் 300 மாணவர்களின் சேர்க்கையுடன் புதிய சட்டக்கல்லூரி 
IIT Students

காமராசர் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்

  • பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.44,527 கோடி ஒதுக்கீடு
  • மடிக்கணினி திட்டத்தின் பெயர், வெற்றி மடிக்கணினி திட்டம் என மாற்றப்பட்டு, அதற்கென ரூ.2,000 ஒதுக்கீடு
  • ‘சூப்பர் க்ளீன், சூப்பர் கேம்பஸ்’ திட்டம் 10,000 அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்படும். இதற்கென ரூ.139 கோடி ஒதுக்கீடு
  • பெருந்தலைவர் காமராஜர் சிறப்புப் பள்ளிகள் அமைக்க ரூ.125 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
  • பெருந்தலைவர் காமராசர் காலை உணவுத் திட்டம் 6-8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திட்டம் விரிவாக்கம். இதன்மூலம் 15,414 பள்ளிகளில் பயிலும் 15.14 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர். இதற்கென ரூ. 710 கோடி நிதி ஒதுக்கீடு
  • 5000 அரசுகப் பள்ளிகளிலிருந்து கூடுதலாக 2,600 பள்ளிகளுக்கு TN SPARK விரிவுபடுத்தப்படும்.
  • மாணவிகளின் கல்வி இடைநிற்றலைத் தடுக்க ஊக்கத்தொகை வழங்கப்படும். மொத்தமாக ரூ.462.41 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
  • சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை தொடரும்.
  • 69% இடஒதுக்கீட்டை பாதுகாக்க உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும். பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை
  • 7.5% இடஒதுக்கீட்டின் கீழ் மருத்துவக் கல்விக் கட்டண உதவி
  • பாடத்திட்டை மறுசீரமைப்பு செய்ய ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு
  • அரசுப் பள்ளிகளை மேம்படுத்தும் வகையில் ‘பள்ளி நிறைவுத் திட்டம்' அறிமுகம். இத்திட்டத்தின் கீழ் 3,734 அரசுப் பள்ளிகள் ரூ.2,132 கோடி மதிப்பில் நவீனமயமாக்கப்பட உள்ளன.
  • 2,514 தொடக்கப் பள்ளிகள் மற்றும் 855 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் இத்திட்டத்தின்கீழ் கொண்டுவரப்படுகின்றன. இதற்கென, ரூ. 300 கோடி ஒதுக்கீடு
school students

போதையில்லா தமிழ்நாடு திட்டம்

  • ‘போதையில்லா தமிழ்நாடு’ திட்டத்துக்கு ரூ.7 கோடி ஒதுக்கீடு.
  • 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஹெல்மெட் மற்றும் குடிநீர் பாட்டில் வைப்பது உள்ளிட்ட பல வசதிகள் கொண்ட சைக்கிள் வழங்கப்படும். இதற்காக ரூ.277 கோடி ஒதுக்கீடு
  • பள்ளி பாடத்திட்டம் மறுசீரமைப்புக்கு ரூ.25 கோடி ஒதுக்கீடு
  • பொது நூலகங்களை டிஜிட்டல் நூலகங்களாக மாற்ற ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு
  • போட்டித் தேர்வு பயிற்சிக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு
  • உயர் கல்வித் துறைக்கு ரூ.8393 கோடி ஒதுக்கீடு
  • கல்லூரி மாணவர்களுக்கு ரூ.2000 கோடியில் ‘வெற்றி மடிக்கணினி திட்டம்’ செயல்படுத்தப்படும்.
  • போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சியளிக்க கூடுதலாக ரூ.3 கோடி ஒதுக்கீடு
  • ரூ.90 கோடி மதிப்பீட்டில் 5 புதிய தொழில்பயிற்சி நிறுவனங்கள் அமைக்கப்படும்.
  • 2031ம் ஆண்டுக்குள் பொறியியல கல்லூரிகள், பாலிடெக்னிக் மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் 5 லட்சம் மாணவர்களுக்கு, செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி.

facebook twitter