தமிழ்நாடு பட்ஜெட் 2026-27 - தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறைக்கு 4,414 கோடி ரூபாய் ஒதுக்கீடு!

06:39 PM Aug 05, 2026 | muthu kumar

தமிழ்நாடு அரசின் 2026–27 நிதியாண்டுக்கான முதல் பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன் இன்று (ஆகஸ்ட் 5) சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இந்தப் பட்ஜெட்டில் கல்வி, மாணவர் நலன், வருவாய் மேம்பாடு, நிர்வாக சீர்திருத்தம் மற்றும் நீண்டகால வளர்ச்சித் திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக பட்ஜெட்டில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறைக்கு மொத்தமாக 4,414 கோடி ரூபாய் ஒதுக்கிடப்பட்டுள்ளது.

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம், ‘வெற்றி 150’ என்ற முன்முயற்சியில் 125 நாட்கள் நிறைவு செய்த நலிவற்ற, ஏழை எளிய குடும்பங்களுக்கு கூடுதலாக 25 நாட்கள் அரசு வேலை வழங்கப்படும். 125 நாட்களாக இருக்கும் வேலை நாட்கள் இனி 150 நாட்கள் வழங்கப்படும். இதற்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்கிறது.

2026–27 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் தொழிற்துறை மற்றும் முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையில் அறிவிக்கப்பட்ட முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

  • புதிய தொழிற்பூங்காக்கள் அமைப்பதற்கான நிதி ஒதுக்கீடு செய்து, மாவட்டங்கள் முழுவதும் சமச்சீர் தொழில் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.

  • சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு (MSME) கடன், உள்கட்டமைப்பு மற்றும் சந்தைப்படுத்தல் ஆதரவை வலுப்படுத்த புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

  • உயர் தொழில்நுட்ப உற்பத்தி (Advanced Manufacturing), மின்னணு உற்பத்தி, விண்வெளி மற்றும் பாதுகாப்புத் தொழில்கள் போன்ற துறைகளில் முதலீடுகளை ஈர்க்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

  • பசுமை தொழில்கள் (Green Industries), மின்சார வாகனங்கள் (EV), புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் பேட்டரி உற்பத்தி தொடர்பான முதலீடுகளுக்கு ஊக்கம் அளிக்கப்படும்.

  • தொழிலாளர் திறன் மேம்பாடு மற்றும் தொழில்களின் தேவைக்கேற்ப பயிற்சி அளிக்கும் திறன் மேம்பாட்டு மையங்கள் விரிவுபடுத்தப்படும்.

  • ஏற்றுமதி சார்ந்த தொழில்களுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் தளவாட (Logistics) மேம்பாட்டுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது.

  • ஸ்டார்ட்அப் மற்றும் புதுமை (Innovation) சூழலை ஊக்குவிக்கும் வகையில் தொழில்முனைவோருக்கு ஆதரவு திட்டங்கள் தொடரும்.

  • முதலீட்டு அனுமதி நடைமுறைகளை மேலும் எளிமையாக்கி, ஒற்றைச் சாளர (Single Window) சேவைகள் வலுப்படுத்தப்படும்.

  • மாவட்ட வாரியான தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் புதிய தொழில் மையங்கள் மற்றும் உற்பத்தி மண்டலங்கள் உருவாக்கப்படும்.

இந்த அறிவிப்புகள், தமிழ்நாட்டை உயர்தர உற்பத்தி, ஏற்றுமதி மற்றும் வேலைவாய்ப்பு மையமாக மேலும் வலுப்படுத்தும் நோக்கத்துடன் இடம்பெற்றுள்ளன.

தொழிற்துறைக்கான நிதி ஒதுக்கீடு:

தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறையின் திட்டங்களை செயல்படுத்த ரூ.4,414 கோடி ஒதுக்கியுள்ளது தமிழ்நாடு அரசு இதில் புதிய தொழிற்பூங்காக்கள், தொழில் உள்கட்டமைப்பு, MSME மேம்பாடு, முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் திறன் மேம்பாட்டு திட்டங்களுக்கு முக்கிய பங்கு வழங்கப்பட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவு தொழில் வளர்ச்சித் திட்டம்:

தனித்துவமான செயற்கை நுண்ணறிவுப் பாடத்திட்டங்களை வடிவமைக்கக் கல்வியாளர்கள் மற்றும் தொழில்துறை முன்னோடிகள் கொண்ட நிபுணர்கள் குழு அமைக்கப்படும்.

2031ம் ஆண்டிற்குள் பொறியியல் கல்லூரிகள் பாலி டெக்னிக் கல்லூரிகள் மற்றும் தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிலும் 5 லட்சம் இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவுத் திறன் பயிற்சி அளிக்கப்படும்.

புதிய தொழிற்பூங்காக்கள்:

மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் சமநிலை தொழில் வளர்ச்சியை உறுதி செய்ய புதிய தொழிற்பூங்காக்கள் மற்றும் தொழில் வளாகங்கள் உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, அதிக வேலைவாய்ப்பை உருவாக்கக்கூடிய உற்பத்தித் துறைகளுக்கு தேவையான நிலம், சாலை, மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் புதிய தொழில் மையங்கள் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

மாவட்ட வாரியான தொழில் வளர்ச்சி:

ஒரே நகரத்தை மையமாகக் கொள்ளாமல், ஒவ்வொரு மாவட்டத்தின் இயற்கை வளம் மற்றும் தொழில் திறனை அடிப்படையாகக் கொண்டு புதிய முதலீடுகள் ஈர்க்கப்படும். பின்தங்கிய மாவட்டங்களில் தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்க சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன. இதன் மூலம் பிராந்திய வளர்ச்சி மற்றும் உள்ளூர் வேலைவாய்ப்பை அதிகரிப்பதே நோக்கமாகும்.

MSME துறைக்கான நடவடிக்கைகள்:

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு எளிய கடன் வசதி, தொழில்நுட்ப மேம்பாடு, சந்தைப்படுத்தல் ஆதரவு, ஏற்றுமதி ஊக்கம் மற்றும் பொதுவான உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். தொழில் தொடங்குவதற்கான அனுமதி நடைமுறைகளும் மேலும் எளிமைப்படுத்தப்படும்.

முக்கிய முதலீட்டு அறிவிப்புகள்:

மின்னணு உற்பத்தி, மின்சார வாகனங்கள் (EV), புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, விண்வெளி மற்றும் பாதுகாப்பு உற்பத்தி, உயர் தொழில்நுட்ப உற்பத்தி போன்ற துறைகளில் புதிய முதலீடுகளை ஈர்க்க அரசு நடவடிக்கை எடுக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கு விரைவான அனுமதிகள் வழங்கும் ஒற்றைச் சாளர (Single Window) முறை மேலும் வலுப்படுத்தப்படும்.

திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பு:

தொழில்களின் தேவைக்கு ஏற்ப இளைஞர்களுக்கு தொழில்திறன் பயிற்சி வழங்கும் மையங்கள் விரிவுபடுத்தப்படும். தொழில் நிறுவனங்களுடன் இணைந்து திறன்மிக்க மனிதவளத்தை உருவாக்கும் திட்டங்களும் செயல்படுத்தப்படும். 12 லட்சம் கல்லூரி மாணவர்கள் மற்றும் 1 லட்சம் வேலையில்லா இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு ரூ.150 கோடி ஒதுக்கியுள்ளது.

ஏற்றுமதி மற்றும் லாஜிஸ்டிக்ஸ் வசதிகள்:

ஏற்றுமதி சார்ந்த தொழில்களுக்கு தேவையான கிடங்கு, போக்குவரத்து மற்றும் லாஜிஸ்டிக்ஸ் வசதிகள் மேம்படுத்தப்பட்டு, தமிழ்நாட்டின் ஏற்றுமதி திறனை உயர்த்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.