+

'மக்கும் மேனிக்வின்கள்' - டன் கணக்கில் குவியும் ஜவுளிக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் ஈரோடு தம்பதி..!

ஜவுளி உற்பத்தியின் போது வீணாகும் ஜவளிக் கழிவுகள் குவியல் குவியலாக குப்பைக் கிடங்குகளில் கொட்டப்படுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஈரோடு தம்பதியினர், ஜவுளி கழிவுகளிலிருந்து காகிதங்களையும், மக்கும் மேனிக்வின்களையும் தயாரித்து, பேஷன் துறையில் சுற்றுச்சூழ

ஜவுளி உற்பத்தியின் போது வீணாகும் ஜவளிக் கழிவுகள் குவியல் குவியலாக குப்பைக் கிடங்குகளில் கொட்டப்படுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த ஈரோடு தம்பதியினர், ஜவுளி கழிவுகளிலிருந்து காகிதங்களையும், மக்கும் மேனிக்வின்களையும் தயாரித்து, வெகு காலமாக சுற்றுச்சூழல் தடத்துடன் போராடி வரும் பேஷன் துறையில் சுற்றுச்சூழல் புரட்சி செய்து, வணிக ரீதியாகவும் வெற்றிக் கண்டுள்ளனர்.

90-களின் வாக்கில் ஒரு நாள், எஸ்.பி. மணியும் அவரது மனைவி அமுதாவும் திருப்பூர் ஜவுளி மையத்திற்கு சென்றிருந்தனர். அப்போது, ஜவுளி உற்பத்தியின் போது வீணாகும் ஜவளிக் கழிவுகள் குவியல் குவியலாக குப்பைக் கிடங்குகளில் கொட்டப்படுவதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். அதை கண்ட அனுபவமிகு காகித உற்பத்தியாளரான மணிக்கு, ஒரு காலத்தில் அரசு நடத்திய திறன் மேம்பாட்டுத் திட்டத்தில், ஜவுளிகளிலிருந்து காகிதத்தை உற்பத்தி செய்யும் பயிற்சியில் கலந்து கொண்டது நினைவுக்கு வந்துள்ளது. அந்த அறிவை மீண்டும் உயிர்ப்பித்து அதைப் பயன்படுத்துவதற்கு அதுவே சரியான தருணமாக உணர்ந்தார்.

Textile waste

ஊர் திரும்புகையில், ஜவுளிக் கழிவு மூட்டைகளுடன் சென்றுள்ளனர். அதைக் கொண்டு நிலையான மற்றும் சூழலுக்கு உகந்த கையால் செய்யப்பட்ட காகிதங்களை உருவாக்கினர். வெகு விரைவில் அந்த காகிதங்கள் பெயர் அட்டைகள், ப்ரைஸ் டேக்குகள், பேப்பர் பேக்குகளாக பரிணமித்தன. இன்று, ஃபேஷன் துறையில் முக்கியமான மேனிக்வின்களை அவர்களது மறுசுழற்சி செய்யப்பட்ட காகிதங்களால் தயாரிப்பதை முதன்மையாக்கி அத்துறையில் நிலையான மாற்றத்தை கொண்டுவந்துள்ளனர்.

மாத்தி யோசித்த ஈரோடு தம்பதி

​​ஈரோட்டைச் சேர்ந்த 'ஜோதி ஸ்பெஷாலிட்டி பேப்பர்ஸ்' நிறுவனமானது, வெகு காலமாக சுற்றுச்சூழல் தடத்துடன் போராடி வரும் பேஷன் துறைக்கு அதன் புதுமையான அணுகுமுறையால், தீர்வு கண்டுள்ளது. நகைக் கடைகளுக்கான மார்பளவு மேனிக்வின்கள், துணிக்கடைகளுக்கான முழுஉருவ மேனிக்வின்கள், காலணிகளை காட்சிப்படுத்தும் மேனிக்வின்கள், என அனைத்து வகையான நிலையான மேனிக்வின்களை தயாரிப்பதில் முன்னோடியாக உள்ளது.

இதுவரை கிட்டத்தட்ட 2,00,000 மேனிக்வின்களை தனிஷ்க் நிறுவனத்திற்கு விற்பனை செய்துள்ளது.

"90களில் இன்று இருப்பது போல் மறுசுழற்சி செய்வதோ அல்லது மறுசுழற்சி செய்வது பற்றிய யோசனைகளோ பெரியளவில் மதிக்கப்படவில்லை, அதற்கு வரவேற்புமில்லை," என்றார் ஜோதி ஸ்பெஷாலிட்டி பேப்பர்ஸை இரண்டாம் தலைமுறையாக தலைமை தாக்கி வரும் அவர்களின் மகன் மேகநாதன்.

கொரோனாவுக்கு பிந்தைய வணிகமும்; வாடிக்கையாளர்களின் நுகர்வு மாற்றமும்;

ஜவுளி மதிப்புச் சங்கிலியின்படி இந்தியா, ஆண்டுதோறும் சுமார் 7.8 மில்லியன் டன் ஜவுளிக் கழிவுகளை உருவாக்குகிறது. உலகளாவிய மொத்த கழிவுகளில் இது சுமார் 8.5% ஆகும். COVID-19 தொற்றுநோயின் எதிரொலியாக மக்கள் சூழலுக்கு உகந்த பொருள்களின் மீது கவனத்தைத் திருப்பினர். அச்சமயத்தை மணி மற்றும் அவரது குடும்பத்தினர், ஃபேஷன் பிராண்டுகளைச் சந்தித்து, ஃபைபர் கிளாஸ் மற்றும் பிளாஸ்டிக் மேனிக்வின்களுக்கு மாற்றாக அவர்களது மறுபயன்பாட்டு காகிதத்திலிருந்து தயாரிக்கப்பட்ட மேனிக்வின்களை வழங்குவதற்கான வாய்ப்பாக பயன்படுத்தினர்.

"2010ம் ஆண்டு, தனிஷ்க் நிறுவனம் நகைகளை காட்சிப்படுத்தும், மார்பளவு மேனிக்வின்களை வேண்டி எங்களை அணுகியது. அன்றிருந்து ஒவ்வொரு ஆண்டும் 10,000 முதல் 15,000 மார்பளவு மேனிக்வின்களை அவர்களுக்கு விற்பனை செய்து வருகிறோம். இதுவரை கிட்டத்தட்ட 2,00,000 மேனிக்வின்களை விற்பனை செய்துள்ளோம் தொற்றுநோய்க்குப் பிறகு, நாங்கள் ஜவுளித்துறைக்கு தேவையான மேனிக்வின்கள் மற்றும் காலணிகளை காட்சிப்படுத்தும் மேனிக்வின்களையும் உருவாக்கத் தொடங்கினோம்" என்று பகிர்ந்தார் மேகநாதன்.

இன்று ஜோதி ஸ்பெஷாலிட்டி பேப்பர்ஸ் நிறுவனமானது, உலகளாவிய மறுசுழற்சி தரநிலை (GRS என்பது மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் தயாரிப்புகளுக்கான சர்வதேச, தன்னார்வ சான்றிதழ்) - சான்றளிக்கப்பட்ட பருத்தி காகிதம், பலகை மற்றும் மேனிக்வின் உற்பத்தியாளராக உள்ளது.

பாரம்பரிய நுட்பங்களைக் கொண்டு குறைந்த தாக்க செயல்முறையைப் பயன்படுத்தி மேனிக்வின்கள் தயாரிக்கப்படுகின்றன. மேனிக்வின்கள் தயாரிப்பின் முதல் படி, உதிரி துணித் துண்டுகளை சேகரிப்பதிலிருந்து தொடங்குகிறது. பெரும்பாலும் திருப்பூரின் தொழில்துறை மையங்களில் உள்ள ஆடை மற்றும் பொம்மை உற்பத்தி அலகுகளில் இருந்து பெறப்பட்ட பருத்தி துண்டுகளை பயன்படுத்துகின்றன. இந்த ஜவுளி கழிவுகள் துண்டாக்கப்பட்டு அடர்த்தியான, நார்ச்சத்து கலவையில் கூழாக்கப்படுகின்றன.

காகிதத்தின் வலிமை மற்றும் மக்கும் தன்மையை உறுதி செய்வதற்காக, இந்த கூழ் தாவர அடிப்படையிலான, நச்சுத்தன்மையற்ற பிசின் சேர்த்து கலக்கப்பட்டு, ஒரு இணக்கமான பொருளாக உருவாக்கப்படுகிறது. பின்னர், அவை மோல்டிங், வடிவமைத்தல் முறையில் இறுதி தயாரிப்பாக வெளிவருகின்றன. ஒவ்வொரு மேனிக்வினும் பயிற்சி பெற்ற பெண்கள் குழுவால் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்படுகிறது. பள்ளிப்பாளையம் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் அருகிலுள்ள கிராமங்களைச் சேர்ந்த 55 பெண்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கியுள்ளது.

erode couple

எஸ்.பி. மணி, மற்றும் மனைவி அமுதா ஊழியர்களுடன் பட உதவி: தி இந்து

பருத்தி, கந்தல் அல்லது சணல் போன்ற நார்ச்சத்து நிறைந்த ஜவுளிக் கழிவுகளை கொண்டு தயாரிக்கப்படும் அடர்த்தியான மற்றும் உறுதியான காகிதக் கூழ்களை, கனமான மேனிக்வின்களை தயாரிக்க பயன்படுத்துகின்றனர். மெல்லிய, நீர்த்த கூழ் கலவைகள் இலகுவான மேனிக்வின்களுக்குப் பயன்படுத்தப்படுகின்றன. பின்னர், அவைகள் சூரிய ஒளியில் இயற்கையாகவே உலர்த்தப்படுகின்றன. இதன்மூலம் ஆற்றல் மிகுந்த அடுப்புகள் அல்லது தொழில்துறை உலர்த்திகளின் தேவை நீக்கப்படுகிறது. சராசரியாக, ஒரு மேனிக்வினை செய்து முடிக்க ஒரு வாரம் தேவைப்படுகிறது.

சூழலுக்கேற்ற மக்கும் மேனிக்வின்கள்!

சந்தையில் புழக்கத்திலுள்ள கண்ணாடியிழை மேனிக்வின்கள் ஆபத்தான இரசாயனங்கள் மற்றும் பிசின்களைப் பயன்பத்தி தயாரிக்கப்படுகின்றது. இது சுற்றுச்சூழலுக்கும் உற்பத்தித் தொழிலாளர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்துகிறது என்று அறிக்கைகள் காட்டுகின்றன. இதற்கு நேர்மாறாக, மறுசுழற்சி செய்யப்பட்ட துணிப் பொருட்களிலிருந்து தயாரிக்கப்படும் மேனிக்வின்கள் பொதுவாக இந்த நச்சுப் பொருட்களைத் தவிர்க்கின்றன.

மேலும், காகித பேஸ்ட் போன்ற மக்கும் பொருட்களிலிருந்து மேனிக்வின்கள் தயாரிக்கப்படுவதால், நீண்ட காலத்திற்கு சுற்றுச்சூழலில் நீடிக்கும் கண்ணாடியிழை அல்லது பிளாஸ்டிக் மேனிக்வின்களைப் போலல்லாமல், அவற்றின் வாழ்க்கைச் சுழற்சியின் முடிவில் இயற்கையாகவே சிதைந்துவிடும்.

"ஃபைபர் கிளாஸ் மேனிக்வின்களின் சந்தை விலை ரூ.8,000 முதல் ரூ.12,000 வரை உள்ளது. எங்களது மேனிக்வின்கள் கையால் செய்யப்படுபவை. மேலும் உற்பத்தி செலவுகள் சற்று அதிகமாக இருப்பதால், அவற்றின் விலை ரூ.15,000-ரூ.20,000 வரை சற்று அதிகமாக உள்ளது. ஆனால், பெரும்பாலும் எங்கள் மேனிக்வின்களுக்கான ஆர்டர்கள் பல்க்காக வருவதால், கிட்டத்தட்ட ஃபைபர் கிளாஸ் மேனிக்வின்களின் விலையில் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கின்றது.

Mannequins

மக்கும் கேனிக்வின்கள்

ஜாரா மற்றும் டியோர் போன்ற உலகளாவிய ஃபேஷன் பிராண்டுகள் எங்களது மேனிக்வின்களை பயன்படுத்தப்படுகின்றன. துபாயில் உள்ள ஏற்றுமதி வணிகங்களுக்கும் ஆஸ்திரேலியாவில் வரவிருக்கும் ஃபேஷன் விழாவிற்கும் மேனிக்வின்களை வழங்குகிறோம். இப்போதுதான் நிறுவனத்தின் வணிகம் தொடங்கியுள்ளது என்பதை நம்புகிறோம," என்று கூறினார் மேகநாதன்.

"உற்பத்தி செலவுகள் என்றுப் பார்த்தால், பிளாஸ்டிக் மேனிக்வின்கள் மலிவானவை. ஃபைபர் கிளாஸ், நீடித்து உழைக்கும் மற்றும் பரவலாகப் பயன்படுத்தப்படும் அதே வேளையில், பிளாஸ்டிக் பிசின் மற்றும் நுண்ணிய கண்ணாடி இழைகளின் கலவையால் தயாரிக்கப்படுவதால் அவற்றை, மறுசுழற்சி செய்வதோ அல்லது மறுபயன்பாடு செய்வதோ மிகவும் கடினம். டவுன்சைக்ளிங் மூலம் மீண்டும் பயன்படுத்தலாம். பொடியாகவோ அல்லது சில்லுகளாகவோ அரைக்கப்பட்டு, பின்னர் அவை கான்கிரீட், தார்ரோடுகள் அல்லது கட்டுமானப் பலகைகளில் நிரப்பிகளாகப் பயன்படுத்தப்படுகிறது."

இந்த செயல்முறைகள் அனைத்திற்கும் அதிக சக்தி வாய்ந்த தொழில்துறை இயந்திரங்கள் மற்றும் அதிக ஆற்றல் தேவைப்படும். எங்கள் மக்கும் மேனிக்வின்கள் ஃபைபர் கிளாஸை விட ஓரளவு விலை அதிகம் தான். ஆனால், இன்டர்நேஷனல் பிராண்டுகள் நிலையான மற்றும் நீடித்த தயாரிப்புகளுக்கு மதிப்பு அளிப்பதன் மூலம், பிராண்டின் அடையாளத்தை உயர்த்தி கொள்ள முயல்கின்றன. அதனால், அவை நிலையான மேனிக்வின்களில் முதலீடு செய்ய தயாராக இருக்கின்றன, என்று கூறிமுடித்தார் மேகநாதன்.

தமிழில்: ஜெயஸ்ரீ

facebook twitter