மத்திய பட்ஜெட் 2026: புதிய அறிவிப்புகள் என்ன? தமிழ்நாட்டுக்கு என்ன ஒதுக்கீடு?

03:24 PM Feb 01, 2026 | Chitra Ramaraj

2026-2027ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பிரதமர் மோடி முன்னிலையில் இன்று மக்களவையில் தாக்கல் செய்துள்ளார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். தொடர்ந்து 9வது முறையாக மத்திய பட்ஜெட்டை அவர் தாக்கல் செய்துள்ளார்.

காலை 11 மணிக்கு தொடங்கிய இந்த பட்ஜெட் தாக்கலில், பல முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இதோ அவற்றின் தொகுப்பு...

பட்ஜெட் 2026: முக்கிய நிதி ஒதுக்கீடுகள்

  • பயோ பார்மா சக்தி திட்டத்துக்கு ரூ.10, 000 கோடி
  • செமிகண்டக்டர் 2.0 திட்டத்துக்கு ரூ.40,000 கோடி
  • சிறு குறு தொழில் வளர்ச்சிக்கு ரூ.10,000 கோடி
  • சிறுதொழில் முதலீடுகளுக்கு ரூ.2,000 கோடியில் திட்டம். சிறந்த நிறுவனங்களை ஊக்குவிக்க இந்த நிதி பயன்படுத்தப்படும்
  • மூலதன செலவுகளுக்கு ரூ. 12.02 லட்சம் கோடிகள்
  • உதிரி தயாரிப்பு மருந்துகளுக்கு ரூ. 10,000 கோடி
  • கார்பன் உமிழ்வைக் குறைக்க மின்சாரம், இரும்பு, ரசாயனம், சுத்திகரிப்புக்கு ரூ. 20,000 கோடி ஒதுக்கீடு
  • பாதுகாப்புத் துறைக்கு ரூ. 7.8 லட்சம் கோடி ஒதுக்கீடு
  • கோயில்கள் மற்றும் ஆன்மீக நகரங்களின் வளர்ச்சிக்கு ₹5,000 கோடி ஒதுக்கீடு

பெண்களுக்கான சிறப்பு அறிவிப்புகள்

  • பெண் தொழில்முனைவோரை ஊக்குவிக்கும் வகையில், ‘ஷி’ (SHE) என்ற பெயரில் புதிய திட்டம் அறிமுகம்
  • VGF திட்டத்தின் கீழ், இந்தியாவில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மாணவிகள் மற்றும் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கான விடுதிகள் அமைக்கப்படும்.

மீன்வளத்துறையை மேம்படுத்த புதிய திட்டங்கள்

  • நாடு முழுவதும் மீன்வளத் துறையை மேம்படுத்தும் வகையில் கடலோரப் பகுதிகளில் கட்டமைப்புகளை உருவாக்க புதிய திட்டங்கள் அறிவிப்பு
  • பால், கோழி வளர்ப்பு உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கைகள்
  • வாரணாசி, பாட்னாவில் நதி போக்குவரத்து
  • அடுத்த 5 ஆண்டுகளில் 20 புதிய நீர்வழிப் பாதைகள் பயன்பாட்டிற்கு வரும் என அறிவிப்பு
  • இதன் மூலம் 2047க்குள் உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்தின் பங்கை 12%-ஆக உயர்த்த இலக்கு நிர்ணயம்

சீர்திருத்தங்களுக்கே முன்னுரிமை

இந்த பட்ஜெட் அறிவிப்பில் சலுகைகளைக் காட்டிலும், சீர்த்திருத்தங்களுக்கே அதிக முன்னுரிமை என நிர்மலா சீதாதாரம் தெரிவித்துள்ளதால், தற்போதைய வணிக நெருக்கடிகள் குறைந்து, இனி வரும் காலங்களில் சிறப்பாக தொழில் செய்ய முடியும் என எதிர்பார்ப்பு.

  • மகாத்மா காந்தி ஸ்வராஜ் திட்டம் என்ற பெயரில் நாட்டில் 4 மெகா ஜவுளி பூங்காக்கங்கள் அமைக்கப்படும். இதன்மூலம் காதி, கைத்தறி தொழில் மேம்படுத்தப்படும்.
  • சிறு மற்றும் குறு தொழில் வளர்ச்சிக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • மாநிலங்கள் உடன் இணைந்து 3 கெமிக்கல் பூங்காக்கள் அமைக்கப்படும்
  • விவசாயிகளின் நிலம், சாகுபடி உள்ளிட்டவற்றின் விபரங்களை ஒருங்கிணைக்க பாரத் விஸ்தார் ஏஐ செயலி
  • கடலோரப் பகுதிகளில் தேங்காய், முந்திரி மற்றும் கோகோ போன்ற அதிக மதிப்புள்ள பயிர்களை விளைவிக்க ஊக்குவிப்பு
  • வால்நட் மற்றும் பைன் கொட்டைகள் போன்ற கொட்டைகள் சாகுபடிக்கும் ஆதரவு
  • உள்நாட்டு ரசாயன உற்பத்தி மற்றும் ஆராய்ச்சி ஊக்குவிக்கப்படும்.
  • இறக்குமதி மீதான சார்பு பெருமளவு குறையும்.
  • தென்னை விவசாயத்தில் போட்டியை சமாளிக்கும் வகையில் தென்னை மேம்பாட்டுத் திட்டம் அறிவிப்பு

பங்குச்சந்தையில் முதலீடு செய்ய தளர்வுகள்

  • வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்திய பங்குச்சந்தைகளில் முதலீடு செய்யும் வகையில் தளர்வுகள் செய்யப்படும். முந்தைய தடைகள் அனைத்தும் நீக்கப்படும் என அறிவிப்பு
  • வெளிநாடுகளில் சொத்துக்கள் வைத்துள்ள இந்தியர்கள், அவற்றை அறிவிக்க மேலும் 6 மாத சிறப்பு அவகாசம்
  • கலால் மற்றும் சுங்க வரி விதிப்பு நடைமுறை எளிதாக்கப்படும்.
  • வெளிநாட்டு சுற்றுலாவிற்கான வரிப்பிடித்தம் 2 சதவீதம் குறைப்பு
  • சுற்றுலாத் துறை வளர்ச்சிக்கு கடல் விமானங்கள் உற்பத்திக்கு ஊக்குவிப்பு அளிக்கப்படும்

தமிழ்நாட்டிற்கான முக்கிய அறிவிப்புகள்

  • தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா மற்றும் ஒடிசா போன்ற கனிம வளம் மிக்க மாநிலங்களில், அரிய வகை கனிமங்களை ஆய்வு செய்ய மையம் அமைக்கப்படும்.
  • அரிய வகை கனிமங்களுக்கு தனி வழித்தடத் திட்டம் ஒன்றை உருவாக்கவும் மத்திய அரசு திட்டம்
  • தமிழ்நாட்டில் உள்ள ஆதிச்சநல்லூரில் தொல்லியல் கலாச்சார மையம்
  • பொதிகை மலையில் மலையேற்ற சுற்றுலாவை ஊக்குவிக்க நடவடிக்கை
  • சென்னை - பெங்களூரு, சென்னை - ஹைதராபாத் உள்ளிட்ட, நாட்டின் 7 முக்கிய நகரங்களுக்கு இடையில் அதிவேக ரயில் வழித்தடம் அமைக்கப்படும்
  • கிழக்கு மேற்கு பகுதிகளை இணைக்க பிரத்யேக சரக்கு ரயில் பாதை
  • மாநிலங்களுக்கான நிதிப் பகிர்வை 41%ல் இருந்து 50%மாக உயர்த்தும் தமிழக அரசின் கோரிக்கை இந்த பட்ஜெட்டில் ஏற்கப்படவில்லை.

மருத்துவம் மற்றும் ஆராய்ச்சிகள் தொடர்பான அறிவிப்புகள்

  • 7 அரிய வகை நோய்களுக்கான மருந்துகளுக்கான அடிப்படை சுங்க வரி ரத்து.
  • கால்நடை மருத்துவமனைகளை நிறுவ கடன் சார்ந்த உதவி அமைப்பு அமைக்கப்படுகிறது.
  • வாகன விபத்துக்கான இழப்பீட்டுக்கு வரி விலக்கு
  • மருத்துவக் கல்வி கடனுக்கான வரி 5% லிருந்து, 2%மாக குறைப்பு
  • 3 புதிய தேசிய மருந்துக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் (NIPER) திறக்கப்படும்.
  • தற்போதுள்ள 7 நிறுவனங்கள் மேம்படுத்தப்படும்.
  • நாடு முழுவதும் 1,000 அங்கீகாரம் பெற்ற மருத்துவ பரிசோதனை தளங்களின் வலையமைப்பு உருவாக்கப்படும்.
  • வட இந்தியாவில் மனநல நிறுவனத்தைக் கொண்டுவருவதற்காக NIMHANS 2.0 ஐ அமைக்க அரசு திட்டம்
  • மலிவு விலையில் புற்றுநோய் மற்றும் சர்க்கரை நோய் சிகிச்சை
  • கால்நடை மருத்துவத் துறையில் 20,000 புதிய நிபுணர்களை உருவாக்கத் திட்டம்

வெளிநாட்டு கிளவுட் சேவைகளுக்கு 2047 வரை வரி விலக்கு

  • இந்தியாவில் தரவு மையங்களை அமைக்க மத்திய பட்ஜெட்டில் ஊக்கம்
  • இந்தியாவில் செயல்படும் மென்பொருள் தரவு மையங்களுக்கு ஊக்கத்தொகை
  • இந்தியாவில் கிளவுட் சேவைகளை வழங்கும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வரும் 2047ம் ஆண்டு வரை வரி விலக்கு
  • தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் குவாண்டம் மிஷனுக்கு அதிக முக்கியத்துவம்
  • அணு மின் திட்டங்களுக்கான இறக்குமதிக்கான அடிப்படை சுங்க வரி விலக்கு 2030–35 வரை நீட்டிப்பு