+

UPSC 2026 மெயின்ஸ் தேர்வு எழுதும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு ரூ.15,000 உதவித்தொகை: Veranda Learning - கல்பதரு அறக்கட்டளை அறிவிப்பு!

சென்னை: வெரண்டா லேர்னிங் நிறுவனத்தின் ஒரு பகுதியான வெரண்டா IAS உடன் இணைந்து, கல்பதரு கல்வி அறக்கட்டளை, UPSC சிவில் சர்வீசஸ் ப்ரிலிமினரி தேர்வு 2026-ஐ தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்காக “UPSC மெயின்ஸ் உதவித்தொகை & பயிற்சித் திட்டம் 2026”-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், தேர்ந்தெடுக்கப்படும

சென்னைச் சேர்ந்த ‘வெரண்டா லேர்னிங்’ (Veranda Learning) நிறுவனத்தின் ஒரு பகுதியான 'வெரண்டா IAS' உடன் இணைந்து, கல்பதரு கல்வி அறக்கட்டளை, UPSC சிவில் சர்வீசஸ் ப்ரிலிமினரி தேர்வு 2026-ஐ தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்காக 'UPSC மெயின்ஸ் உதவித்தொகை & பயிற்சித் திட்டம் 2026'-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது.

இத்திட்டத்தின் கீழ், தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு மூன்று மாத மெயின்ஸ் தயாரிப்புக்கு ஆதரவாக ₹15,000 உதவித்தொகை வழங்கப்படுவதோடு, வெரண்டா IAS ஆசிரியர்களிடமிருந்து இலவசப் பயிற்சி, வழிகாட்டல் மற்றும் பதில் எழுதும் (answer-writing) வழிகாட்டுதலும்வழங்கப்படும். ஜெனரல் ஸ்டடீஸ், கட்டுரை மற்றும் எத்திக்ஸ் ஆகியவற்றில் கவனம் செலுத்தும்.

இத்திட்டம், மாணவர்களின் மெயின்ஸ் தயாரிப்பை வலுப்படுத்த தினசரி பதில் எழுதும் பயிற்சி, தனிப்பயன் கருத்துரை மற்றும் செயல்திறன் கண்காணிப்பை உள்ளடக்கியுள்ளது. இது குறித்து கல்பதரு கல்வி அறக்கட்டளையின் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது,

“பல தகுதியான மாணவர்கள் ப்ரிலிம்ஸ் தேர்வில் வெற்றி பெறுகிறார்கள்; ஆனால் கடினமான மெயின்ஸ் தயாரிப்புக் கட்டத்தில் சவால்களை எதிர்கொள்கிறார்கள். இந்த முயற்சியின் மூலம், நிதி உதவியையும் நிபுணர் வழிகாட்டுதலையும் வழங்கி, இறுதி தரவரிசைப் பட்டியலில் இடம்பெறும் வாய்ப்பை அதிகரிக்க மாணவர்களுக்கு உதவ விரும்புகிறோம்,” என்றார்.
Veranda

வெரண்டா IAS-ன் பிசினஸ் ஹெட் டாக்டர் விக்னேஸ்வர் குமார் கூறியதாவது,

“மெயின்ஸ் தேர்வு, தெளிவான சிந்தனைக்கும் திறமையான பதில் எழுதுதலுக்கும் முக்கியத்துவம் அளிக்கிறது. கட்டமைக்கப்பட்ட வழிகாட்டல், தினசரி பயிற்சி மற்றும் வழக்கமான கருத்துரை மூலம்,கிடைக்கும் குறுகிய காலத்தில் மாணவர்களைத் தேர்வுக்குத் தயாராக்க உதவுவதே எங்கள்நோக்கம்,” என்றார்.

திட்டத்தின் சிறப்பம்சங்கள்

• தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு ₹15,000 உதவித்தொகை

• இலவச UPSC மெயின்ஸ் பயிற்சி

• தினசரி பதில் எழுதும் பயிற்சி மற்றும் மதிப்பீடு

• GS, கட்டுரை மற்றும் எத்திக்ஸ் உள்ளடக்கம்

• தனிப்பட்ட வழிகாட்டல் மற்றும் செயல்திறன் கண்காணிப்பு

• அனுபவம் வாய்ந்த வெரண்டா IAS ஆசிரியர்களின் வழிகாட்டுதல்

தகுதி மற்றும் பதிவு

  • இத்திட்டம் UPSC சிவில் சர்வீசஸ் ப்ரிலிமினரி தேர்வு 2026-ஐ தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்குமட்டுமே.

  • ஆர்வமுள்ள மாணவர்கள் மேலதிக விவரங்களுக்கு 89255 21735 என்ற எண்ணைத் தொடர்புகொள்ளலாம். இடங்கள் வரையறுக்கப்பட்டவை; முந்தி வருபவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் ஒதுக்கப்படும்.
facebook twitter