
இந்தியாவின் முன்னணி பணியிட தீர்வுகள் சேவை அளிக்கும் '91ஸ்பிரிங்போர்டு' (91 Springboard) நிறுவனம், தென்னிந்தியாவில் சென்னை மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களில் இரண்டு புதிய மையங்களை துவக்குவதாக அறிவித்துள்ளது.
ஒரு லட்சம் சதுர அடி பரப்பிலான இந்த மையங்கள், 2,500 இருக்கைகள் கொண்டுள்ளன என்றும், நிறுவன பிராந்திய வளர்ச்சி பயணத்தில் முக்கிய மைல்கல்லாக அமைகிறது என்றும் தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் பெங்களூருவில் உள்ள இரண்டு மையங்களும், ஏ- கிரேடு வர்த்தக பூங்காக்களில் பிரிமியம் வசதிகளோடு அமைந்துள்ளன.

உலகளாவிய திறன் மையங்கள், பெரிய வர்த்தக நிறுவனங்கள், எம்.எஸ்.எம்.இ. மற்றும் ஸ்டார்ட் அப்கள் ஆகியவற்றுக்கு ஏற்ற பணியிட தீர்வுகளை வழங்கும் நிறுவனம் தற்போது தென்னிந்தியாவில் மொத்தம் 6 லட்சம் சதுர அடி பரப்பில், 13 மையங்களை கொண்டுள்ளதாகவும் இது தொடர்பான செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
மேலும், தென்னிந்திய சந்தையில் அதிகரிக்கும் தேவையை ஈடு செய்ய, இந்த நிதியாண்டில் கூடுதலாக 1.5 லட்சம் சதுர அடி பரப்பை அமைக்க திட்டமிட்டுள்ளது. இரண்டு மையங்களும் பிப்ரவரியில் செயல்படத் துவங்கும்.
91ஸ்பிரிங்போர்ட் அண்மையில் சென்னையில் நுழைவதை அறிவித்ததோடு விரிவாக்க திட்டங்களையும் தெரிவித்திருந்தது. 2025 துவக்கம் முதல் நிறுவனம் ஐதராபாத், தில்லி, புனே, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட இடங்களில் 14 புதிய மையங்களை அமைத்துள்ளது.
“91ஸ்பிரிங்போர்டு நீடித்த மற்றும் குறிக்கோள் கொண்ட வளர்ச்சியின் முக்கிய கட்டத்தில் உள்ளது. சென்னை போன்ற புதிய சந்தையில் நுழைவது மற்றும் பெங்களூரு போன்ற நகரங்களில் விரிவாக்கம் செய்வது உள்ளிட்ட செயல்பாடுகளில் வர்த்தகங்கள் செழிக்க உதவும், உராய்வு இல்லாத வாடிக்கையாளர் சார்ந்த பணியிடங்களை வழங்குவது நோக்கமாக இருக்கிறது,” என நிறுவன சி.இ.ஓ.அன்ஷு சரின் கூறியுள்ளார்.
பெங்களூருவில் ஹிலியோஸ் வர்த்தக பூங்காவில் 56,000 சதுர பரப்பில் மையம் அமைந்துள்ளது,. சென்னையில் ஒலிம்பியா சைபர்ஸ்பேசில் 50,000 சதுர அடி பரப்பில் மையம் அமைந்துள்ளது.
சென்னை கிண்டியில் ஒலிம்பியா சைபர்ஸ்பேசில் அமைந்துள்ள இம்மையம், நீடித்த தன்மை மற்றும் பயனாளிகள் நலத்தை கவனத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ஆரோக்கியம் மற்றும் செயல்திறனை மேம்படுத்தும் வகையில் வசதிகளை கொண்டுள்ளது.
இந்த விரிவாக்கத்தை அடுத்து நிறுவனம் பெங்களூருவில் 8 மையங்கள் மற்றும் சென்னையில் இரண்டு மையங்களை கொண்டுள்ளது. மற்ற நகரங்களில் சேர்த்து 45 மையங்களை கொண்டுள்ளது.
Edited by Induja Raghunathan