+

60,000 சதுர அடி பரப்பில் முன்னோட்ட வடிவாக்கம் மற்றும் சோதனை வசதியை தையூரில் அமைத்தது eplane நிறுவனம்!

இந்தியாவின் முன்னோடி செங்குத்தாக ஏறி இறங்க கூடிய eVTOL வாகன நுட்பத்தில் முன்னோடியான இபிளேன் நிறுவனம் (Ubifly Technologies Pvt. Ltd) தையூரில் 60,000 சதுர அடி பரப்பில், நவீன முன்னோட்ட வடிவாக்கம் மற்றும் சோதனை வசதியை துவக்கியிருப்பதை அறிவித்துள்ளது.

செங்குத்தாக ஏறி இறங்கக் கூடிய இந்தியாவின் முன்னோடியான eVTOL வாகன நுட்பத்தில் செயல்படும் ‘இபிளேன் நிறுவனம்’ (Ubifly Technologies Pvt. Ltd) தையூரில் 60,000 சதுர அடி பரப்பில், நவீன முன்னோட்ட வடிவாக்கம் மற்றும் சோதனை வசதியை துவக்கியிருப்பதை அறிவித்துள்ளது. இந்தியாவின் முதல் மின் விமான தொடர் தயாரிப்பிற்கான முதல் ஒருங்கிணைந்த வசதியாக இது அமைகிறது.

இந்திய நகர்புற விமான போக்குவரத்து துறையில் முக்கிய நிகழ்வாக இது அமைகிறது. வடிவமைப்பு கருத்தாக்கம் முதல் பறத்தலுக்கு ஏற்ற வாகனத்தை தயார் செய்வது மற்றும் சான்றிதழுக்கு ஏற்ற முழு அளவிலான முன்னோட்ட வடிவமைப்பு வசதியாக அமைகிறது.

evolt

ஐஐடி டிஸ்கவரி வளாகத்தில் அமைந்துள்ள இந்த வசதியை ஐஐடி மெட்ராஸ் இயக்குனர் வி.காமகோடி துவக்கி வைத்தார். இந்த மையம் அமைக்கப்படுவதில் அவரது தொலைநோக்கு பார்வை முக்கிய அம்சமாக அமைந்துள்ளது.

இபிளேன் நிறுவனம் சான்றிதழ் செயல்முறையில் முன்னேறி கொண்டிருக்கும் சூழலில், சோதனை தொடர்பான பல்வேறு அம்சங்களில் இந்த வசதி முக்கிய பங்கு வகிக்கும், என குறிப்பிடப்பட்டுள்ளது. வடிவமைப்பு, முன்னோட்ட வசதி, ஒருங்கிணைப்பு, துணை அமைப்பு சோதனை ஆகியவற்றை ஒரே இடத்தில் இது கொண்டுள்ளது.

ஒருங்கிணைந்த பேப்ரிகேஷன், மின் பவர்டிரைன் அசெம்பிளி, ஏவியானிக்ஸ் சோதனை உள்ளிட்ட அம்சங்களை கொண்டுள்ளது.

e200X விமானம், உலகின் நெரிசல் மிக்க நகரங்களுக்கு ஏற்ற வகையில் தனித்துவமாக உருவாக்கப்பட்டுள்ளது. சர்வதேச போட்டியாளர்களுக்கு பெரிய அளவிலான ஏவுதளம் தேவைப்படும் நிலையில், e200X’s 8m x 10m  சுவடு உலகில் மிகவும் கச்சிதமாக, மேல் பகுதியில் இருந்து சீராக இயக்க ஏற்றது.

IIT Madras
"இந்த வசதி எங்கள் வர்த்தக எதிர்காலத்தின் இஞ்சின்,” என நிறுவனர் மற்றும் தொழில்நுட்ப, தலைவர் பேராசிரியர்.சத்யா சக்ரவர்த்தி கூறியுள்ளார்.

"ஐஐடி மெட்ராசின் ஆதரவுடன் விமான சேவையை டாக்சி சேவை போல எளிதாக்கக் கூடிய எங்கள் கனவை நிறைவேற்றுவதற்கான இந்த வசதியை அமைத்துள்ளோம்,” என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்த முன்னோட்ட வடிவ வசதி இந்தியாவின் ஆழ்நுட்ப வன்பொருள் சூழலிலும் முக்கியமாக அமைகிறது.


Edited by Induja Raghunathan

facebook twitter