சர்வதேச விரிவாக்கத்திற்காக ரூ.100 கோடி நிதி திரட்டிய சென்னை Planys Technologies!

03:30 PM Dec 06, 2025 | cyber simman

நீருக்கடியிலான ரோபோடிக்ஸ் மற்றும் மேம்பட்ட கண்காணிப்பு தீர்வுகளை வழங்கும் ஆழ் நுட்ப முன்னணி நிறுவனம் 'பிளானிஸ் டெக்னாலஜிஸ்' (Planys Technologies), தனது சர்வதேச விரிவாக்கத்தின் அடுத்த கட்டத்திற்காக ரூ.100 கோடி நிதி திரட்டியுள்ளதாக அறிவித்துள்ளது.

More News :

முன்னணி முதலீட்டாளர்கள் அசிஷ் கோச்சலா மற்று லஷித் சங்வி தலைமையிலான இந்த நிதிச்சுற்றில், பிரித்வி இன்வெஸ்ட்மெண்ட், சமர்தியா இன்வெஸ்ட்மண்ட் அட்வைசர்ஸ், 3i பார்ட்னர்ஸ், லெட்ஸ்வென்சர்ஸ் உள்ளிட்ட ஏற்கனவே உள்ள முதலீட்டாளர்கள், ஏஞ்சல் முதலீட்டாளர்கள் பங்கேற்றனர்.  

இந்த சுற்று ஆரம்ப கால ஆதரவாளர்கள் வெளியேறவும் வழி செய்தது. உலக அளவில் சோதனை வர்த்தகத்தை விரிவாக்குவது மற்றும் புதிதாக உருவாக்கப்பட்ட துணை நிறுவனம் Planys Ark மூலம் வேகமாக வளரும் பாதுகாப்பு தொழில்நுட்ப செயல் திட்டத்தை விரைவாக்குவது உள்ளிட்ட இரண்டு நோக்கங்களுக்காக இந்த நிதி திரட்டல் அமைகிறது, என நிறுவனம் தெரிவித்துள்ளது.

“இந்த முதலீடு, நிறுவன பயணத்தில் முக்கிய நடவடிக்கையாக அமைகிறது. இந்தியாவுக்கான அடுத்த தலைமுறை மனிதர் இல்லா நீருக்கடியிலான சேவையை மேம்படுத்தும் அதே நேரத்தில் உலகின் மிகப்பெரிய நிறுவனங்களுக்கு ஏற்ப எங்கள் சேவையை மேம்படுத்த இந்த முதலீடு உதவும். எங்கள் பாதுகாப்பு துறை பிரிவு Planys Ark மூலம் இத்துறையில் தீவிர கவனம் செலுத்த உள்ளோம்,” என்று இணை நிறுவனர் மற்றும் சி.இ.ஓ. தனுஜ் ஜுன்ஜுன்வாலா கூறியுள்ளார்.

தனது மைய சேவையை ஆழமாக்கும் வகையில் நிறுவனம் அடுத்த தலைமுறை நீருகட்டியிலான ரோபோடிக் அமைப்புகளை மேம்படுத்த உள்ளது. ஹைப்ரிட் ROVs மற்றும் ரோபோ கிராளர்களுடன், ஏஐ திறன் கொண்ட 3டி சோதனை இரட்டை மூலம் இது முக்கிய வசதிகளுக்கு மேம்பட்ட கண்காணிப்பை வழங்குகிறது.

“Planys Ark மூலம் நாங்கள், இந்தியாவின் பாதுகாப்பு திறனை உலக அளவில் மேம்படுத்துவதற்கான அடுத்த தலைமுறை நீருக்கடியிலான அமைப்புகளை வேகமாக்கி வருகிறோம். இந்தியாவிலேயே முழுவதும் உருவாக்கப்பட்ட எங்கள் நுட்பம் சிக்கலான செயல்பாடுகளுக்கு ஏற்ப அமைத்துக்கொள்ள கூடியது,” என்று இணை நிறுவனர் மற்றும் சி.டிஓ கூறியுள்ளார்.

ஐஐடி மெட்ராஸ் பட்டதாரிகள் தனுஜ் ஜுன்ஜுன்வாலா, வினீத் உபாத்யா, பேராசிரியர்கள் பிரபு ராஜகோபால், கிருஷ்ணன் பாலசுப்பிரமணியன் ஆகியோரால் 2015ல் துவக்கப்பட்ட நிறுவனம் மேம்பட்ட நீருக்கடியிலான அமைப்புகள் பிரிவில் முன்னிலை பெற்றுள்ளது. இதன் சொந்த நுட்பம், இதற்கு முன் எளிதாக அணுக முடியாத சூழல்களில் சிக்கலான சோதனைகளை மேற்கொள்ளும் வகையில் அமைந்துள்ளது. நிறுவன்ம் 21 காப்புரிமைகளை பெற்றுள்ளது. மேலும் 15 காப்புரிமைகளுக்கு விண்ணப்பித்துள்ளது.

பத்துக்கும் மேற்பட்ட நாடுகளில் 500க்கும் மேலான இடங்களில் 25,000 மணி நேரத்திற்கு மேலான சோதனைகளை நிறுவனம் வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளது. ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ், ஐ.ஓசிஎல், பிபிசிஎல், ரெயில்வே உள்ளிட்ட நிறுவனங்களை வாடிக்கையாளர்களாக பெற்றுள்ளது.

நிறுவனம் ஏப்ரல் மாதம், அசிஷ் கச்சோலியா தலைமையில் ரூ.43 கோடி சமபங்கு நிதி பெற்றது. முன்னணி முதலீட்டாளரான கச்சோலியா தனது முதலீட்டை இரு மடங்காக்கி உள்ள நிலையில்,

“நிறுவனம் ஆழமான நுட்பம் மற்றும் வர்த்தக செயல்பாட்டை உணர்த்தியுள்ளது. இதன் சொந்த மேடை பல்வேறு தொழில்கள் மற்றும் பாதுகாப்பு துறை செயல்பாடுகளுக்கு ஏற்றதாக இருக்கிறது,” என தெரிவித்துள்ளார்.

நிறுவனம் கூட்டு முயற்சிகள் மூலம் தனது சர்வதேச செயல்பாடுகளை விரிவாக்கம் செய்து வருகிறது.


Edited by Induja Raghunathan