+

ரூ.175 கோடி நிதி திரட்டியது சென்னை நிறுவனம் AssetPlus

இந்தியாவின் முழுவதும் டிஜிட்டல் துணை கொண்டு இயங்கும் சொத்து நிர்வாக மேடைகளில் ஒன்றான அசட்பிளஸ் (AssetPlus ) நெக்சஸ் வென்சர்ஸ் பாட்னர்ஸ் தலைமையிலான நிதிச்சுற்றில் ரூ.175 கோடி திரட்டியுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்தியாவின் முழுவதும் டிஜிட்டல் துணை கொண்டு இயங்கும் சொத்து நிர்வாக மேடைகளில் ஒன்றான ’AssetPlus’ நெக்சஸ் வென்சர்ஸ் பார்ட்னர்ஸ் தலைமையிலான நிதிச்சுற்றில் ரூ.175 கோடி திரட்டியுள்ளதாக அறிவித்துள்ளது.

நிறுவனம், எய்ட் ரோட்ஸ் வென்சர்ஸ் மற்றும் ஜெரோதாவின் ரைன்மேட்டர் உள்ளிட்ட முதலீட்டாளர்கள் ஆதரவையும் பெற்றுள்ளது. தற்போதைய சுற்றில் பங்கேற்காவிட்டாலும், பூபந்தர் சிங் ஆரம்பகால முதலீட்டாளர்களில் ஒருவராக திகழ்கிறார்.

செல்வ வளம் உருவாக்கம் என்பது, பரிவர்த்தனைகள் அல்லது நிதி சாதனங்கள் சார்ந்து மட்டும் அமையாது எனும் நம்பிக்கையில் துவங்கப்பட்ட ’அசெட்பிளஸ்’, தொழில்நுட்பம் சார்ந்த செல்வ வள நிர்வாக சேவையை முழுமையான அணுகுமுறையில் வழங்குகிறது.

தொழில்நுட்பம் மனித ஆலோசனைக்கு பதிலாக அமையாமல், அதை மேம்படுத்துவதாக அமைகிறது. நிறுவனம், நம்பகமான, சான்றிதழ் பெற்ற விநியோகிஸ்தர்களை கொண்டு சேவை அளிக்கிறது.

" align="center">wealth

Assetplus நிறுவனர்கள்

“இன்னொரு விநியோக மேடையாக திகழ வேண்டும் என நாங்கள் நினைக்கவில்லை. மனித ஆலோசனையோடு, தொழில்நுட்பம் இணைந்த செல்வ வளம் நிர்வாக உள்கட்டமைப்பை உருவாக்கி வருகிறோம். இந்த தொலைநோக்கை முன்னெடுத்துச் செல்ல புதிய முதலீடு உதவும்,” என்று நிறுவன இணை நிறுவனர் மற்றும் சி.இ.ஓ.விஷ்ராந்த் சுரேஷ் கூறியுள்ளார்.

புதிய முதலீடு, அசெட்பிளஸ், அதன் தொழில்நுட்ப ஸ்டாக்கை வலுவாக்கி, சேவைகளை விரிவாக்க மற்றும் செல்வ வள நிர்வாக சேவைகளை வலுவாக்க உதவும். மியூச்சுவல் ஃபண்ட்ஸ் சேவை மையமாக திகழும் நிலையில், மருத்துவம் மற்றும் டெர்ம் காப்பீடு சார்ந்த சேவைகளையும் கொண்டுள்ளது.

தொழில்நுட்பம் துணை கொண்ட மாதிரி, இந்தியாவின் அடுத்த கட்ட செல்வவள உருவாக்கத்திற்கு வழிவகுக்கும், என அசெட்பிளஸ் நம்புகிறது. இந்த மாதிரி, இடர் தன்மைக்கு ஏற்ற இலக்கு சார்ந்த சேவைகளை முன்வைக்கும் வகையில் அமைகிறது.

“விநியோகிஸ்தர்கள் வாடிக்கையாளர்களுடன் அதிக நேரம் செலவிடும் வகையில் உராய்வுகளை போக்கும் அமைப்பை உருவாக்கி வருகிறோம். இந்த முதலீடு, எதிர்காலத்திற்கு ஏற்ற தொழில்நுட்பத்தை உருவாக்க உதவும்,” என்று இணை நிறுவனர் ஆவனிஷ் ராஜ் கூறியுள்ளார்.
“அசெட்பிளஸ் நிறுவனத்தின் தொலைநோக்கு மற்றும் செயலாக்கம் தனித்தன்மை வாய்ந்தது. தொழில்நுட்பம் துணை கொண்ட செல்வ வளம் நிர்வாகத்திற்கான எதிர்கால உள்கட்டமைப்பை உருவாக்கி வருகிறது,” என நெக்சஸ் வென்சர் பாட்னர்ஸ் பாட்னர் ஆனந்த் தத்தா கூறியுள்ளார்.

2016ல்நிறுவப்பட்டது முதல் அசெட்பிளஸ்; செல்வ வளம் நிர்வாகத்திற்கான உள்கட்டமைப்பை உருவாக்கி வருகிறது. இந்த மேடை இந்தியா முழுவதும் 18,000க்கும் மேலான மியூச்சுவல் பண்ட் விநியோகிஸ்தர்களை கொண்டுள்ளது.

”செல்வவளம் நிர்வாக மாதிரியில் எங்கள் நம்பிக்கை மற்றும் இந்திய செல்வ வளம் பரப்பில் அசெட்பிளசிற்கு உள்ள வாய்ப்பு மீது நம்பிக்கை கொண்டுள்ளதாக,” எய்ட் ரோட்ஸ் வென்சர்ஸ் சீனியர் பார்ட்னர் ஸ்வேத்தா பாட்டியா கூறியுள்ளார்.

“இந்தியாவில் புதிய முதலீட்டாளர்கள் உருவாகி வரும் நிலையில், முதலீடு தொடர்பான முதலீடுகளை மேம்பட்ட முறையில் எடுப்பதற்கான வழிகள் தேவை,” என்று ரெயின்மேட்டர் இணை நிறுவனர் நிதின் காமத் கூறியுள்ளார்.

நிறுவனம் தனது அசெட்பிளஸ் அகாடமி மூலம் விநியோகிஸ்தர் கல்வியை தொழில்முறை மயமாக்க முயன்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக சுந்தரம் மியூச்சுவல் ஃபண்ட்ஸ் முன்னாள் நிர்வாக இயக்குனர் சுனில் சுப்பிரமணியத்தை முக்கிய ஆலோசகராக நியமித்துள்ளது.


Edited by Induja Raghunathan

facebook twitter