அதிகரிக்கும் வாங்கும் சக்தி, விலை உயர்ந்தவற்றை வாங்கும் தேவை மற்றும் மேம்பட்ட வாழ்க்கை முறைக்கான அறிதல் மற்றும் அணுகல் வசதி ஆகியவை நுகர்வோர் பிராண்ட்கள் இந்தியர்களின் பணப்பையில் இருந்து பெரும் பங்கை கைப்பற்ற வழி செய்கின்றன.
இந்த அடிப்படையான மாற்றம் இந்தியாவின் பரந்த பொருளாதார பயண திசையாலும் உறுதியாகிறது. நாட்டின் ஜிடிபி வளர்ச்சி தனிநபர் நுகர்வால் வளரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தனிநபர் ஜிடிபி 2030-ல் 3.5 ஆயிரம் டாலரில் இருந்து 4 ஆயிரம் டாலராக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது புதிய ரீடைல் பிராண்ட்கள் சந்தையில் தங்களுக்கான பங்கை பெற வழி செய்கிறது.
அனைத்து பிரிவுகள் மற்றும் விலைப் பிரிவுகளில் நுகர்வோர் பிராண்ட் அல்லாதவற்றில் இருந்து பிராண்ட்களை நோக்கி முன்னேறும் பரவலான போக்கின் ஒரு பகுதியாக இந்த வளர்ச்சி அமைகிறது.
இதன் விளைவாக 2030 நிதியாண்டில் பிராண்ட் செய்யப்பட்ட பொருட்கள் மொத்த ரீடைல் சந்தையின் 45 சதவீதமாக இருக்கும் என கருதப்படுகிறது. இது 730 பில்லியன் டாலர் வாய்ப்பாகும். தற்போதைய அளவை விட இருமடங்கு அதிகம் என்று பயர்சைடு வென்சர்ஸ் அறிக்கை தெரிவிக்கிறது.
இந்த பின்னணியில், 2026-ம் ஆண்டில் ஆதிக்கம் செலுத்தக்கூடிய நுகர்வோர் போக்குகளை ‘யுவர்ஸ்டோரி’ அடையாளம் காட்டுகிறது.
செல்லப்பிராணிகள் நலனுக்கான செலவுகள், குழந்தைகள் நலப்பொருட்களில் பிரிமியம் பொருட்களை நாடுதல், ரீடைல் வர்த்தகத்தில் ஏஐ தாக்கம் மற்றும் குவிக் காமர்ஸ் நிறுவனங்களின் அடுத்த கட்ட வளர்ச்சி உள்ளிட்ட போக்குகளை உணரலாம் .
குழந்தைகள் நலன்: அடுத்த தலைமுறைக்கான தேவைகள்
குழந்தைகள் நலன் மற்றும் சிறார்கள் நலன் முக்கிய மாற்றத்தை எதிர்கொள்ள உள்ளன. கண்டறிதல் வாய்ப்பு, பரவலான அணுகல் வசதி, விலை உயர்ந்த பொருட்களை நாடும் தன்மை ஆகியவை இதற்கு காரணம்.
பெற்றோர்கள் தங்களுக்காக அதிகம் செலவு செய்யத் தயங்கினாலும், குழந்தைகளுக்கான சிறந்த பொருட்களை வாங்கித்தர தயாராக உள்ளனர். இந்த மாற்றம், கல்வி, விளையாட்டு, மனநலன், உணவு ஆகியவற்றில் செலவு செய்வதை அதிகரித்துள்ளது. இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட நகரங்களில் ஊட்டச்சத்து சார்ந்த செலவுகள் அதிகரிக்கும் அளவுக்கு இதன் தாக்கம் உள்ளது.
இந்தப் பிரிவில் முதலீட்டாளர்கள் ஆர்வம் அதிகரித்து, மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குழந்தைகள் நலன் பொருட்கள் சார்ந்த குவிக் காமர்ஸ் நிறுவனங்கள் Ozi, Peekoare பெரிய சுற்றிலான நிதியை எதிர்பார்த்திருக்கின்றன. குழந்தைகள் தொடர்பான நிலையான செலவுகள் இந்த மாற்றத்திற்கு அடித்தளமாகிறது.
நகர்புற குடும்பங்கள் குழந்தை ஒன்றுக்கு ஆண்டுக்கு செய்யும் செலவு ரூ.5.6 லட்சத்தில் இருந்து, 2030-ல் ரூ.8 லட்சமாக உயரும் என பயர்சைடு இந்திய நுகர்வோர் அறிக்கை தெரிவிக்கிறது. 2020-ல் இது ரூ.2.5 லட்சமாக இருந்தது.
செல்லப்பிராணிகள் நலன்: ஆடம்பர வசதிகள்
இந்திய செல்லப்பிராணிகள் சந்தை செழித்துக் கொண்டிருக்கிறது. செல்லப்பிராணிகள் எண்ணிக்கை தற்போதைய 32 மில்லியனில் இருந்து 2030-ல் 76 மில்லியனாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குழந்தைகள் இல்லாத இரட்டை வருமானம் கொண்ட குடும்பங்கள் இதற்கு காரணமாக அமைகிறது. இவர்கள் செல்லப்பிராணிகளை குடும்ப உறுப்பினர்களாக கருதுகின்றனர்.
செல்லப்பிராணி உரிமையாளர் மூலமான வருவாய் அதிகரிப்பதும் இதை உணர்த்துகிறது. மாதாந்திர செலவுகள் ரூ.5,000 முதல் ரூ.15,000 வரை அமைவதாக 3One4 கேபிடல் நுகர்வோர் அறிக்கை தெரிவிக்கிறது.
குவிக்காமர்ஸ் பிரிவிலும் செல்லப்பிராணிகள் நலன் வரவேற்பை பெற்றுள்ளது. வசதியான நுகர்வோர் செல்லப்பிராணிகள் ஊட்டச்சத்தில் கவனம் செலுத்துகின்றனர்.
ஏஜெண்டிக் ஏஐ: பொருட்களை வாங்கும் ஏஐ
2025 ஏஐ உடன் உரையாடி தகவல் பெறுவதாக அமைந்தது என்றால் 2026 ஏஜெண்டிக் காமர்ஸ் ஆதிக்கம் செலுத்தும் வகையில் அமையும். ஏஐ சேவைகள் கிரியேட்டிவ் உதவியாளர்கள் என்பதில் இருந்து தானாக செயல்படுவதாக மாறும்.
இதன் காரணமாக, ஏஐ ஏஜெண்ட்கள் பொருட்கள பரிந்துரைப்பதோடு மட்டும் அல்லாமல், ஆர்டர் செய்து பொருட்களை வாங்கும் வகையில் அமைந்திருக்கும். இந்த மாற்றம் நல்ல பலனை தருகிறது.
ஏஐ ஏஜெண்ட் அனுபவத்தை பயன்படுத்தும் நிறுவனங்கள் 5 முதல் 15 சதவீத பலனை கண்டு வருகின்றன. பாதிக்கு மேலான நுகர்வோர் நண்பர்கள் பரிந்துரையை விட ஏஜெண்ட்கள் பரிந்துரையை அதிகம் நம்புவதாக பிசிஜி அறிக்கை தெரிவிக்கிறது.
இந்தப் பிரிவில் ஆதாயம் காண்பதற்காக பிளிப்கார்ட் மினிவெட் ஏஐ நிறுவனத்தை கையகப்படுத்தியுள்ளது.
இந்த ஏஜெண்ட்கள் எந்தவித சிக்கலும் இல்லாமல் பேரம் பேசி, பொருட்களை வாங்க வழி செய்யும் ஏபிஐ உள்கட்டமைப்பை கொண்ட நிறுவனங்களே இந்தப் பிரிவில் வெற்றி பெறும். இதன் விளைவாக இந்திய பணப்பையின் வாயில் காவலனாக ஏஐ உருவாகும்.
இந்த தொழில்நுட்பத்தின் எல்லை ஏற்கெனவே கித்தப் தளத்தில் முன்னோட்டம் காட்டப்பட்டுள்ளது. அதில் ஜெப்டோ பொறியாளர் ஒருவர் பகிர்ந்து கொண்டுள்ள திட்டத்தில் எல்.எல்.எம் நுட்பம் ஒரு பொருளை ஆர்டர் செய்து காண்பிக்கிறது. 2016-ல் ஏஐ சார்ந்த வர்த்தகத்திற்கான முன்னோட்டமாக இதை கருதலாம்.
ஆனால், இந்த வசதி பிராண்ட்களுக்கு ஒரு முரணை உண்டாக்குகிறது. ஏஐ ஏஜெண்ட்கள் முதன்மை இடைமுகமாக மாறும் நிலையில் ரீடைல் நிறுவனங்கள் நேரடி போக்குவரத்து மற்றும் நுகர்வோர் தரவுகளை இழக்க வேண்டியிருக்கும். இது பாரம்பரிய வர்த்தக வருவாய் மற்றும் பிராண்ட் பற்றுதலை பாதிக்கும்.
குவிக் காமர்ஸ்: புதிய நகரங்களை நோக்கி...
2025-ம் ஆண்டின் இரண்டாம் பாதியில் குவிக் காமர்ஸ் புதிய உத்வேகம் பெற்று அடுத்தச் சுற்றுக்கு தயாரானது. ஆண்டு இறுதி பண்டிகை காலம் கூடுதல் வாய்ப்பாக அமைந்தது. இந்த ஆண்டு செயல்பாட்டிற்கான வழிகாட்டுதல்களையும் கொண்டிருந்தது.
தற்போது ஆறு நிறுவனங்கள் இந்த பரப்பில் இருக்கும் நிலையில், டார்க் ஸ்டோர் பரப்பில் போட்டி அதிகரிக்கிறது. தள்ளுபடிகள் அதிகரிக்கின்றன மற்றும் லாபத்தை மனதில் கொண்டு தங்களுக்கான தனி வர்த்தகத்தை உருவாக்க முயல்கின்றனர்.
ராஜ்கோட், லூதியானா, புவனேஸ்வர் போன்ற நகரங்களில் பலமடங்கு வளர்ச்சி உள்ள நிலையில் இரண்டாம் அடுக்கு நகரங்கள் குவிக் காமர்ஸ் வளர்ச்ச்க்கு பின்னே இருப்பதாக ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் அறிக்கை தெரிவிக்கிறது. இந்தப் போக்கு தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குவிக் காமர்ஸ் போட்டியும் அதிகரிக்கும். அமேசான் மற்றும் பிளிப்கார்ட் தீவிரம் காட்டி வருகின்றன. அமேசான் 300 கடைகள் இயக்க உள்ள நிலையில், பிளிப்கார்ட் 800 கடைகளை தொட்டுள்ளது. ஜெப்டோ பொது பங்கு வெளியீட்டை பரிசீலிக்கும் நிலையில், பிளின்கிட் உடன் போட்டியிட ஸ்விக்கியின் இன்ஸ்டாமார்ட் ரூ.17,000 கோடியை கையாளும் நிலையில் இந்த விரிவாக்கம் நிகழ்கின்றன.
இந்த மேடைகள் புதுமையாக்கத்திலும் கவனம் செலுத்துகின்றன. ஸ்விக்கியின் சொந்த தனி லேபிள் நாய்ஸ் ஆரம்ப வரவேற்பை பெற்றுள்ளது. இதற்கான ஆப்லைன் கடைகளையும் அமைக்கிறது. இதனிடையே, பிளின்கிட்டின் பிஸ்டோபார்மட் பல் வேறு நகரங்களில் விரிவாக்கம் செய்து கொண்டிருக்கிறது.
இந்திய பிராண்ட்களை பொறுத்தவரை, நுகர்வோரிடம் உள்ள அதிக உபரி வருமானம் மற்றும் ஏஜெண்டிக் ஏஐ தாக்கம், முக்கிய மாற்றம் காத்திருப்பதை உணர்த்துகிறது. 2026 என்பது நுகர்வோர் வாழ்வியலை மேம்படுத்திக்கொண்டு, வாங்கும் பொறுப்பை இடம் மாற்றும் நிலையில் புதிய அதிவேக சூழலுக்குள் திறம்பட ஒருங்கிணைக்கும் தேவையாக இது அமைகிறது.
ஏஜெண்டிக் ஏஐ எழுச்சி புதிய கண்ணுக்குத் தெரியாத வாயில் காப்பாளர்களை உருவாக்குகிறது. பிராண்ட்கள் இப்போது மனித கண்களுக்கு மட்டும் அல்லாமல், இயந்திரங்களின் ஏபிஐகளுக்கு ஏற்பவும் செயல்பட வேண்டும். அப்போதுதான் பொருட்கள் அல்கோரிதம்களால் கண்டறியப்படும்.
அதே நேரத்தில் குவிக் காமர்ஸ் நிறுவனங்கள் இரண்டாம் அடுக்கு நகரங்களில் விரிவாக்கம் செய்து, சொந்த பிராண்ட்களை அறிமுகம் செய்யும் நிலையில், நுகர்வோர் பிராண்ட்களுக்கு சவால்கள் அதிகரிக்கின்றன. இதை எதிர்கொள்ள குழந்தைகள் நலன் மற்றும் செல்லப்பிராணிகள் நலன் போன்ற பிரிவுகளில் உள்ள பிராண்ட்கள் தங்கள் பிரிமியம் தன்மையை பாதுகாக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
- அக்ஷிதா டோஷ்னிவால்
Edited by Induja Raghunathan