
செங்குத்தாக ஏறி இறங்கும் அமைப்பை கொண்ட ஏர் டாக்சிகளை உருவாக்கி வரும் இபிளேன் நிறுவனம் NVIDIA-வின் ஆம்ன்வெர்ஸ் லைப்ரரீஸ் கொண்டு இந்தியாவின் முதல் மின் ஏர் டாக்சியை உருவாக்க இருப்பதாக அறிவித்துள்ளது. இதன் மூலம், ’இ200எக்ஸ்’ வாகனத்தின் டிஜிட்டல் ட்வின் வடிவை உருவாக்கி, ஏரோஸ்பேஸ் சிமுலேஷனில் புதிய அளவுகோளை படைக்க உள்ளது.
மேலும், பல்வேறு முக்கிய செயல்பாடுகளுக்கான ஆன்போர்டிங் கம்ப்யூட்டிங் மேடையாக NVIDIA IGX பயன்படுத்த இருப்பதாகவும் இபிளேன் நிறுவனம் அறிவித்துள்ளது. நிறுவனம் இயற்பியல் சார்ந்த டிஜிட்டல் யதார்த்தத்தை பயன்படுத்தி, பொறியாளர்கள், சிக்கலான ஏரோடைனமிக் சூழல்கள், சென்சார் எதிர்வினைகள் உள்ளிட்டவற்றை பயன்படுத்திப் பார்க்க வழி செய்கிறது. இது வழக்கமான இயற்பியல் இஞ்சின்களில் இருந்து வேறுபட்டது.

நவீன விமான போக்குவரத்து குறிப்பாக நகர்புற விமான போக்குவரத்து, புதிய சவால்களை கொண்டுள்ளதால் விமான பல்வேறு சூழல்களுக்கு ஏற்ற விழிப்புணர்வை பெறுவது அவசியமாகிறது. இதற்கேற்ற வகையில் NVIDIA IGX மேடை பாதுகாப்பான கம்ப்யூட்டர் செயல்பாட்டை வழங்குகிறது.
இந்த கூட்டு, ஆழ் நுட்பம் சார்ந்த ஏவியேஷனில் முக்கிய சவாலை எதிர்கொள்ளும் வகையில் அமைந்துள்ளது. பெளதீக சோதனைகள் இடர் மிக்கவை என்பதால் டிஜிட்டல் ட்வின் கொண்டு சோதனை செய்ய இந்த கூட்டு உதவுகிறது. e200x டிஜிட்டல் ட்வின் விமானி குழுக்கள் பல மில்லியன் கி,மீ தொலைவை மெய்நிகராக பறந்து பார்க்க வழி செய்கிறது.
“நாங்கள் விமானத்தை மட்டும் உருவாக்கவில்லை ஒரு முழு சூழலை உருவாக்குகிறோம். என்விடியா உடனான கூட்டு, நிஜ உலகு மற்றும் டிஜிட்டல் உலகு இடையிலான வேறுபாட்டை மேலும் மங்கலாக்குகிறது. எங்கள் விமான செயல்பாடுகளை என்விடியா ஆம்னிவெர்ஸ் கொண்டு உறுதி செய்து கொள்வது மூலம் ஆயிரக்கணக்கான முறை சிமுலேஷனில் விமானங்களின் வரம்பை விரிவாக்கப்பார்க்கிறோம்,” என்று இபிளேன் நிறுவனர் மற்றும் சி.டி.ஓ. பேராசிரியர் சத்யா சக்ர்வர்த்தி கூறியுள்ளார்.
இந்த கூட்டு இந்திய ஏவியேஷன் துறையில் புதிய வாய்ப்புகளை உருவாக்க உள்ளது. இந்த செயல்பாடுகளுக்கு தேவைப்படும் அதி திறன் சிமுலேஷனுக்கு ஏற்ற அதிக செயல்பாடு கம்ப்யூட்டிங் உள்கட்டமைப்பு தேவை.
“இது ஒரு சிமுலேஷன் மட்டும் அல்ல, இது பாதுகாப்பிற்கான டைம் மிஷின். எங்கள் விமானங்கள் டிஜிட்டல் சோதனை சாலையில் ஆயிரக்கணக்கான முறை செயல்பட்டு, அல்கோரிதம் வடிவில் பல்வேறு சூழல்களுக்கு தயாராகும்,” என நிறுவன முதன்மை பொறியாளர் பகதலோசலன ஷியாம் சுந்தர் கூறியுள்ளார்.
“எங்கள் விமானத்தை சான்றிதழ் செயல்முறைக்கு உள்ளாக்கிக் கொண்டிருக்கும் நிலையில் என்விடியா-வுடனான கூட்டு, விமானம், சென்சார்கள், கம்ப்யூட்டர் உள்ளிட்டவற்றை ஒருங்கிணக்கப்பட்ட சான்றிதழ் பெறக்கூடிய அமைப்பாக நோக்க வைக்கிறது, என வர்த்தக பார்ட்னர்ஷிப் துணைத்தலைவர் விஷ்ணு ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
Edited by Induja Raghunathan