2026ல், ஜிசிசி துறை அதிக ஊதிய உயர்வு அளிக்கும் என இஒய் அறிக்கை தகவல்!

03:30 PM Feb 25, 2026 | cyber simman

உலகளாவிய திறன் மையங்கள் (GCCs) இந்தியாவில் ஊதிய வளர்ச்சி மற்றும் பணி ஈடு சார்ந்த புதுமையாக்கங்களுக்கான வலுவான ஆற்றலாக உருவாகி வருவதாகவும், 2026ல் இந்திய அளவிலான ஒட்டுமொத்த ஊதிய உயர்வு 9.1 சதவீதமாகமிருக்கும் என்றும் எதிர்கால ஊதியத்திற்கான இஒய் அறிக்கை தெரிவிக்கிறது.

தீவிரமான செயல்பாடு வேறுபாடு, அதிகரிக்கும் ஏஐ திறன் பிரிமியம் மற்றும் மிதமான ஊழியர்கள் வேலை மாற்றம் ஆகியவை இருக்கும் என்றும் இந்த அறிக்கை தெரிவிக்கிறது. ஜிசிசி- கள், 10.4 சதவீத ஊதிய உயர்வு கணிப்புடன் முன்னிலை வகிக்கின்றன. நீடித்த சர்வதேச தேவை மற்றும் சிறப்பு டிஜிட்டல் திறன்களில் முதலீடு ஆகியவை இதற்கு காரணமாக அமைகின்றன. நிதிச்சேவைகள் அடுத்த இடத்திலும் (10%0, இகாமர்ஸ் (9.9%) மூன்றாவது இடத்திலும் உள்ளன. மருந்தக துறையும் (9.7%) முன்னிலையில் உள்ளது.

ஊழியர்கள் வேலை மாறிச்செல்வது பொதுவாக இயல்பாகி வருகிறது. 2024ல் 17.5 சதவீதத்தில் இருந்து 2025ல் 16.4 சதவீதமாக குறைந்துள்ளது. குறிப்பாக, 80 சதவீத விலகல்கள் தானாக நிகழ்கின்றன. பணி மாற்றங்கள் சீரமைப்பு காரணமாக அல்லாமல் திறமையானவர்கள் வாய்ப்புகளை தேடிச்செல்வதாக அமைவதை இது உணர்த்துகிறது. ஜிசிசி பிரிசில் குறைவாக 14.1 சதவீதமாக இது உள்ளது.

ஜிசிசி

“தங்களுக்கான மனிதவளங்களில் எப்படி முதலீடு செய்வது என்பது தொடர்பான நிறுவனங்கள் சிந்தனையில் ஒரு திருப்பு முனையை எதிர்கொள்கிறோம். இனியும், இந்தியாவில் எதிர்கால ஊதியம் என்பது ஆண்டு சம்பள உயர்வு சார்ந்தது மட்டும் இல்லை. இப்போது, எந்த வகையான திறன்களில் முதலீடு செய்வது, போட்டித்தன்மை மற்றும் நீடித்த தன்மை இடையிலான சமநிலை காண்பது உள்ளிட்ட துல்லியம் சார்ந்து இது அமைகிறது,” என இந்த அறிக்கை குறித்து, பாட்னர், லீடர், மனிதவள நுட்பம் மற்றும் கற்றல், மக்கள் ஆலோசனை, இஒய் இந்தியா அபிஷேக் சென் கூறியுள்ளார்.

ஏஐ ஏற்பு அனைத்து துறைகளிலும் வேகமாக நிகழ்வதாகவும், உற்பத்தி திறன், செயல்திறன் பயன்பாடு அ ளவிடக்கூடிய வர்த்தக தாக்கம் ஆகியவை சார்ந்து ஊதியம் தீர்மானிக்கப்படுவதாகவும் அறிக்கை தெரிவிக்கிறது. பெரிய நிறுவனங்களில் 50-60 சதவீதம் இப்போது, ஊதிய ஈடு திட்டமிடலில் அனல்டிக்சை நாடுகின்றன. இதற்கு தரவுகள் சார்ந்த உத்தியை முக்கியமாக பயன்படுத்துகின்றன.

அதே நேரத்தில், கடந்த 2 அல்லது 3 ஆண்டுகளில் கற்றல் செயல்பாடுகள், ஊதிய அம்சங்களில் ஏஐ பயன்பாடு மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. மேலும், திறன் கொண்ட மக்கள் அமைப்பை நோக்கி இது அமைகிறது.

மேலும், இந்தியாவில் ஊதிய ஈடு சார்ந்த பிரிவு, பணி சார்ந்தது என்பதில் இருந்து திறன் சார்ந்த முறைக்கு மாறுகிறது. ஆய்வுக்குள்ளாக்கப்பட்ட பாதி நிறுவனங்கள், திறன் சார்ந்த ஊதிய செயல்திட்டத்திற்கு மாறிக்கொண்டிருக்கின்றன. ஏஐ, ஆக்கத்திறன் ஏஐ, இயந்திர கற்றல் மற்றும் பொறியியல் திறன் 40 சதவீத பிரிமியம் மதிப்பு கொண்டுள்ளன என்றும் தெரிய வந்துள்ளது.

டீம் எண்டர்பிரைஸ் ஸ்டோரி


Edited by Induja Raghunathan