+

கழிவு அகற்றலில் ரோபோ - அகமதாபாத் மாநகராட்சியுடன் ஒப்பந்தம் செய்துள்ள ‘Genrobotics’

மேம்பட்ட தொழில்நுட்பம் மூலம், சுகாதார கழிவு நிர்வாகத்தை மாற்றி அமைத்து வரும் ஆழ்நுட்ப முன்னோடி நிறுவனம் ஜென்ரோபோடிக்ஸ் (Genrobotics ), நவீன பண்டிகூட் மொபிலிட்டி ரோபோட் கழிவு அகற்றல் அமைப்பை நிறுவ அகமதாபாத் மாநகராட்சியிடம் இருந்து ரூ.17 கோடி ஒப்பந்தம் பெற்றுள்ளது.

மேம்பட்ட தொழில்நுட்பம் மூலம், சுகாதார கழிவு நிர்வாகத்தை மாற்றி அமைத்து வரும் ஆழ்நுட்ப முன்னோடி நிறுவனம் 'ஜென்ரோபோடிக்ஸ்' (Genrobotics), நவீன பண்டிகூட் மொபிலிட்டி ரோபோ கழிவு அகற்றல் அமைப்பை நிறுவ அகமதாபாத் மாநகராட்சியிடம் இருந்து ரூ.17 கோடி ஒப்பந்தம் பெற்றுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் படி, அகமாதாபாத்தில் உள்ள 7 மண்டலங்களில் 7 ரோபோ அமைப்புகள், ஐந்தாண்டு செயல்முறை, பராமரிப்பு ஒப்பந்ததுடன் செயல்படுத்தப்படும்.

Robot

இந்த அமைப்பின் முக்கிய அம்சமாக வாகனத்தில் இருந்து தனியே பிரித்து இயக்கக் கூடிய ரோபோ அமைப்பு விளங்குகிறது. இது நகர்புறங்களில் குறுகலான பகுதிகள் மற்றும் 80 செமீ அகலம் குறுகிய இடங்களிலும் செயல்பாட்டை சாத்தியமாக்குகிறது. அகமதாபாத் போன்ற அடர்த்தியான பகுதிகளில், அணுகல் தன்மை வரம்புகள் பாதிப்பை ஏற்படுத்தும் இடங்களில், இது மிகவும் பொருத்தமானது ஆகும். இது கழிவு அகற்றல் நிர்வாகத்தை மேலும் சீராக்கும் தன்மை கொண்டது.

பண்டிகூட் மொபிலிட்டி +, மேம்பட்ட வாகனம் மீதான ரோபோ சுத்திகரிப்பு அமைப்பாக விளங்குகிறது. கழிவு நிர்வாகத்தில் இது, ரோபோ சுத்திகரிப்பை ஒருங்கிணைக்கிறது. இது, கழிவுகள் அகற்றம் மற்றும் கழிவுநீர் அமைப்புகளில் இருந்து கழிவு அகற்றுவதை முழுவதும் இயந்திரமயமாக்குகிறது. இந்த செயல்முறையில் நச்சுத்தன்மை மிக்க கழிவுகளுடன் மனிதர்கள் தொடர்பு கொள்ளும் தேவையை நீக்குகிறது.

"இந்த ஒப்பந்தம் பெற்றிருப்பது, சிக்கலான பொறியியல் தேவைகளுக்கான மேட் இன் இந்தியா அணுகுமுறைக்கு ஆதரவாக அமைகிறது. இந்த கூட்டு மூலம், அகமதாபாத் மாநகராட்சி ஸ்மார்ட் நகர் உள்கட்டமைப்பையில் புதிய அளவுகோளை உண்டாக்குகிறது. கழிவு சாக்கடை அமைப்புகளில் பூஜ்ஜியம் மனிதர்கள் என்பது தான் எங்கள் இலக்கு,” என்று ஜென்ரோபோடிக்ஸ் இணை நிறுவனர் அருண் ஜார்ஜ் இந்த ஒப்பந்தம் பற்றி கூறியுள்ளார்.

நிறுவனம் ஏற்கனவே, தனது ரோபோ அமைப்பின் செயல்திறனை பல மாநிலங்களில் செயல்படுத்திக்காட்டியுள்ளது. அண்மையில் ராஜ்கோட் மற்றும் மகாராஷ்ட்ரா ஆகிய பகுதிகளில் செயல்படுத்தியுள்ளது. எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் கழிவு அகற்றத்தை காண்பித்துள்ளது.

இந்த அண்மை ஒப்பந்தம் மூலம், ஜென்ரோபோடிக்ஸ் இந்தியாவிலும், உலக அளவிலும் தனது செயல்பாடுகளை விரிவாக்கம் செய்துள்ளது. இதன் ரோபோட்கள் 23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 180 நகராட்சி அமைப்புகளில் செயல்பாட்டில் உள்ளன. பூஜ்ஜியம் மனித தொடர்பு மற்றும் கழிவுகளுடன் நேரடி தொடர்பை தவிர்பதன் மூலம் நிறுவனம், மனிதர்கள் கழிவுகளை அகற்றும் சட்டத்திற்கு ஆதரவாக அமைந்து, பாதுகாப்பையும், செயல்திறனையும் அதிகரிக்கிறது.


Edited by Induja Raghunathan

facebook twitter