
ஆபரணத் தங்கத்தின் விலை சூறாவளி வேகத்தில் வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. ஒரு கிராம் விலை ரூ.10,000-யும், சவரன் விலை ரூ.80,000-யும் கடந்துள்ளது நகை வாங்க விழைவோரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சென்னையில் வெள்ளிக்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.60 உயர்ந்து ரூ.9,865 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.560 உயர்ந்து ரூ.78,920 ஆகவும் இருந்தது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.76 உயர்ந்து ரூ.10,762 ஆகவும், சவரன் விலை ரூ.608 உயர்ந்து ரூ.86,096 ஆகவும் விற்பனை ஆனது.
சர்வதே சந்தையில் அமெரிக்க டாலர் மதிப்பு உயர்ந்ததன் எதிரொலியாக, தங்கம் விலை புதிய உச்சம் தொட்டுள்ளது. இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,120 அதிகரித்துள்ளது. எனவே, சுப காரியங்களுக்கு மட்டும் அவசரம் எனில் நகை வாங்கலாம். முதலீடு என்று வரும்போது தனிப்பட்ட ஆலோசனை அவசியம் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள். வெள்ளி விலையும் இன்று புதிய உச்சம் கண்டுள்ளது.
தங்கம் விலை நிலவரம் - சனிக்கிழமை (6.9.2025):
சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.140 உயர்ந்து ரூ.10,005 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.1,120 உயர்ந்து ரூ.80,040 ஆகவும் இருக்கிறது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.153 உயர்ந்து ரூ.10,915 ஆகவும், சவரன் விலை ரூ.1,224 உயர்ந்து ரூ.87,320 ஆகவும் விற்பனை ஆகிறது.

வெள்ளி விலை:
சென்னையில் இன்று (6.9.2025) 1 கிராம் வெள்ளி விலை ரூ.2 உயர்ந்து ரூ.138 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.2,000 உயர்ந்து ரூ.1,38,000 ஆகவும் புதிய உச்சத்தில் விற்பனை ஆகிறது.
தங்கம் விலை உயர்வு ஏன்?
சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.88.17 என்ற அளவில் கடும் வீழ்ச்சியில் இருக்கிறது. பங்குச் சந்தை வர்த்தகமும் தடுமாறத் தொடங்கியதால் தங்கத்தின் மீதான முதலீடும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. இதனால், ஆபரணத் தங்கம் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. நகை வாங்க விழைவோர் நிதானம் காட்ட வேண்டும் என்று வர்த்தக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
தங்கம் விலை @ சென்னை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.10,005 (ரூ.140 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.80,040 (ரூ.1,120 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.10,915 (ரூ.153 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.87,320 (ரூ.1,224 உயர்வு)
தங்கம் விலை @ மும்பை
> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.10,005 (ரூ.140 உயர்வு)
> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.80,040 (ரூ.1,120 உயர்வு)
> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.10,915 (ரூ.153 உயர்வு)
> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.87,320 (ரூ.1,224 உயர்வு)
Edited by Induja Raghunathan