
இந்தியாவின் முன்னணி தொழில் மாநிலங்களை அடையாளம் காட்டும் தொழிற்சாலைகளுக்கான வருடாந்திர ஆய்வை (ஏஎஸ்.ஐ) வெளியிடத்துவங்கிய பதினைந்து ஆண்டுகளுக்கு பின், நாட்டின் 'ஆலைகளின் தலைநகர்’ எனும் மகுடத்தை தமிழ்நாடு தொடர்ந்து தக்க வைத்துள்ளது. இந்த பட்டியலில் வேகமாக முன்னேறும் மாநிலமாக உத்தரபிரதேசம் உருவெடுத்துள்ளது.
புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் சார்பில் வெளியிடப்படும் ஏ.எஸ்.ஐ அண்மை தகவல்படி,
தமிழ்நாடு 2023-23 ம் நிதியாண்டில் 40,121 ஆலைகள் கொண்டுள்ளது. முந்தைய நிதியாண்டில் இதி 39,676 ஆக இருந்தது.
2022- 23 ம் நிதியாண்டில் 31,080 எனும் நிலையில் இருந்து 33,311 ஆலைகளாக அதிகரித்துள்ள குஜராத் இரண்டவது இடத்திலும், 26,539 (முந்தைய ஆண்டில் 26,446) ஆலைகள் கொண்ட மகாராஷ்டிரா மூன்றாவது இடத்திலும் உள்ளது.

உத்தரபிரதேசம் ஆலைகள் எண்ணிக்கையில் அதிக வளர்ச்சி கண்டுள்ளது. ஒரே ஆண்டில் 3,000 ஆலைகள் பதிவு செய்து, 2022-23ல் 19,168 என்பதில் இருந்து 22,141 ஆக உயர்ந்துள்ளது. 13,756 ஆலைகளுடன் 15 ஆண்டுகளுக்கு முன் 5-வது இடத்தில் இருந்த மாநிலம் வேகமாக வளர்ச்சி கண்டுள்ளது.
முதல் 10 இடத்தில் உள்ள மற்ற மாநிலங்கள் வருமாறு: ஆந்திரபிரதேசம் (16,011), கர்நாடகா (14,984), தெலுங்கானா (13,446), பஞ்சாப் (13,166), ராஜஸ்தான் (10,868), அரியானா (10,389). 2010ல் முதல் 10 இடத்தில் இடம்பெற்றிருந்த கேரளா மற்றும் மேற்கு வங்கத்திற்கு பதிலாக, அரியானா மற்றும் தெலுங்கானா இடம்பெற்றுள்ளன.
உத்தரபிரதேசத்தின் வளர்ச்சி தனித்து விளங்குகிறது. குறும், சிறு மற்றும் மத்திய தொழில்கள் அமைச்சகத்தின் தகவல்படி,
மாநிலத்தில் 7.3 மில்லியன் பதிவு செய்யப்பட்ட எம்.எஸ்.எம்.இ-கள் உள்ளன. மகாராஷ்டிராவுக்கு (8.9 மில்லியன்) அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் உள்ளது. தமிழ்நாடு 5.4 மில்லியன் எம்.எஸ்.எம்.இ-கள் கொண்டுள்ளது.
கடந்த ஆண்டு உத்தரபிரதேசத்தில் எம்.எஸ்.எம்.இ தொடர்பான வேலைவாய்ப்புகள் 60.8 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
அதே நேரத்தில், முதல் 10 இடங்களில் ஏற்பட்டுள்ள மாற்றம், தொழிற்சாலை வளர்ச்சி என்பது பாரம்பரிய மையங்களோடு நின்றுவிடவில்லை என்பதை உணர்த்துகிறது. தெலுங்கானா மற்றும் அரியானா இந்த பட்டியலில் முன்னிலை பெற்றிருப்பது சிறு தொழில் வளர்ச்சியில் இந்த மாநிலங்கள் வளர்ந்து வருவதை காட்டுகிறது.
இந்தியா 5 லட்சம் கோடி டாலர் பொருளாதாரத்தை நோக்கி முன்னேறி வரும் நிலையில், மாறி வரும் தொழிற்சாலைகளை பரப்பு, எம்.எஸ்.எம்.இ-களுக்கான வரைவை உணர்த்துகிறது. வேகமாக வளர்ந்து, தொழிற்சாலைகள் பரப்பிற்குள் இணைந்து, உற்பத்தி சார்ந்த வளர்ச்சியை நாடும் மாநிலங்கள் மூலம் அதிக பலன் பெறுவதாக இது அமைகிறது.
தொகுப்பு: சைபர் சிம்மன்
Edited by Induja Raghunathan