கல்வி அமைச்சகம் வெளியிட்ட தேசிய கல்வி நிறுவனங்கள் தரவரிசை (NIRF) 2025-ல், 'என்ஜினியரிங்' (Engineering) பிரிவில் 10-வது ஆண்டாக தொடர்ச்சியாக முதல் இடத்தை கைப்பற்றியுள்ளது ஐஐடி மெட்ராஸ்.
அதேபோல், மொத்த கல்வி நிறுவனங்களுக்கான (Overall) தரவரிசையிலும் 7-வது ஆண்டாக முதலிடத்தை உறுதிப்படுத்தியுள்ளது. இது கடந்த ஆண்டில் இதே தரவரிசையில் இரண்டாம் இடத்தில் இருந்த நிலையில், இப்போது முன்னேறியுள்ளது.
‘புதிய முயற்சிகள்’ (முன்னதாக Atal Ranking of Institutions on Innovation Achievements என அழைக்கப்பட்டது) என்ற பிரிவில், ஐஐடி மெட்ராஸ் இந்தாண்டு நம்பர் 1 இடத்தைப் பெற்றுள்ளது. சமீபத்தில், ஆழ்ந்த தொழில்நுட்பத்தின் அடிப்படையில் உலகத் தரமான புதிய தொழில் நிறுவனங்களை உருவாக்கும் நோக்குடன் உலகத் தரமான சூழலை உருவாக்க, ஐஐடி மெட்ராஸ் School of Innovation and Entrepreneurship என்ற புதிய பள்ளியை தொடங்கியுள்ளது. இந்த முயற்சியின் மூலம் உலகளாவிய தொழில்துறைகள் சார்ந்த பல்கலைக்கழகங்களின் வரைபடத்தில் இடம் பெறும்.
‘ஆராய்ச்சி நிறுவனங்கள்’ பிரிவில், ஐஐடி மெட்ராஸ் கடந்த ஆண்டு 2வது இடத்தைப் பிடித்தது, பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனத்திற்கு முதலிடத்தில் உள்ளது.
இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ‘நிலைத்தன்மை மேம்பாட்டு இலக்குகள்’ (SDG-Sustainability Development Goals) பிரிவில் ஐஐடி மெட்ராஸ் நம்பர் 1 இடத்தைப் பிடித்தது குறிப்பிடத்தக்கது. இந்தத் துறையில் செய்யப்படும் முன்மாதிரியான பணிகளை மேலும் ஊக்குவிக்க, ஐஐடி மெட்ராஸ் அக்டோபர் 2023ல் நிலைத்தன்மை மேம்பாட்டிற்கான பள்ளியை தொடங்கியது.
மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், NIRF 2025 தரவரிசைகளை வெளியிட்டார். அவர் பேசும்போது,
“இந்திய உயர்கல்வி துறையின் வளர்ச்சியின் சின்னமாக இந்த தரவரிசைகள் இருக்கின்றன. தரத்திற்கும், பொறுப்புக்கும் இவை வழிகாட்டி. 2014–15 ஆம் ஆண்டில், இந்தியாவில் உயர்கல்வியில் 3.5 கோடிக்கும் குறைவான மாணவர்கள் இருந்தனர்; இன்று, இந்த எண்ணிக்கை 4.5 கோடியைத் தாண்டியுள்ளது. 2030 ஆம் ஆண்டுக்குள், 9 கோடி மாணவர்களை அடைவதே எங்கள் நோக்கம், மேலும் தேசிய கல்விக் கொள்கை இந்த லட்சிய இலக்கை அடைய பல வழிகளை வழங்குகிறது. இந்தப் பயணத்தில் தரம் மற்றும் பொறுப்புணர்வை உறுதி செய்வதில் நிறுவனங்களின் தரவரிசை மற்றும் அங்கீகாரம் ஆகியவை ஒரு படிக்கட்டாக இருக்கும்,” என்று கூறினார்.
ஐஐடி மெட்ராஸ் இயக்குநர் வி. காமகோடி, “இதுபோன்ற தொடர்ச்சியான வெற்றிக்கு, மாணவர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் மற்றும் நிர்வாக ஊழியர்கள் ஒட்டுமொத்தமாக பணியாற்றியதின் பலனாகும். Viksit Bharat@2047 நோக்கில் நாம் தொடர்ந்து பணியாற்றுவோம்,” என்று கூறினார்.
ஐஐடி மெட்ராஸின் முக்கியச் சாதனைகள்:
- பொறியியல் பிரிவில் தொடக்கம் முதல் (2016 முதல்) முதல் இடம் – 10 ஆண்டுகள் தொடர் சாதனை
- மொத்த தரவரிசையில் – 7-வது ஆண்டு முதல் இடம்
- புதுமை மற்றும் தொழில் முயற்சி (Innovations) பிரிவில் நம்பர் 1 (கடந்த ஆண்டில் 2-ம் இடம்)
- புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட SDG (நிலைத்தன்மை மேம்பாட்டு இலக்குகள்) பிரிவிலும் நம்பர் 1
- ஆராய்ச்சி நிறுவனங்கள் பிரிவில் நம்பர் 2 (IISc நம்பர் 1).
விருது பெற்றவர்கள்:
பேராசிரியர் வி. கமகோட்டி, இயக்குநர், IIT மெட்ராஸ்
பேராசிரியர் ஆர். சாரதி, திட்டமிடல் துறை டீன்
பேராசிரியர் ரஜ்னீஷ் குமார், தரவரிசை குழு தலைவர்
ஐஐடி-யின் சிறப்புகள்:
IIT மெட்ராஸ் – முதல் IIT வெளிநாட்டு வளாகத்தைத் துவக்கியது (IITM Zanzibar)
‘Sports Excellence Admission’ மற்றும் Fine Arts and Cultural Excellence (FACE) திட்டம் அறிமுகம்
2024–25ஆம் ஆண்டில் 100+ ஸ்டார்ட்-அப்கள் உருவாக்கம்
417 காப்புரிமைகள் பதிவு – ‘ஒரு நாள் – ஒரு காப்புரிமை’ இலக்கை அடைந்தது.
ஊக்குவிப்புத் துறையை வலுப்படுத்த ‘School of Innovation and Entrepreneurship’ துவக்கம் – ஆகஸ்ட் 2025.