+

Gold Rate Chennai: மீண்டும், மீண்டும் ஷாக் - ரூ.79,000-த்தை தொட்டு அதிர்ச்சியை தந்துள்ள தங்கம் விலை!

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவில் மீண்டும் வீழ்ச்சி கண்டதன் எதிரொலியாக, ஆபரணத் தங்கம் விலையும் இன்று வெகுவாக அதிகரித்தது.

அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக, ஆபரணத் தங்கம் சவரன் விலை ரூ.79,000-ஐ நெருங்கி புதிய உச்சம் கண்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்னும் விண்ணை முட்டுமோ என்ற அச்சம் அதிகரித்துள்ளது.

சென்னையில் வியாழக்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.10 குறைந்து ரூ.9,795 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.80 குறைந்து ரூ.78,360 ஆகவும் இருந்தது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.11 குறைந்து ரூ.10,686 ஆகவும், சவரன் விலை ரூ.88 குறைந்து ரூ.85,488 ஆகவும் விற்பனை ஆனது.

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவில் மீண்டும் வீழ்ச்சி கண்டதன் எதிரொலியாக, ஆபரணத் தங்கம் விலையும் இன்று வெகுவாக அதிகரித்தது. தற்போது சவரன் விலை ரூ.79,000-ஐ தொடுவதால் சுப காரியங்களுக்கு மட்டும் அவசரம் எனில் நகை வாங்கலாம். முதலீடு என்று வரும்போது தனிப்பட்ட ஆலோசனை அவசியம் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள். வெள்ளி விலை இன்று சற்றே குறைந்தது.

தங்கம் விலை நிலவரம் - வெள்ளிக்கிழமை (5.9.2025):

சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.60 உயர்ந்து ரூ.9,865 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.560 உயர்ந்து ரூ.78,920 ஆகவும் இருக்கிறது. அதேபோல், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.76 உயர்ந்து ரூ.10,762 ஆகவும், சவரன் விலை ரூ.608 உயர்ந்து ரூ.86,096 ஆகவும் விற்பனை ஆகிறது.
gold rate today

வெள்ளி விலை:

சென்னையில் இன்று (5.9.2025) 1 கிராம் வெள்ளி விலை ரூ.1 குறைந்து ரூ.136 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.1,000 குறைந்து ரூ.1,36,000 ஆகவும் விற்பனை ஆகிறது.


தங்கம் விலை குறைவு ஏன்?

சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.88.33 என்ற அளவில் கடும் வீழ்ச்சியில் இருக்கிறது. பங்குச் சந்தை வர்த்தகமும் தடுமாறத் தொடங்கியதால் தங்கத்தின் மீதான முதலீடும் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது. இதனால், ஆபரணத் தங்கம் விலை புதிய உச்சத்தை எட்டியது.

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.9,865 (ரூ.60 உயர்வு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.78,920 (ரூ.560 உயர்வு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.10,762 (ரூ.76 உயர்வு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.86,096 (ரூ.608 உயர்வு)

தங்கம் விலை @ மும்பை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.9,865 (ரூ.60 உயர்வு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.78,920 (ரூ.560 உயர்வு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.10,762 (ரூ.76 உயர்வு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.86,096 (ரூ.608 உயர்வு)


Edited by Induja Raghunathan

facebook twitter