+

Gold Rate Chennai: தங்கம் விலை அதிரடியாக ஒரே நாளில் ரூ.1,040 சரிவு!

ஆபரணத் தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.1,040 குறைந்தது. தற்போது சவரன் விலை ரூ.1,12,840 ஆக உள்ளது. வெள்ளி விலையும் இன்று வெகுவாக குறைந்தது.

கடந்த சில தினங்களாக உயர்ந்து வந்த ஆபரணத் தங்கம் விலை இன்று வெகுவாக குறைந்துள்ளது, நகை வாங்க விழைவோருக்கு நிம்மதி தந்துள்ளது.

சென்னையில் திங்கள்கிழமை சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.30 உயர்ந்து ரூ.14,230 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.240 உயர்ந்து ரூ.1,13,840 ஆகவும் இருந்தது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.33 உயர்ந்து ரூ.15,524 ஆகவும், சவரன் விலை ரூ.264 உயர்ந்து ரூ.1,24,192 ஆகவும் விற்பனை ஆனது.

ஆபரணத் தங்கம் விலை இன்று ஒரே நாளில் ரூ.1,040 குறைந்தது. தற்போது சவரன் விலை ரூ.1,12,840 ஆக உள்ளது. வெள்ளி விலையும் இன்று வெகுவாக குறைந்தது. தற்போதைய சூழலில், சுப காரியங்களுக்கு தாராளமாக நகை வாங்கலாம். ஆனால், முதலீடு என்று வரும்போது உங்களின் நிதிச் சூழலைப் பொறுத்து, தனிப்பட்ட ஆலோசனை பெறுவது அவசியம் என்கின்றனர் வர்த்தக நிபுணர்கள்.

தங்கம் விலை நிலவரம் - செவ்வாய்க்கிழமை (28.4.2026):

சென்னையில் இன்று சில்லரை விற்பனைச் சந்தையில் 22 காரட் தங்கம் 1 கிராமின் விலை ரூ.130 குறைந்து ரூ.14,100 ஆகவும், ஒரு சவரன் விலை ரூ.1,040 குறைந்து ரூ.1,12,800 ஆகவும் இருக்கிறது. அதேவேளையில், 24 காரட் சுத்தத் தங்கம் 1 கிராம் விலை ரூ.142 குறைந்து ரூ.15,382 ஆகவும், சவரன் விலை ரூ.1,136 குறைந்து ரூ.1,23,056 ஆகவும் விற்பனை ஆகிறது.
gold rate today

வெள்ளி விலை:

சென்னையில் இன்று (28.4.2026) 1 கிராம் வெள்ளி விலை ரூ.5 குறைந்து ரூ.265 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.5,000 குறைந்து ரூ.2,65,000 ஆகவும் விற்பனை ஆகிறது.

தங்கம் விலை குறைவு ஏன்?

சர்வதேச பொருளாதார சூழல், ரூபாய் - டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளால் தங்கம் விலையில் மாற்றம் ஏற்படுகிறது. குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு வீழ்ச்சி காணும்போதெல்லாம் தங்கம் விலை உயரும். தற்போது, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ.94.40 ஆக வீழ்ச்சி கண்டுள்ளது.

ஈரான் - அமெரிக்கா இடையிலான போர் நிறுத்தம் நீடித்துள்ளது. எனினும், இரு தரப்பிலும் இன்னும் அமைதி உடன்பாடு எட்டப்படவில்லை. தற்போது தங்கம் மீதான முதலீடு மீண்டும் குறையத் தொடங்கியதால், ஆபரணத் தங்கம் விலையும் குறைந்துள்ளது.

தங்கம் விலை @ சென்னை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,100 (ரூ.130 குறைவு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,12,800 (ரூ.1,040 குறைவு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.15,382 (ரூ.142 குறைவு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,23,056 (ரூ.1,136 குறைவு)

தங்கம் விலை @ மும்பை

> 22 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.14,100 (ரூ.130 குறைவு)

> 22 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,12,800 (ரூ.1,040 குறைவு)

> 24 காரட் தங்கம் 1 கிராம் - ரூ.15,382 (ரூ.142 குறைவு)

> 24 காரட் தங்கம் 8 கிராம் - ரூ.1,23,056 (ரூ.1,136 குறைவு)


Edited by Induja Raghunathan

facebook twitter